Followers

Sunday 1 October 2023

மளிகை கடை

 ஒருவர் முதலில் சிறியதாக 

*மளிகை கடை ஒன்றை ஆரம்பித்தார்*.

பின்பு ஜூவல்லரி ஷாப், ஹோட்டல், *துணிக்கடை, டிபார்ட்மென்டல் ஸ்டோர் என வளர்ந்தது.*

ஒருநாள் இரவு அவர் வீடு திரும்பியபோது மணி பன்னிரண்டைத்  தாண்டி இருந்தது.

*வழக்கமாக அவரை எதிர்கொண்டு அழைக்ககாத்திருக்கும் அவர் மனைவி அன்றைக்கு இல்லை.*

வீட்டுப் பணியாளர் தான் கதவை திறந்தார். அவர் முகக் *குறிப்பை* உணர்ந்து அந்தப் பணியாளர் சொன்னார்.

*ஐயா அம்மாவுக்கு திடீர்னு மயக்கம் வந்துடுச்சு ஹாஸ்பிடலுக்கு போய் ட்ரீட்மென்ட் எடுத்து விட்டு ஒரு மணி நேரத்திற்கு முன்னாடி தான் வந்தாங்க ரூம்ல தூங்குறாங்க.*

*ஏன் என்னாச்சு.?*

பிரஷர் என்று டாக்டர் சொல்லி இருக்காங்க. ஆனா பயப்படத் தேவை இல்லையாம். *மருந்து மாத்திரை சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்தா சரியா போயிடுமாம்.*

எனக்கு போன் பண்ணி சொல்ல *வேண்டியதுதானே.?*

நிறைய தடவை உங்க பெரிய பையன் போன் பண்ணினாராம். *ஸ்விட்ச்டு ஆஃப்னே  வந்துச்சாம்.*

அப்போதுதான் அவருக்கு ஒரு மீட்டிங்குக்காக இரவு எட்டு மணிக்கு.

 *தன் மொபைல் போனை சுவிட்ச் ஆஃப் செய்தது நினைவுக்கு வந்தது.*

அவர் தன் மனைவி படுத்திருந்த அறைக்குள் அவசரமாக நுழைந்தார். 

*அங்கு அவர் மனைவி ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்*.

அவர் மனைவியின் தலையை வருடிக் கொண்டிருந்தார். 

*சே இவளை கவனிக்காமல் விட்டு விட்டோமே என்கிற வருத்தம் எழுந்தது.*

அவர்களுக்கு திருமணமாகி 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. *குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்ந்து இருந்த நாட்கள் எல்லாம் நினைவுக்கு கொண்டு வர முயன்றார்.*

அவர் நினைவுக்கு வந்தது மிக மிகச் சொற்ப தினங்களே.

*தன் மனைவியின் பக்கத்தில் இப்படி நெருக்கமாக அமர்ந்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. என்பதை நினைத்ததும் அவருக்கு திடுக் கென்று இருந்தது.*

அறையை விட்டு வெளியே வந்தார் அடுத்த அறை கதவை திறந்து பார்த்தார். 

*இரு மகன்களும் படுக்கையில் படுத்து இருந்தார்கள்.*

சத்தம் இல்லாமல் கதவை மூடினார். *மாடியிலிருந்த தன் தனியறைக்கு போவதற்காக படிகளில் ஏறினார்.*

*ஐயா* சாப்பிட ஏதாவது வேணுமா.? *பணியால் கேட்டான்.*

வேண்டாம் என்று சொல்லிவிட்டு. 

*அவர் தன் அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டார்.*

உடையை மாற்றிக் கொண்டு கட்டிலில் அமர்ந்தார். *இவ்வளவு சம்பாதித்து என்ன பிரயோஜனம் நாம் யாருக்காக வாழ வேண்டும்*.

பிள்ளைகள் மனைவி இவர்களோடு கூட நேரத்தை செலவழிக்க முடியாமல். 

*அப்படி என்ன பிசினஸ் என்னென்னவோயோசனை வந்தது.*

கடைசியில் அவர் ஒரு முடிவுக்கு வந்தார். இன்றுதான் கடைசி. 

இன்றோடு பிசினஸில் இருந்து ஓய்வு பெற்று விடவேண்டும். *இனிமேல் வாழவேண்டும் எனக்காக என் மனைவிக்காக என் குடும்பத்திற்காக.*

அப்போதுதான் கட்டிலுக்கு அருகில் இருந்த நாற்காலியில் யாரோ உட்கார்ந்து இருப்பது அவருக்கு தெரிந்தது. 

*கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு தானே வந்தோம் இது யார் எப்படி உள்ளே வந்தார்..?*

யார் நீங்க எப்படி உள்ளே வந்தீங்க.? *என்று கேட்டார்*.

அந்த உருவம் சொன்னது நான் மரண தேவதை. *உன்னை அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன்*.

*அவர் திடுக்கிட்டுப் போனார்.*

*அய்யாசாமி* நான் இப்போதுதான் வாழணும்னு முடிவு செஞ்சிருக்கேன். *இப்போ போய் என்னை கூட்டிட்டு போக வந்து இருக்கீங்களே கொஞ்சம் அவகாசம் கொடுங்க.*

அவர் எவ்வளவோ பேசி மன்றாடிப் பார்த்தார். தன் *செல்வத்தை* *எல்லாம் கொடுப்பதாக சொல்லிப் பார்த்தார்*.

மரண தேவதை அவருக்கு செவிசாய்க்க மறுத்தது. *அங்கிருந்து நகராமல் அவரை அழைத்துச் செல்ல ஆணி அடித்ததுபோல் அப்படியே உட்கார்ந்து இருந்தது.*

ஒரே ஒரு மணி நேரம் மட்டும் அவகாசம் கொடுங்க ஐயா. 

*என் மனைவி குழந்தைகளுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கு.*

*அதை முடித்துவிடுவேன்.என்று கேட்டார்.*

அதற்கும் மரண தேவதை ஒப்புக்கொள்ளவில்லை. 

அவர் கெஞ்சி அழும் குரலில் கேட்டார். 

*சரி ஒரே ஒரு நிமிஷமாவது கொடுப்பீர்களா உலகத்திற்கு நான் ஒரு குறிப்பு எழுதனும்.*

மரண தேவதை ஒப்புக்கொண்டது.

*அவர் இப்படி எழுதினார்.*

உங்களுக்கான நேரத்தை. 

*சரியான வழியில் செலவழித்து விடுங்கள்.*

என்னுடைய அனைத்து சொத்துக்களை ஈடாக கொடுத்தாலும் கூட.

 *எனக்காக ஒரு மணி நேரத்தை என்னால் வாங்க முடியவில்லை.*

இது ஒரு பாடம் எனவே உங்கள் வாழ்க்கையில் *ஒவ்வொரு நிமிடத்தையும் வீணடித்து விடாமல் அனுபவித்து வாழ்ந்து விடுங்கள்.*

அப்போது யாரோ கதவை பலமாக தட்டும் சத்தம் கேட்டது. 

*அவர் திடுக்கிட்டு கண் விழித்தார்.*

விடிந்து வெகுநேரம் மாகிவிட்டிருந்தது. அவர் எழுந்து போய் கதவை திறந்தார். *பணியால் தான் வெளியே நின்று கொண்டிருந்தார்.*

*ஐயா* ரொம்ப நேரமா கதவைத் தட்டுறேங்க நீங்க திறக்கலையா. *பயந்துட்டேன் அதான் கொஞ்சம் பலமாக தட்டினேன்.*

அவர் அவசரமாக திரும்பி தன் பெட்டுக்கு அருகில் இருக்கும் *மேஜையை பார்த்தார்.*

அங்கே அவர் எழுதிய குறிப்பு இல்லை. 

*பேனாவும் எழுதப்படாத வெள்ளைத்தாளும் தான் இருந்தன*...

லட்சுமி கடாட்சம்

 பெரும் பணக்காரரான ஒரு வியாபாரியின் வீட்டில். செல்வத்திற்கு பஞ்சமில்லை. எல்லா செல்வமும் அவர் வீட்டில் கொட்டி கிடந்தது. ஒருநாள் அந்த வியாபாரியின் கனவில் தோன்றிய மகாலட்சுமி, ‘பக்தனே! நீயும் உன் முன்னோர்களும் செய்துள்ள புண்ணியங்களின் காரணமாகவே இது வரை நான் உன் வீட்டிலேயே தங்கியிருந்தேன். நீ செய்த புண்ணியம் அனைத்தும் தற்போது தீர்ந்து விட்டது.

எனவே இன்னும் ஓரிரு நாளில் உன் வீட்டை விட்டு வெளியேற உள்ளேன். அதற்கு முன் உனக்கு ஏதாவது வரம் வேண்டும் என்றால் கேட்டுப் பெற்றுக்கொள். ஆனால் என்னை இங்கேயே தங்கியிருக்கக் கேட்கக் கூடாது’ என்றாள்.

மறுநாள் பொழுது விடிந்தது. வியாபாரி வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து கனவில் நடந்தவற்றைக் கூறினார். மகாலட்சுமியிடம் என்ன வரம் கேட்கலாம் என்று அவர் தம் குடும்பத்தினரிடம் ஆலோசனை கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஆலோசனை கூறினர்.

ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே கருத்தையே வெளிப்படுத்தினர். ‘நவ ரத்தினங்களை வரமாக கேளுங்கள்; ஏராளமான பொற்குவியல்களை கேளுங்கள்; நிறைய உணவு பொருட்களை கேளுங்கள்; மாட மாளிகைகள் பலவற்றை கேளுங்கள்’ என்று அடுக்கிக் கொண்டே போனார்கள்.

அப்போது அந்த வீட்டின் கடைசி பெண் தன் தந்தையிடம், ‘அப்பா நமக்கு தேவையான பொன், வைரம், வைடூரியம், மாணிக்கம், வீடு என எவற்றை வரமாக கேட்டு வாங்கினாலும், அது நம் வீட்டில் நிலைக்கப் போவதில்லை. ஏனெனில் எப்போது நம் வீட்டில் இருந்து மகாலட்சுமி தேவி வெளியேறப் போகிறேன் என்று எப்போது கூறி விட்டாளோ, அவள் வெளியேறியவுடன் அவளது ஐஸ்வரியம் பொருந்திய இந்த பொருட்களும் வெளியேறி விடும், அல்லது நிலைக்காமல் போய்விடும்.

எனவே எப்போதும் எங்கள் வீட்டில் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்கும்படி வரம் அருளுங்கள் என்று மகாலட்சுமி தேவியை கேளுங்கள்’ என்று கூறினாள்.

இளைய மகள் கூறியதே சரி என்று வியாபாரிக்கு தோன்றியது. அதையே இறுதி முடிவாகக் கொண்டு, இரவு தூங்கச் சென்றார் வியாபாரி.

அன்றைய தினம் இரவில், அவர் கனவில் மகாலட்சுமி தோன்றினாள். அவளிடம், ‘அன்னையே! எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் எப்போதும் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்க வேண்டும். இதுவே நான் உன்னிடம் கேட்கும் வரம். இந்த வரத்தை மட்டும் தாங்கள் அருளினால் போதுமானது’ என்று வியாபாரி கேட்டார்.

லட்சுமிதேவி சிரித்தபடி ‘மகனே! இப்படி ஒரு வரத்தைக் கேட்டு மீண்டும் உன் வீட்டிலேயே என்னை கட்டிப்போட்டு விட்டாய். எந்த குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி வாழ்கிறார்களோ, எந்த குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இல்லையோ, அந்த வீட்டில் நிச்சயமாக நான் இருந்தே தீருவது என்று முடிவு எடுத்துள்ளேன். எனவே நீ கேட்ட இந்த வரத்தால் மீண்டும் நான் உன் வீட்டிலேயே தங்கி இருந்து விடுகிறேன்’ என்று கூறி அங்கேயே தங்கிவிட்டாள்.

*‘எந்த வீட்டில் குடும்பத்து பெரியவர்களை, மதித்து வழிபடுகிறார்களோ, எங்கு நாகரீகமான முறையில் மற்றவர்களுடன் மரியாதையோடு பழகுகிறார்களோ, பிறருடைய செய்கையால் மனதில் கோபம் ஏற்பட்டாலும் எவர் தங்கள் வாயால் சண்டை செய்யாமல் இருக்கிறார்களோ அந்த இடங்களில் எல்லாம் நான் வசிக்கிறேன்’ என்று இந்திரனிடம் ஒருமுறை லட்சுமி கூறியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது. ஆகையால் லட்சுமி கடாட்சம் பெற விரும்புபவர்கள் சண்டை போடுவதைத் தவிருங்கள்.*

ஒரு ஜோடி காலணி

 ஒரு தபால்காரர், "கடிதம்" என்று ஒரு வீட்டின் கதவைத் தட்டினார்.

 “வருகிறேன்” என்று உள்ளிருந்து குழந்தை போன்ற குரல் கேட்டது.

 ஆனால், நபர் வரவில்லை;  மூன்று அல்லது நான்கு நிமிடங்கள் கழிந்தன.

 இறுதியாக, கோபமடைந்த தபால்காரர், "ஏய், சீக்கிரம் வந்து கடிதத்தை எடுத்துக்கொள்.

 மீண்டும் குழந்தை போன்ற குரல், "ஐயா, கடிதத்தை கதவுக்கு அடியில் வைக்கவும்; நான் வருகிறேன்" என்றது.

 தபால்காரர், "இது ஒரு பதிவு செய்யப்பட்ட கடிதம், அதற்கு ஒப்புதல் தேவை, எனவே நீங்கள் கையெழுத்திட வேண்டும்" என்றார்.

 *பத்து நிமிடங்களுக்குப் பிறகு, கதவு திறந்ததும், எரிச்சலடைந்த தபால்காரர் வாயடைத்தார்!*

 *கடிதத்தை எடுக்க கால் இல்லாத ஒரு சிறுமி அவன் முன் மண்டியிட்டாள்.*

 தபால்காரர் கடிதத்தை அமைதியாக கொடுத்துவிட்டு வருத்தத்துடன் திரும்பிச் சென்றார்.

 இப்படியே நாட்கள் சென்றது.

 தபால்காரர் சிறுமியின் வீட்டிற்கு கடிதம் அனுப்பும் போதெல்லாம் கதவு திறக்கும் வரை காத்திருப்பது வழக்கம்.

 தீபாவளி நெருங்கிக் கொண்டிருந்தது, தபால்காரர் எப்போதும் வெறுங்காலுடன் இருப்பதை அந்தப் பெண் கவனித்தாள்.

 எனவே, ஒருமுறை தபால்காரர் கடிதம் வழங்க வந்தபோது, ​​​​அந்தப் பெண் அமைதியாக தரையில் உள்ள கால்தடங்களில் இருந்து தபால்காரரின் கால் அளவை அளந்தார்.

 தீபாவளிக்கு முன்பு, அந்த பெண் அவரிடம், *"மாமா, இது தீபாவளியன்று உங்களுக்கு நான் கொடுத்த பரிசு" என்று சொன்னாள்.

 தபால்காரர், *"நீ எனக்கு மகள் போன்றவள்; உன்னிடம் இருந்து நான் எப்படி பரிசு வாங்க முடியும்?"* என்றார்.

 சிறுமி வற்புறுத்தியதால், தபால்காரர் வீட்டிற்கு எடுத்துச் சென்று பாக்கெட்டைத் திறந்தார்.

 அவர் ஒரு ஜோடி காலணிகளைப் பார்த்தபோது அவரது கண்கள் கண்ணீர் நிரம்பியது, ஏனெனில் அவரது முழு சேவையின் போதும், அவர் வெறுங்காலுடன் இருப்பதை யாரும் கவனிக்கவில்லை.

 அடுத்த நாள், தபால்காரர் தனது தபால் நிலையத்தை அடைந்து, *அவரை உடனடியாக வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும்* என்று தபால் அதிகாரியிடம் கெஞ்சினார்.

 போஸ்ட் மாஸ்டர் காரணம் கேட்டதும், எல்லாத்தையும் சொல்லி, கண்ணீருடன்,

 *"ஐயா, இன்னைக்கு அப்புறம் அந்தத் தெருவுக்குப் போக முடியாது. அந்தச் சிறுமி என்னை வெறுங்காலுடன் பார்த்துக் காலணியைக் கொடுத்தாள்; நான் எப்படி அவளுக்குக் கால் கொடுப்பேன்?"*

 ++++++++

 *மற்றவர்களின் வலி, அனுபவங்கள் மற்றும் அவர்கள

பசுமரத்தாணி

 பார்வையற்ற இளைஞன் ஒருவனை சிலர் புத்தரிடம் அழைத்து வந்தனர்.

அவர்கள், “இந்த இளைஞன் வெளிச்சத்தைப் பற்றி எவ்வளவு சொன்னாலும் நம்ப மறுக்கிறான்” என்று கூறினர்.

அப்போது பார்வையற்ற இளைஞன், “வெளிச்சத்தை நான் தொட்டுப் பார்க்க வேண்டும். சுவைத்துப் பார்க்க வேண்டும்.

அதன் வாசனையையோ அல்லது ஓசையையோ நான் உணர வேண்டும். இவை எதுவும் இல்லாத வெளிச்சம் என்ற ஒன்று இருப்பதை நான் எப்படி ஒப்புக் கொள்ள முடியும்?” என்றான்.

அவனுடன் வந்தவர்கள் புத்தரிடம், “நீங்கள் தான் வெளிச்சம் உண்டு என்பதை அவன் நம்பும்படி செய்ய வேண்டும்” என்று கூறினர்.

அதற்கு புத்தர், “அவன் உணர முடியாத ஒன்றை அவனை நம்ப வைக்கும் செயலை நான் செய்ய மாட்டேன்.

இப்போது அவனுக்கு தேவை பார்வை. வெளிச்சம் பற்றிய விளக்கமல்ல. அவனுக்கு பார்வை வந்து விட்டால், விளக்கம் தேவைப்படாது.

அவனைத் தகுந்த மருத்துவரிடம் அழைத்துச் சென்று பார்வை கிடைக்கச் செய்யுங்கள்” என்று கூறி அனுப்பினார்.

புத்தர் கூறியதை ஏற்று பார்வையற்ற இளைஞனை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். சிகிச்சை முலம் அவனுக்கு பார்வையும் கிடைத்தது.

உடனே அந்த இளைஞன் புத்தரிடம் ஓடி வந்து, “வெளிச்சம் இருக்கிறது” என்று கூறினான்.

உடனே புத்தர், “வெளிச்சம் இருக்கிறது என்று அவர்கள் கூறிய போது ஏன் நம்ப மறுத்து விட்டாய்?” என்று கேட்டார்.

அதற்கு அந்த இளைஞன்,

“கண் தெரியாத என்னால், எவ்வாறு வெளிச்சத்தை உணர முடியும்? அவர்கள் சொன்னதை அப்படியே நான் ஏற்றுக் கொண்டிருந்தால், இன்னும் நான் கண் தெரியாதவனாகவே இருந்திருப்பேன்” என்றான்.

அனுபவத்தால் உணர வேண்டிய ஒன்றை ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது என்பதை புத்தர் இந்த நிகழ்ச்சியின் முலம் சீடர்களுக்கு புரிய வைத்தார்.

ஆம்..

"அனுபவமே சிறந்த ஆசான்!" அனுபவமே ஒரு மனிதனுக்கு நல்ல பாடத்தைக் கற்றுத்தரும்.

எங்கு வேலை பார்த்தாலும் அதை வேலையாகக் கருதாமல், அதை ஒரு அனுபவமாக தெரிந்து கொள்ளக்கூடிய ஓரு வாய்ப்பாக நினைத்து, அதில் ஈடுபாடு காட்ட வேண்டும்.

இந்த அனுபவப் பாடம்தான் மனிதர்கள் உயர்வதற்கான தாரக மந்திரம் ''நெருப்பு சுடும் என்பதும், நீர் குளிரும்" என்பதும் நம் அனுபவங்கள் மூலமாகக் கற்றுக் கொண்டவைதானே.

பக்கம் பக்கமாகப் படித்த பாடங்கள் மறந்து போகலாம்.

ஆனால், பசுமரத்தாணிபோல மனதில் படிந்த அனுபவங்கள் மறக்காது.

0 comments


காது கேட்காது!

 ஒரு செல்வந்த முதலாளியின் வீட்டில் ஒருவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். முதலாளி தினமும் வீட்டுக்கு வரும் போது ஓடோடிச் சென்று வீதிக்கதவை திறந்து அவருக்கு வணக்கம் சொல்வது அவனது வழக்கம். ஆனாலும் ஒரு நாளேனும் அந்த முதலாளி பதில் கூறியதும் கிடையாது; காவலாளி முகத்தை ஏறெடுத்து பார்ப்பதும் கிடையாது.

ஒரு நாள் பசியோடிருந்த அந்தக் காவலாளி வீட்டுக்கு வெளியே உள்ள குப்பத்தொட்டியில் வீசப்பட்ட உணவுகள் ஏதும் இருந்தால் எடுத்து சாப்பிடுவோம் என குப்பத்தொட்டியை கிளரும் போது முதலாளி அதனைக் கண்டார். ஆனாலும் வழக்கம் போல எதையுமே கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டார்.

அடுத்த நாள் அதே இடத்தில் காவலாளி உணவைத் தேடும் போது புதிதாக தயாரிக்கப்பட்ட சுத்தமான உணவுகள் ஒரு பையினுள் காணப்பட்டது. காவலாளி சந்தோஷத்தில் எங்கிருந்து வந்தது என்றெல்லாம் பார்க்காமல் எடுத்துச் சென்றான்.

இவ்வாறே தினமும் அதே இடத்தில் ஒரு பையிருக்கும், அந்த பை நிறைய உணவுப்பொருட்கள் இருக்கும். அவனும் அதை தவறாமல் எடுத்து தன் மனைவி, குழந்தைகளுக்கு கொடுத்து வந்தான். இருந்தாலும் எந்த முட்டாள் இப்படி தினமும் பொருட்களை வாங்கி இங்கே விட்டுச் செல்கிறான் என மனதுக்குள் ஒரு நகைப்புடன் கூடிய கேள்வியும் வேற.

திடிரென ஒரு நாள் முதலாளி இறந்துவிட்டார். வீடு நிறைய முதலாளியின் உறவினர்களும், நண்பர்களும் வந்தனர். அன்று அதே இடத்தில் உணவுப்பொதியை தேடினான். உணவு இருக்கவில்லை. ஒரு வேளை பார்க்க வந்தவர் யாரேனும் எடுத்திருக்க முடியும் என நினைத்து விட்டுவிட்டான். இரண்டாம் நாள் பார்க்கிறான், அந்த இடத்தில் உணவுப்பை இல்லை; மூன்றாம் நாள், நான்காம் நாள் என பார்க்கிறான். உணவுப்பை இருக்கவில்லை.

இப்படியே சென்றதால் அந்தக் காவலாளிக்கு தன் குடும்பத்துக்கு உணவளிக்க பெரும் சிரமமாய் போயிற்று. உடனே தனது முதலாளியம்மாவிடம் போய் சம்பளத்தை உயர்த்தவும் இல்லையாயின் வேலையை விட்டு விடுவதாகவும் கூறினான். அதற்கு முதலாளியம்மா மறுத்துவிட்டார்.

வேறு வழியில்லாமல் வீதியோரம் எடுக்கும் உணவுப்பை கதையையும், அது இல்லாததால் தன் குடும்பம் படும் அவஸ்தையையும் சொன்னான். உடனே முதலாளியம்மா கேட்டார்; எப்போதிலிருந்து உணவுப் பை இல்லாமல் போனதென்று. அதற்கு அவனும் முதலாளி இறந்த நாளிலிருந்து என சொன்னதும், முதலாளியம்மா ‘ஓ’ என அழத்தொடங்கினார். இதனைப் பார்த்து கவலையடைந்த காவலாளி சம்பள உயர்வு வேண்டாம், நான் இங்கேயே வேலை செய்கிறேன், அழுவதை நிறுத்துங்கள் என கூறினான்..

அதற்கு முதலாளியம்மா, நான் அதற்கு அழவில்லை. என் கணவர் தினமும் ஏழு பேருக்கு உணவளித்து வந்தார். அதில் ஆறு பேரை ஏற்கனவே இனம் கண்டுவிட்டேன். ஏழாம் நபரைத்தான் இத்தனை நாளாய் தேடிக்கொண்டிருந்தேன். ஏழாவது நபர் நீதான் என தெரிந்து கொண்டதும் சந்தோஷத்தில் அழுகிறேன் என்றாள்.

நான் தினமும் தவறாமல் வணக்கம் சொல்லியும் ஏறெடுத்தும் கூட பார்க்காத நம்ம முதலாளியா இப்படி நமக்கு உணவு தந்தார் என நம்பியும் நம்பாமலும் யோசித்தபடியே அவன் சென்றான்.

அடுத்த நாளிலிருந்து முதலாளியின் மகன் தினமும் காவலாளியின் வீடு தேடி வந்து உணவுப்பையை காவலாளியின் கையிலே கொடுத்துச் சென்றான். காவலாளி நன்றி சொல்லியும் முதலாளி மகன் அதற்கு பதில் சொல்லாமலே செல்வான், அவனது தந்தையைப் போல.

ஒரு நாள் இப்படித்தான் முதலாளியின் மகன் வீடு தேடிவந்து கையில் உணவுப்பையை கொடுக்கும் போது வழக்கம் போல நன்றி சொன்னான் காவலாளி. அதற்கு அங்கிருந்து எந்த பதிலும் இல்லை.

பொறுமையை இழந்த காவலாளி மிகவும் உரத்த குரலில் நன்றி சொன்னான். திரும்பிப்பார்த்த அந்த சிறுவன் “எனக்கும் என் தந்தையைப் போல் காது இரண்டும் கேட்காது” என்று சொல்லிவிட்டு திரும்பிப் போனான்.

நாமும் இவ்வாறு தான் அடுத்தவரது நிலைமைகள் புரியாது பார்த்த மாத்திரத்திலே அவர்களை தவறாக முடிவெடுத்துவிடுகிறோம். அடுத்தவரது

நடவடிகைகளுக்கு பின்னால் ஒளிந்துள்ள உண்மைத்தன்மையை அறியாமல்.......

வில் அம்பு

 ஒரு வேட்டை தொழில் செய்யும் அப்பா  

வில் அம்புகளை எடுத்து 

மகனையும் வேட்டைக்கு அழைத்து செல்ல தயாராகிக் கொண்டிருந்தார்.

வேட்டை என்றால் கண்ணில் படும் உயிர்களை எல்லாம் கொல்வது என்ற கிளுகிளுப்பு ஆளாகி இருந்தான் மகன்.

“அப்பா இதோ பாருங்க ஒரு குட்டிப்பல்லி. இத நான் மிதித்து விடவா”

“ச்சே ச்சே பாவம் அது குஞ்சுப்பா. சின்னது கொல்லக் கூடாது”

“அப்பா இதோ ஒரு சிலந்தி பாருங்க. இத நசுக்கிரவா”

“நல்லா பாரு இது குட்டி சிலந்தி. சிலந்தியோட பாப்பா. அத அழிக்க கூடாது”

வெளியே வந்தார்கள். காட்டை நோக்கி நடந்தார்கள்.

“அப்பா இங்க ஒரு நாகப்பாம்பு குஞ்சு ரெண்டு இருக்குது அது மேல கல்லை போடவா”

“வேண்டாம் அது குஞ்சுங்க. அதுல கல்லைப் போடக் கூடாது”

“அப்பா அதோ ஒரு கட்டுவீரியன் குஞ்சு இருக்குது அதையாவது அழிக்கவா. அது ரொம்ப விஷம்தானே”

“ஆனா குட்டியாச்சே. பாப்பாச்சே. அதை கொல்ல கூடாது”

“அப்பா அதோ ஒரு பறவை குஞ்சுகளுக்கு உணவு கொடுக்குது. மரத்து மேல ஏறி கூட்டை கலைச்சி குஞ்சுகளை பிடிக்கவா. பொரிச்சா ருசியா இருக்கும்”

“அடடா அது குஞ்சு ஆச்சே. பிறந்ததுங்க இருக்கும். அது கூட்டை கெடுக்க கூடாது”

“அதோ அப்பா அதோ மூணு மான்குட்டி நிக்குது. இளங்கறியா இருக்கும். எளிதா பிடிச்சிரலாம்”

“மகனே அது குட்டிடா. அத எப்படி அழிக்க முடியும்”

இப்போது மகன் சோர்வுற்றான். 

“என்னப்பா எதையெடுத்தாலும் குஞ்சு, குட்டி அழிக்காதே என்று சொல்றீங்க. அப்ப உங்க சட்டப்படி குஞ்சுகளை குட்டிகளை அழிக்க கூடாதா”

“அப்படி நான் சொல்லலியே மகனே. அழிக்கலாமே”

மகன் துள்ளி குதித்தான். 

“சொல்லுங்கப்பா நா எந்த குஞ்சை எந்த குட்டியை அழிக்கலாம்”

அப்பா சிரித்தார்.

அவர்கள் வேட்டைக்கு அன்று எதுவும் கிடைக்கவில்லை. மாலையில் சோர்வாக ஆற்றில் மீன் பிடித்து வீடு வந்தார்கள்.

அவர்கள் பக்கத்து குடிலின் வெளியே மான் தோல் இருந்தது. 

இவர்களைப் பார்த்ததும் பக்கத்து குடில் வேடன் வந்தார். தன் மகனுடன் வந்தார்.

“இந்தாங்க மான் மாமிசம். இன்று இந்த மானை என் மகனே வேட்டையாடினான். அவ்வளவு திறமை அவனுக்கு”என்றார்.

இதைக் கேட்ட மீன் பிடித்த வேடன் பக்கத்து குடில் மகனை மனமார பாராட்டினார். 

தன் அப்பா பக்கத்து குடிலில் இருக்கும் தன் வயதை ஒத்த இன்னொரு சிறுவனை பாராட்டுவது கண்டு இவன் மனம் குமைந்தான். இவனால் அதை ஏற்கமுடியவில்லை.

அப்படியே திணறி சுவர் பார்த்து நின்றிருந்தான்.

அப்பா அவன் தோளை தொட்டார்.

“ஏன் உன் முகம் வாடி இருக்கிறது”

“இல்லையே நான் சரியாகத்தான் இருக்கிறேன்”

“உன் நண்பன் வேட்டையில் சாதித்தது. நான் அவனை மனம் விட்டு பாராட்டியது உனக்கு ஒருமாதிரி இருக்கிறதா. உண்மையை சொல் சில உணர்வுகளை வாய்விட்டு சொன்னால் சரியாகிவிடும்.

“ஆம்” என்று மகன் தலையசைத்தான். 

”இன்று காலையில் இருந்து ஒவ்வொரு குட்டியாக, குஞ்சியாக நீ கொன்று விடவா கொன்றுவிடவா என்று கேட்டாய். நான் கொடிய விஷமாக மாறக்கூடிய குட்டி நாகப்பாம்பை கூட தேவையில்லாமல் அழிக்காதே  என்றே சொன்னேன். 

ஆனால் இப்போது சொல்கிறேன் இந்த குட்டியை,  அழித்து விடு”

“எதை அப்பா” 

உன் மனதில் இப்போது பிறந்திருக்கும் பொறாமை என்ற குட்டியை உடனே கொன்று விடு. ஈவு இரக்கமில்லாமல் கொன்றுவிடு. அதனால் பிறந்த காழ்புணர்ச்சி என்ற குஞ்சை உடனே நசுக்கி விடு. ஈவு இரக்கம் பார்க்காதே. அம்மிருகங்கள் வளர்ந்தால் உன்னை அழித்து விடும்”

இப்போது மகனுக்கு குஞ்சிலே அழிக்க வேண்டிய பறவை எது. குட்டியிலேயே அழிக்க வேண்டிய மிருகம் எது என்று நன்றாக புரிந்து விட்டது.

வியர்வை வடியும் அப்பாவை அணைத்துக் கொண்டான்.

“அப்பா நான்  என் நண்பனை பாராட்டி வருகிறேன்” என்று பக்கத்து குடிலை நோக்கி சென்றான்.

Once upon a time,

 Once upon a time, in a lush green forest, there lived a monkey named Kapi. Kapi was known throughout the forest for his intelligence and his ability to solve complex problems. Other animals would often come to him for advice, and he would always come up with a solution that would benefit everyone.

One day, Kapi noticed that the fruits on the trees in the forest were dwindling in numbers. He realized that if the animals continued to consume the fruits at the same rate, soon there would be no fruits left for anyone. So, Kapi came up with a plan to solve this problem.

He called a meeting of all the animals in the forest and explained the situation to them. He proposed that they should only take the fruits they needed and leave the rest for others to consume. Initially, some animals were skeptical about the idea, but Kapi convinced them that it was the best solution.

As time went by, the animals started following Kapi’s plan, and the fruits on the trees began to grow back. The forest became a happy place again, and the animals lived in peace and harmony.

However, not everyone was happy with the new arrangement. There was a group of monkeys who were greedy and refused to follow Kapi’s plan. They continued to take more fruits than they needed, which caused a shortage for others.

Kapi knew he had to do something about this, so he came up with a new plan. He gathered a group of animals and trained them to shake the trees in such a way that only the ripe fruits would fall, and the unripe ones would remain on the branches. The greedy monkeys wouldn’t be able to distinguish between the ripe and unripe fruits and would have to leave the trees empty-handed.

The plan worked, and the greedy monkeys were left with no choice but to follow Kapi’s plan. They realized that their greed was causing harm to the entire forest and started cooperating with the other animals.

From that day on, Kapi’s intelligence and wisdom were highly respected by all the animals in the forest. They learned that it was essential to work together and follow a wise leader who had everyone’s best interest at heart.

Moral of the story

The moral of the story is that intelligence is not just about solving complex problems, but also about using that intelligence to benefit others. When we work together for a common goal, we can achieve great things and live in peace and harmony.

Conclusion

So, the story of the intelligent monkey, Kapi, teaches us that intelligence is not just about solving complex problems but also about using that intelligence to benefit others. When we work together for a common goal and follow wise leaders who have everyone’s best interest at heart, we can achieve great things and live in peace and harmony. Let us remember the valuable lessons from Kapi’s story and always strive to be wise, helpful, and cooperative like him. Who knows, maybe someday we’ll be as intelligent and respected as Kapi, the intelligent monkey!

0 comments

Greek King, Midas.

 Once upon a time, there was a Greek King, Midas.

He was very rich and had lots of Gold. He had a daughter, who he loved a lot.

One day, Midas found an angel in need of help. He helped her and in return she agreed to grant a wish.

Midas wished that everything he touched would turn into gold. His wish was granted

On his way home, he touched rocks and plants and they turned into gold.

As he reached home, in excitement he hugged his daughter, who turned into gold.

Midas was devastated and he had learnt his lesson. Upon learning his lesson, Midas asked the angel to take his wish away.

Moral of the story

Greed is not good for you. Be content and satisfied to lead a happy and fulfilling lif

*One Story, Two Perspectives*

 *One Story, Two Perspectives*

A famous book writer sat in his study. He took out his pen and began to write:

_“Last year, I had surgery to remove gallstones. I was bedridden for a long time"_

In the same year, *I turned 60 and was retired*… quitting a company that I loved so much. I had to leave the job I've been doing for 35 years. 

_That same year I was abandoned by my beloved mother who passed away_. 

*Then, still in the same year, my son failed his final medical exam because of a car accident.* _Repair costs from the car damage marked the peak of bad luck last year.”_

At the end he wrote:

*“What, what a bad year!"*

*The writer's wife entered the room* and found her husband who was sad and pensive. From behind, the wife saw the husband's writing. Slowly she backed away and left the room. 

15 minutes later she came back in and put down a piece of paper with the following words:

_“Last year, my husband finally managed to get rid of his gallbladder which had been making his stomach hurt for years._

_That same year, I am grateful that my husband was able to retire in a healthy and happy state of mind & body. I thank God he was given the opportunity to work and earn for 35 years to support our family._

_Now, my husband can spend more of his time writing, which has always been his hobby._

,*In the same year, my 95 year old mother-in-law, without any pain, returned to God in peace.* 

_And still in the same year, God protected our son from harm in a terrible car accident. Our car was seriously damaged by the accident, but my son survived without any serious injuries.”_

In the last sentence his wife wrote:

_“Last year was a year full of extraordinary blessings from God, and we spent it full of wonder and gratitude.”_

*The writer smiled with emotion, and warm tears flowed down his cheeks. He was grateful for a different point of view for every event he had gone through the past year. A different perspective of the same events now made him joyful.* 

_*Friends, in this life we ​​must understand that it is not happiness or joy that makes us grateful. It is *gratitude that makes us happy/joyful*!

 Let’s practise seeing events from a positive point of view and keep envy away from our hearts.

_”We can complain because rose bushes have thorns, or rejoice because thorn bushes have roses.”_ 

 *Abraham Lincoln*

That’s the way you look at life independently……..

Two different perspectives…

தேவ ரகசியங்கள்

 ஒரு தாய் அப்போதுதான் ஒரு குழந்தையை பிரசவித்திருக்கிறாள். அந்தக் குழந்தையின் தந்தை ஒரு வாரத்துக்கு முன்னால்தான் இறந்து போனான்.

எமதர்மன் ஒரு எமதூதனை அனுப்பி அந்த அம்மாவுடைய உயிரை எடுத்துக் கொண்டு வந்துவிடு" என்கிறான்.

இந்த எமதூதன் நினைக்கிறான், "ஐயோ பாவம் அப்பாவும் இல்லை, அம்மாவையும் நான் எடுத்துக்கொண்டு போய்விட்டால்  இந்த குழந்தைக்கு யார் கதி" என்று எடுக்காமல் திரும்பி விட்டான். ஆக, எமதூதன் அந்த குழந்தைக்கு யார் கதி என்று நினைத்து பரிதாபப்பட்டதனில் உயிரை எடுக்காமல் போய்விட்டான்.

ஆனால், அங்கே எமன் சொல்லிவிட்டார்,  "உனக்கு தேவலோக ரகசியங்கள் தெரியவில்லை. கடவுளுடைய அருளாட்சி எப்படி நடக்கிறது என்று தெரியவில்லை. அது தெரிகிற வரைக்கும் பூமியில் போய் கிட" என்று அவனை தூக்கி பூமியில் போட்டுவிட்டார்.

அவன் ஒரு பூங்காவில் முனகிக் கொண்டு கன்னங்கரேலென்று கிடக்கிறான். அப்போது அந்த வழியாக வருகிற ஒரு தையற்காரன், என்னடா இது,  இங்கே முனகல் சத்தம் கேட்கிறதே என்று அவனைப்பார்த்து விட்டு, இவனிடம் இருந்த துணியை அவனுக்கு போடுகிறான். மேலும் "என்னுடன் வா என்கிறான்....

எமதூதன் ஒரு வார்த்தை பேசவில்லை.

தையற்காரனுடன் அவன் வீட்டுக்குச் சென்றான். திண்ணையில் எமதூதனும்,  அந்த தையற்காரனும் படுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த தையற்காரனின் மனைவி தையற்காரனை மட்டும், "வா வா வந்து கொட்டிக்கோ"  என்று கூப்பிடுவாள்.

அவன் "விருந்தாளி வந்திருக்கிறானே" என்று சொல்வான். அவள் கணவனை திட்டி விரட்டுவாள்.

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று".

எமதூதன்  ஒன்றும் சொல்ல மாட்டான். போய்க் கொண்டே இருப்பான். ஒரு பத்து நிமிடம் கழித்து இவள் "சரி சரி வா"  என்று எமதூதனை  மறுபடியும் கூப்பிடுவாள்.

அப்போது அவன் லேசாக சிரிப்பான். கன்னங்கரேலென்று இருந்த அவன் உடம்பு கொஞ்சம் பொன்னிறமாக மாறும். ஆனால் ஒன்றும் பேச மாட்டான்.

தையற்காரன் சொல்வான், "எனக்கு இந்த காஜா போடுவதற்கு பட்டன் தைப்பதற்கு எல்லாம் ஆளில்லை . தங்குவதற்கு இடமும் சாப்பாடும் போடுகிறேன். எங்கள் வீட்டில் இருந்து கொள்" என்று சொன்னான்.

எமதூதன் டெய்லரிங் அசிஸ்டண்ட் ஆகிவிட்டான்....📷

ஒரு பத்து வருடம் ஆகிறது. ஒரு குதிரை வண்டியில் ஒரு பணக்கார பெண்மணி கை கொஞ்சம் முடமாக இருக்கிற குழந்தை, அத்துடன் ஒரு நல்ல ஆரோக்கியமான குழந்தை என இரண்டு பேரையும் கூட்டிக் கொண்டு வந்து தையற்காரனிடம், இந்தக் குழந்தைக்கு நல்லா தளர்வாக தைக்க வேண்டும். கை கொஞ்சம் சரி இல்லாமல் இருக்கிறது" என்று சொல்வாள்.

எமதூதன் அந்த குழந்தையையும் பார்ப்பான். அந்த பணக்கார பெண்மணியையும் பார்ப்பான். சிரிப்பான். அவன் உடம்பு இன்னும் கொஞ்சம் பொன்னிறமாக மாறும்.

இன்னும் ஒரு ஐந்து வருடம் ஆகிவிடும்.

ஒருநாள் ஒரு பெரிய பணக்காரன் பென்ஸ் காரில் வருவான். வந்து "இந்தாங்க பத்து மீட்டர் துணி இருக்கிறது. இதிலே 20 வருஷம் தாக்குப் பிடிக்கிற மாதிரி சூப்பராக சபாரி சூட் தையுங்கள்" என்று சொல்லி கொடுத்து விட்டுப் போவான்.

அதற்குள் நம் எமதூதன் தேர்ந்த தையற்காரன் ஆகிவிடுகிறான்....

முதல் நாள் போய்விட்டது.....

இரண்டாம் நாள் போய்விட்டது....

தையற்காரன், "நாளை டெலிவரி , அந்த பணக்காரன் வந்து கேட்பான்,  என்ன சொல்வது?"  என்று கேட்கிறான்.

இவன் டர்ரென்று  அந்த பேண்ட் துணியை கிழிப்பான். ஒரு தலையணை உறை, பெட் கவர் தைப்பான். தையற்காரன் திட்டுவான்". என் பிழைப்பில் மண்ணை போடுவதற்கு வந்தாயா? இப்போது அவன் வந்து கேட்டால்  நான் என்ன பண்ணுவது?" என்பான்.

அப்போது கார் டிரைவர் ஓடி வருவான்.  "நீங்கள் சபாரி தைக்காதீர்கள். என் முதலாளி இறந்து விட்டார். அதனால் அவருக்கு ஒரு தலையணை உறையும், மெத்தை உறையும் தைத்து விடுங்கள்"  என்று சொல்வான்.

இவன் முகத்தில் சிரிப்பு வரும் முழுவதும் பொன்னிறமாக மாறி விடுவான்.

அப்படியே மேலே போவான்.

அப்போது தையற்காரன்  சொல்வான், "அப்பா நீ யார்? வாழ்க்கையில் இதுவரைக்கும் மூன்று முறைதான் சிரித்தாய். ஒவ்வொரு தடவை சிரிக்கிற போதும் உன் உடம்பு பொன்னிறமாக மாறியது. அதனால் அதற்கு விளக்கத்தை சொல்லிவிட்டு,  நீ போ" என்பான்.

அவன் "நான் எமனுடைய தூதுவன். ஒரு தாய் இறந்து விட்டாள், அந்த குழந்தைக்கு யார் கதி என்று அந்த தாயின் உயிரை எடுக்காமல் விட்டதனால் பூமியில் போய் தேவ ரகசியத்தை தெரிந்து கொண்டு வா" என்று அனுப்பினார்கள். அதனால் வந்தேன்.

"என்ன தெரிந்து கொண்டாய்?"  என்று இவன் கேட்பான்.

□முதல் நாள் உன் மனைவி என்னை அடிக்க வந்தாள் அல்லவா...? அப்போது அவள் முகத்தில் தரித்திர தேவி தெரிந்தது.

□பத்தாவது நிமிடம் என்னை சாப்பிட வாவா என்று கூப்பிடும் போது அன்னை மகாலட்சுமி தெரிந்தார்.

■□ அப்போது, இந்த உலகத்தில் "ஒருவன் பணக்காரன் ஆக இருப்பதற்கும்  ஏழையாக இருப்பதற்கும் அவனுடைய எண்ணங்கள்தான் காரணம்"  என்று தெரிந்து கொண்டேன். இது போய்விட்டு அது வருவதற்கு பத்து நிமிடம் தான் தேவை என்றும் தெரிந்து கொண்டேன்.

□ இதுதான் தேவரகசியம் ஒன்று..

மனிதர்களிடமே  பெரிய திட்டங்கள் எல்லாம் இருக்கிறது.  ஆனால் எந்த கார்டை வைத்து விளையாடுவது என்று தெரியாததினால்  வம்பில் மாட்டிக் கொள்கிறார்கள்.

■ பத்து வருடம் கழித்து ஒரு பணக்கார பெண்மணி குதிரை வண்டியில் வந்தாள் அல்லவா...? அவளுடன் ஒரு குழந்தை கை முடமாக வந்தது அல்லவா...?

அதுதான் நான் இதற்கு அம்மா இறந்து விட்டால் யார் பார்த்துக் கொள்வார்கள் என்று நினைத்த குழந்தை.

நிஜமான தாய் ஏழை. அவள் இறந்து விட்டால் கூட இந்த குழந்தையை நன்றாக பார்த்துக் கொள்வதற்கு,  இதற்கு கொஞ்சம் தளர்வாக தைக்கவேண்டும் என்று சொல்கிற அளவிற்கு ஒரு பணக்கார அன்பான அம்மாவை இறைவன் தயாராக வைத்திருக்கிறான்.  இது எனக்கு தெரிந்த போது இரண்டாவது முறை சிரித்தேன்.

■ ஒரு எமதூதன் ஆகிய எனக்கே பச்சாதாபம் இருக்கிறபோது, இறைவனுக்கு இருக்காதா? அவன் அதற்கு ஒரு மாற்று வழி வைத்துக் கொண்டுதான் அந்த உயிரை எடுப்பான். இது எனக்கு தெரிந்தபோது இரண்டாவது தேவ ரகசியம் புரிந்தது.

கடவுள் எல்லாம் காரண காரியங்களோடு நடத்துகிறான்.

■மூன்றாவது தேவ ரகசியம்....

மூன்று நாட்களில் சாகப் போகிறவன் இன்னும் 20 வருஷம் நான் உயிரோடு இருக்கப் போகிறேன் என்று நினைத்துக்கொண்டு,  நன்றாக 20 வருஷத்திற்கு வருகிற மாதிரி துணி தை என்று சொன்னானே...

"எனக்கு தெரியும் அவன் சாகப்போகிறான்" என்று,  அதனால்தான் நான் துணி தைக்கவே இல்லை.

அவன்  இறந்த அந்த நேரத்தில் துணியை கிழித்து தலையணை உறையும், மெத்தை உறையும் தைத்தேன்".

இந்த ஜனங்கள் இந்த உலகத்தில் ஏதோ நூறு வருஷம் இருநூறு வருஷம் கொட்டகை போட்டுக் கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டு குழம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

சாவு எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

நேற்று இருந்தவன் இன்று இல்லை. அதுதான் இந்தக் கலியுகத்தின் எதார்த்தமான உண்மை...

அதுவே தெரியாமல் ஒவ்வொருவனும் நான் மட்டும் ரொம்ப வருஷம் இருப்பேன் என்றும்,  மற்றவன்தான் செத்துக் கொண்டிருக்கிறான் என்றும் நினைக்கிறான் அல்லவா?

அதுதான் மூன்றாவது ரகசியம்...

● அதனால்தான் இந்த உலகத்தில் அவன் திறமையாக செயலாற்ற முடியாமல் இன்னும் 20 வருஷம் கழித்து நடக்கப் போகிற குழந்தையுடைய கல்யாணத்திற்கு இன்றைக்கு காசு இல்லையே என்று வருத்தப்படுகிறான்..

● இன்னும் 15 வருடம் கழித்து கல்லூரியில் படிக்கப்போகிற பையனுக்கு பணம் இல்லையே என்று வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறான்..

அதனால்தான் உலகத்தில்  நிம்மதி இல்லாமல் இருக்கிறது. பேசிக் கொண்டிருக்கிறபோது இப்போதே செத்துப் போவோம், என்று நினைத்தால், நீ சந்தோஷமாக இருப்பாய்..

இந்த மூன்று ரகசியங்கள்...

அதாவது ஏழையாக இருப்பதும் பணக்காரன் ஆக இருப்பதும் நம்முடைய எண்ணங்களால் நடக்கிறது.

இரண்டாவது எது நடந்ததோ அதற்கு கடவுள் ஒரு மாற்றுவழி வைத்திருப்பார்.

மனிதனின் மனநிலையில் உள்ள ஈகோவினாலும்,  அறியாமையினாலும் அவர்களால் அதைப் புரிந்து கொள்ள முடிவதில்லை.

மூன்றாவது எந்த நேரத்திலும் சாவு வரலாம்.

இது தெரியாமல் மனிதர்கள் கொட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த அஞ்ஞானம்தான் உலகில் துக்கங்களுக்கு எல்லாம் காரணம்.

இவைதான் அந்த மூன்று தேவ ரகசியங்கள் என்பான்....

எனவே, நாமும் இந்த தேவ ரகசியங்களை புரிந்து கொண்டு வாழப் பழகி விட்டால், நம் உடலில் உயிர் இருக்கும் வரை நிம்மதியாக வாழலாம்...

கடவுள் தாயினும் மேலானவர்

 ஒரு நாள் அக்பர் அரசவையில் அக்பரும் பீர்பாலும் பேசி கொண்டிருக்கும்போது

அக்பர் கேட்டார் பீர்பாலே இந்து மதத்தில் உள்ள கடவுள் திருமால் இருக்கிறாரே அவருக்கு யாரும் சேவகர்களே கிடையாதா ?

பீர்பால் அரசே அவருக்கு ஆயிர கணக்கான சேவகர்கள் இருக்கிறார்கள் ஏன் கேட்கிறீர்கள்?

அக்பர் இல்லை ஒரு சாதாரண யானையின் காலை ஒரு முதலை பிடித்ததர்காவா உங்கள் திருமால் கருடன் மீது ஏறி சங்கு சக்கரத்துடன் வந்து அந்த யானையை காக்க வேண்டும் நீர் கூறியது போல் ஆயிர கணக்கான சேவகர்கள் இருக்கிறார்களே அவர்களில் யாரவது ஒருவரை அனுப்பி அந்த யானையை காப்பாற்றியிருக்கலாமே?

அதை விட்டு விட்டு அவர் ஏன் வந்து அந்த யானையை காப்பாற்ற வேண்டும்?

இதற்க்கு பீர்பால் பதில் ஏதும் கூறாமல் மெளனமாக இருந்தார்

அதை பார்த்ததும் அக்பருக்கு ஒரு சந்தோசம் பீர்பாலே பதில் சொல்ல முடியாத அளவுக்கு நாம் கேள்வி கேட்டுவிட்டோம் என்று

ஒரிரு நாட்கள் சென்றன

அக்பரும் அவர் குடும்பத்தாரும் அவர்களுடன் பீர்பாலும் சில மெய் காப்பாளர்களும் கங்கை கரையை கடப்பதற்கு படகில் சென்று கொண்டிருந்தனர்

அக்பரின் மூன்று வயது பேர குழந்தையை கொஞ்சி கொண்டிருந்த பீர்பால் படகு ஆழமான பகுதிக்கு வந்ததும் பீர்பால் படகோட்டிக்கும் படகில் வந்த ஒரு வீரனுக்கும் சைகை காட்டிவிட்டு அக்பரின் பேரனை கங்கையில் தூக்கி போட்டுவிட்டார்

பதறிய அக்பர் உடனே நீரில் குதித்து தன பேரனை காப்பாற்ற துணிந்தார்

அவரோடு சேர்ந்து பீர்பால் சைகை செய்த வீரனும் நீரில் குதித்து அக்பரையும் குழந்தையும் தூக்கி வந்து படகில் சேர்த்தான்

படகில் பேரனுடன் ஏறிய அக்பர் தன்னை ஆசுவாசப்படுத்தி விட்டு பீர்பால் என்ன இது நீயா இப்படி என் பேரனை கொல்ல துணிஞ்ச என்னால நம்பவே முடிலயே சொல்லும் என்ன காரணத்துக்காக என் பேரனை தண்ணீர்ல தூக்கி போட்டீர் சொல்லும்? என்றார் கோபமாக

பீர்பால் அமைதியாக உங்களுக்கு திருமாலை பத்தி தெரியனும் என்பதற்காக அப்படி செஞ்சேன் அரசே என்றார்

அக்பர் பீர்பாலே என்ன விளையாடுறியா நீ என் பேரனை தூக்கி தண்ணீர்ல போட்டதுக்கும் உமது திருமாலை நான் தெரியுறதுக்கும் என்ன சம்மந்தம்

பீர்பால் அரசே மன்னித்துக்கொள்க நீங்க அன்று ஒரு நாள் உங்கள் கடவுள் திருமாலுக்கு சேவகர்களே இல்லையா அவர்தான் வந்து யானையை காப்பாற்றணுமான்னு கேட்டிங்களே ஞாபகம் இருக்கா உங்களுக்கு?

அக்பர் ஆமாம் அதுக்கும் இன்று நீ என் பேரனை தூக்கி தண்ணீர்ல போட்டதுக்கும் என்ன சம்மந்தம்?

பீர்பால் அரசே கொஞ்சம் யோசித்து பாருங்கள் என்னையும் சேர்த்து இந்த படகில் உங்களுக்கு 10 சேவகர்கள் இருக்கிறார்கள் ஆனால் இவர்கள் யாருக்கும் நீங்கள் உத்தரவு பிற்பிக்காமல் நீங்களே உங்கள் பேரனை காப்பற்ற தண்ணீரில் குதித்து விட்டீர்கள் ஏன் அரசே?

எங்களை நீங்கள் நம்பவில்லையா என்று கேட்டார்

அக்பர் கொஞ்சம் கோபம் தணிந்து அப்படி இல்லை பீர்பால் என் பேரன் மேல் அளவு கடந்த பாசம் வச்சுருக்கேன்னு உனக்கு தெரியும் நீர் திடிர்னு தண்ணீர்ல அவனை தூக்கி போட்டதால் எனக்கு அவனை காப்பற்ற வேண்டும் என்கிற எண்ணம் தான் மேலோங்கி இருந்ததே தவிர உங்களுக்கு உத்தரவிட்டு அவனை காப்பாற்ற சொல்லும் அளவுக்கு எனக்கு பொறுமை இல்லமால் நானே குதித்து அவனை காப்பாற்றினேன் என்றார்

பீர்பால் புன்னகையுடன்

அரசே இந்த நாட்டை ஆளும் உங்களுக்கே இவளோ பாசம் இருக்கும் போது அண்ட சாகசரங்களையும் ஆளும் எங்கள் திருமாலுக்கு எவளோ பாசம் இருக்கும் உயிர்கள் மேல்

அதனால்தான் எத்தனை சேவகர்கள் இருந்தாலும் தன்னை நம்பி அழைப்பவர்களை எங்கள் கடவுள் நேரில் காக்க வருகிறான்

அரசே இப்பொழுது புரிந்ததா திருமால் ஏன் நேரில் வந்து யானையை காப்பாற்றினார் என்று

நான் நீரில் வீசிய உங்கள் பேரனை காப்பற்ற இங்குள்ள ஒரு வீரனிடமும் படகோட்டியிடமும் நான் முன்னமே சொல்லி வைத்திருந்தேன் தவறு இருந்தால் மன்னியுங்கள் அரசே என்றார்

அக்பர் இல்லை பீர்பால் நான் தான் உன்னிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்

உங்கள் கடவுளை பற்றி தவறாக எண்ணி இருந்தேன் உங்கள் கடவுள் தாயினும் மேலானவர் என்பதை புரிந்து கொண்டேன் என்றார் நெகிழ்ச்சியாக

ஏற்கனவே பல முறை பலர் உபன்யாசகங்களிலும் கதைகளிலும் சொன்னது போல் அன்புக்கு பண்புக்கு நேர்மைக்கு பகவான் கட்டுண்டவன் கூப்பிட்ட குரலுக்கு யார் மூலமாவது இன்றும் உதவுபவன்

அதனால் தான் கலியில் "தெய்வம் மனித ரூபேன" என்பர்

அவனே தாய் தந்தை போல் நமக்கு இருக்கும் போது அவன் அருளாலே எல்லாம் நடக்கிறது அவனின்றி அனுவும் அசையாது என்று மட்டும் நினைப்போம்

என்றும் எப்போதும் நன்மையே நடக்கும்.

மனைவியின் காதல்....

 உங்கள் கண்களை ஈரமாக்கும் ஓர் கதை இது....

மனைவியின் காதல்....

♥வேலை முடிந்து வீட்டிற்கு போன போது சாரா சமையலறையில் இருந்தாள். அவசர அவசரமாக குளித்து உடைமாற்றி சாப்பாட்டு மேசையில் வந்தமர்ந்த போது சாப்பாடு பரிமாறத் தொடங்கினாள். அவளின் கைகளை பற்றியவாறு, "எனக்கு விவாகரத்து வேண்டும் "என்றேன்.

♥"ஏன்?" என்றாள் ஒற்றை வரியில்.

நிச்சயமாய் அவள் அதை சீரியஸாய் எடுத்துக் கொள்ளவில்லை என்பது அவளது நடத்தையில் புரிந்தது.

♥அதை ரசிக்கும் மன நிலையில் நான் இருக்கவில்லை.எப்படியாவது எனது நிலைப்பாட்டை சொல்லியே ஆக வேண்டுமென நினைத்தேன்.

♥"அலுவலகத்தில் என்னுடன் பணிபுரியும் ஜேனை இரண்டு வருடமாக காதலிக்கிறேன்.விவாகரத்து வேண்டும் என்றேன்"தீர்க்கமாய்.

எதுவும் பேசவில்லை அவள்.

♥திடீரென நட்டாற்றில் அவளோடு என் மகனையும் விடுவதாய் மனம் குத்திக் காட்டியது.குடியிருக்கும் வீடு,கார்,மற்றும் சொத்தின் 30% அவளுக்குரியது என எழுதப்பட்ட பத்திரத்தை அடுத்த நாளே அவளிடம் நீட்டினேன்.

எரிமலையாய் சிதறினாள்.பத்திரத்தை வெறி கொண்ட மட்டும் கிழித்தாள்.

பத்து வருடமாய் தன் வாழ்வை பகிர்ந்தவள் அந்நியமாய் தெரிந்தாள்.

♥சத்தமாய் அழுதாள்.ஆர்ப்பாட்டம் பண்ணினாள்.பலம் கொண்ட மட்டும் என் சட்டையைப் பற்றி உலுக்கினாள்.சலனமின்றி மீண்டும் சொன்னேன்,"விவாகரத்து வேண்டும்".

♥முழுவதுமாய் நொறுங்கிப் போயிருந்தாள்.விவாகரத்து எனும் வார்தையால் எதை எதிர்ப்பார்த்தேனோ அது நடந்தது.

♥அடுத்த நாளை ஜேனுடன் கழித்து விட்டு நள்ளிரவில் வீடு சென்ற போது மேசையிலிருந்து சாரா எதையோ எழுதிக் கொண்டிருந்தாள்.

♥விவாகரத்து ஒப்பந்தம் என்பது புரிந்தது.

என்னிடமிருந்து எதுவும் வேண்டாமென்று கூறியிருந்தாள்.

ஒரு மாதத்தில் மகனுக்கு பரீட்சை இருப்பதாகவும்,இது பற்றி எதுவும் அவனுக்கு புரியாதவாறு வீடு சுமூகமாக இருக்கட்டும் என்று கூறியிருந்தாள்.

முறிந்து போன ஒரு திருமணம் மகனை பாதிக்கக் கூடாதென எண்ணியிருக்கலாம்.

எப்படி திருமண இரவன்று வாசற் கதவிலிருந்து படுக்கையறை வரை அவளை தூக்கி வந்தேனோ  அதே போல ஒவ்வொரு நாளும் தூக்கி வர வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தாள்.

வினோதமாய் இருந்தது.என்னுடனான கடைசி நாட்களை இன்பமாக கழிக்க நினைக்கிறாள் என ஏளனமாய் எண்ணிக் கொண்டேன்.

♥முதல் நாள் அவளை ஏந்திச் சென்ற போது இருவருமே சங்கடமாகவே உணர்ந்தோம்.மகன் விசித்திரமாய் பார்த்தான்.கடந்த ஒன்பது வருடமாக அவன் தன் தாய்,தந்தையை இப்படி அன்னியோன்யமாய் பார்த்திருக்கவில்லை என்பது உறுத்தலாய் இருந்தது.

♥"அப்பா அம்மாவை தூக்கிச் செல்கிறார்" என குதூகலித்தான்.

நமது விவாகரத்து பற்றி அவனுக்கு தெரிய வேண்டாம் என்றாள் படுக்கையில் இறக்கிவிட்ட போது எங்கோ பார்த்தபடி.

திருமணத்தன்றிருந்த உணர்வுகள் மங்கிப் போயிருப்பது தெரிந்தது.

♥அடுத்த நாள் அவளை தூக்கும் போது இன்னும் இலகுவாக இருந்தது.உரிமையுடன் மார்பில் துவண்டிருந்தாள்.

அவளது கூந்தலின் மணம் ஏதேதோ செய்தது.

நீண்ட நாட்களாக அவளை நான் ரசிக்கவில்லை என்பதை உணர்ந்தேன்.

முகத்தில் சில சுருக்கங்கள் இருந்தது.

ஆங்காங்கே சில நரைமுடிகள் எட்டிப் பார்த்தன.

கூந்தலின் அடர்த்தி வெகுவாக குறைந்திருந்தது.

அன்று கொடியிடையாளாய் இருந்தவள் சற்று பருத்திருந்தாள்.

திருமண வாழ்வு அவள் அழகை,கவர்ச்சியை கொள்ளையிட்டிருந்தது.

என்னுடன் வாழ்ந்ததில் எனக்காக தன் இளமையை தொலைத்து விட்டிருந்தது அப்பட்டமாய் தெரிந்தது.

♥நான்காம்,ஐந்தாம் நாட்களில் எனக்காய் தன் வாழ்வை அர்ப்பணித்தவள்  மீண்டும் அன்னியோன்யமானதாய் தோன்றியது.

நாட்கள் செல்லச் செல்ல விரிசல்கள் காணாமல் போயிருந்தன.அவள் சுமையாய் தெரியவில்லை.எமது செயல் மகனுக்கும் பழகிவிட்டிருந்தது.

♥ஒரு நாள் காலையில் திருமணமான புதிதில் பரிசளித்த ஒரு ஆடையை அணிந்தபடி கண்ணாடி முன் நின்ற படி தலை வாரிக் கொண்டிருந்தாள்.நன்றாக மெலிந்து போயிருப்பது தெரிந்தது.

♥இந்த பெண் எத்தனை வடுக்களை மௌனமாய் ஏற்றுக் கொள்கிறாள் என தோன்றியது.

♥மெதுவாக அவளது தோள்களை பற்றினேன்.திரும்பி என் கண்களை ஊடுறுவினாள்.என் மனம் மாறிவிடுமோ என்றஞ்சி பார்வையை தவிர்த்தேன்.

♥"இன்னு அம்மாவை தூக்கவில்லையா?"என்றான் மகன்.அவனைப் பொருத்தவரை அது வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டிருந்தது.

♥தூக்கிய போது கைகளை கழுத்துகளை வளைத்து கோர்த்துக் கொண்டாள்.பிடிமானத்தை நான் இறுக்கிய போது சொகுசாக நெஞ்சோடு அணைந்தாள்.

கல்யாண நாளன்று காதல் ததும்ப நடந்தது போலவே ஒவ்வொரு நடையாக எடுத்து வைத்தேன்.

நாட்கள் வேகமாக உருண்டோடியது.

♥கடைசி நாளில் சாரா என்ற பெண் மீதினில் என் காதல் என்னை ஒரு அடி கூட நகர்த்த விடவில்லை.அவசரமாய் அவளை கையிலிருந்து இறக்கிவிடக் கூடாதென நினைத்தேன்.

♥திருமண இரவில் அவளை ஏந்தியபடி"மரணம் வரை உன்னை பிரிய மாட்டேன்" என்ற என் வாக்குறுதி இனிமையாய் நிழலாடியது.

♥மென்மை மாறாமல்  சாராவை படுக்கையில் இறக்கிவிட்டேன்.ஜேனிடம் விரைந்து சென்று,"சாராவை கைவிடும் எண்ணம் எனக்கில்லை.என் வாழ்வும் என் மரணமும் அவளுடன் தான்" என்று முடிவாய் சொன்னேன்.ஜேனுடைய பதிலிற்காய் காத்திருக்க தோன்றவில்லை.

♥பூக்கடையில் சாரா  மிகவும் விரும்பும் வெள்ளை ரோஜாக்கள் நிரம்பிய ஒரு பொக்கேயை வாங்கி."You are my life "என்று ஒரு அட்டையில் எழுதிக் கொண்டு சாராவை நோக்கி விரைந்தேன்.

♥அங்கே...

அதே கட்டிலில்,

 என் சாரா பிணமாக,சடலமாக,உயிரற்றிருந்தாள்..

♥கடந்த சில மாதங்களாக அவள் புற்றுநோயுடன் போராடிக் கொண்டிருந்ததை அவளது நண்பி அப்போதுதான் சொன்னாள்.

அதை கூட அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு  நான் அந்நியனாக வெட்கித்து நின்றேன்.

♥அத்தனை போராட்டத்திலும் என்னை ஒரு நல்ல கணவனாக,அன்பான தந்தையாக என் மகனிடம் நிரூபிக்க ஆசைப்பட்டிருக்கிறாள்.

மரணத்தை தவிற வேறெதுவும் நம்மை பிரிக்காது என்பதை உணர்த்த முயற்சித்திருக்கிறாள்.

♥மகன் என் கால்களை கட்டிக் கொண்டு அழுதான்.

"சாரா ,இனி என் வாழ்வு நம் பிள்ளைக்கானது" என மௌனமாய் அவள் மனதிடம் சொல்லிக்கொண்டான்.

அப்பா என்ற மனிதர்

 அப்பா என்ற மனிதர்

"இந்தா அம்மா.. என் முதல் மாத சம்பளம்.. 30 ஆயிரம் ரூபாய்.. அப்பா எப்பவாச்சும் இப்படி முப்பது ஆயிரம் சம்பாதித்து இருக்கிறாரா.. எனக்கு இன்னும் கூட பதவியும் சம்பளமும் கூடிக்கிட்டே போகும்..!"

இதுவரை மகன் இப்படிப் பேசி அந்த தாய் கேட்டதே இல்லை. வீட்டில் அதிகம் பேசவே மாட்டான் .

அப்பாவிடம் சுத்தமாக பேசுவதே இல்லை. அப்படிப்பட்டவன் வாயில் இருந்தா இப்படிப்பட்ட வார்த்தைகள்...? மனம் துணுக்குற்றாள் அம்மா .

"என்னடா.. வார்த்தை எல்லாம் தடிப்பா வருது..? அதுவும் அப்பாவை பற்றி ரொம்ப ஏளனமாக பேசுற..!"

"அவர் மட்டும் என்னை ஏளனமாக நடத்தலையா.. காலேஜ் போன புதுசுல ஒரு போன் வாங்கி தாங்கன்னு கேட்டதற்கு இழுத்தடிச்சு ஒரு வருஷம் கழிச்சுத் தானே வாங்கி தந்தாரு..!

"அப்பாவோட வருமானம் அவ்வளவுதான்டா இருந்துச்சு..!

" அதெல்லாம் இல்ல.. போன் வாங்கி தந்தா பிள்ளை படிப்பு கெட்டுடுமோன்னு நினைச்சிருப்பார்..!"

"அது சரிதானே.. நீயும் மூன்றாவது செமஸ்டர் மார்க் குறைவாகத்தானே எடுத்தே..!

" மார்க் குறைவாக எடுத்தால் பொறுமையா சொல்லலாம் இல்ல..? எதுக்கு போனை பிடுங்கி உன் கையிலே கொடுத்து, "பத்திரமா வச்சிரு.. அவன் காலேஜ் முடிச்ச அப்புறம் கொடுத்தா போதும்.. என்று சொன்னாராம்..?"

"அப்பவாச்சும் நீ படிப்பில கவனம் செலுத்துவாய் என்றுதானேடா.. மகனே..!

" நான் தான் இனிமே ஒழுங்கா படிக்கிறேன் என்று சொன்னேன்ல.. அப்புறம் எதுக்கு காலேஜ் வந்து என் கிளாஸ் டீச்சர் கிட்ட விசாரிச்சாரு.. எனக்கு எவ்வளவு கேவலமா இருந்துச்சு தெரியுமா..?"

" எப்பவும் நான் உன்னை கவனிச்சுக்கிட்டே இருக்கேன் என்ற பயத்தை உனக்கு ஏற்படுத்துவதற்காகத் தான் அப்பப்போ காலேஜ் வந்து போறேன்னு அவரே சொல்லி இருக்காரு..!"

" அதெல்லாம் கூட பரவாயில்லம்மா.. மூணாவது செமஸ்டெர்ல பெயிலா கூட ஆகல.. பர்சன்டேஜ் குறைஞ்சிடுச்சுன்னு நீ, தங்கச்சி, உன் அண்ணன் பசங்க எல்லாரும் வீட்ல இருக்கும்போதே சேர்ல உட்கார்ந்து இருந்த என்னை இழுத்துப் போட்டு நங்குன்னு மிதிச்சாரு.. எனக்கு எவ்வளவு அவமானமாக இருந்திருக்கும்..? அன்னைக்கு எடுத்தேன் சபதம்..இவர் முன்னாலே ஒரு கவுரவமான மனுசனா வாழ்ந்து காட்டணும்னு. காலேஜ்ல நடந்த கேம்பஸ் இண்டர்வியூவில் பாஸ் பண்ணிய இரண்டு பேரில் நானும் ஒருத்தன். இப்பொழுது வேலைக்குச் சேர்ந்து இது முதல் மாசம் சம்பளம் வாங்கிட்டு வந்துட்டேன்.. இந்த பணத்தை கொண்டு போய் அவர்கிட்ட காட்டி இனிமேலாவது யாரையும் ஏளனமாக நினைக்காதீங்க.. என்று சொல்லு..போ..!"

"ஏம்பா..இப்போ நீ பேசும்போது இடையில் ஏதோ சொன்னியே சபதம் எடுத்தேன் என்று.. அந்த வைராக்கியத்தை உனக்குள்ள ஏற்படுத்தணும்னு தான்டா அவர் தன்னுடைய பாசத்தை எல்லாம் மறைத்து கண்டிப்பாக நடந்து கொண்டார்..! அம்மாக்கள் கூட பிள்ளைகள் நம்மை நாளைக்குக் காப்பாத்தணும் என்ற எதிர்பார்ப்போடு தான்டா இருப்பாங்க.. அப்பாக்கள் அப்படி இல்லையடா..மகனே.." நம்மை விட நம்ம பிள்ளை நல்லா இருந்தா போதும்னு" தான் நினைப்பாங்க..! அம்மா உன் உடம்பை தான் வளர்ப்பா.. அப்பா தான் உன் வாழ்க்கையைப் பற்றி நினைப்பார்..!"

" நீ சரியான ஜால்ரா.. எப்ப பாரு அவருக்கு சப்போரட்டாத்தான் வருவ..!"

" இந்த வார்த்தையை ஒரு 15 வருடம் கழித்து சொல்கிறாயா என்று பார்ப்போம்..!"

" ஏன்.. சொல்வேனே..! உன் வீட்டுக்காரரை நீதான் மெச்சுக்கணும்..!"

"உன்னால சொல்ல முடியாது.. ஏன்னா அப்போ நீயும் சில பிள்ளைகளுக்கு அப்பா ஆகி இருப்பே..!பிள்ளைகள் குறித்தான அப்பாக்களின் எண்ணங்கள் உனக்கு புரிந்து போயிருக்கும்..!"

அப்போது அப்பா வீட்டிற்குள் நுழைகிறார்.

" பாரு அப்பாவே வந்துட்டாரு ..

அந்தப் பணத்தை அவர்கிட்ட நீயே கொடு என்ன சொல்கிறார் என்று பாரு..!"

"என்ன சொல்லப் போறாரு.. "மாசாமாசம் இதே மாதிரி நிறைய சம்பாதிச்சு பைசா குறையாமல் கொண்டு வந்து கொடுக்கணும்னு.." கட்டளை போடப் போறாரு ..!

அப்பாஅருகில் வந்து இருந்தார்..!

" அப்பா..! "

"இவனா அழைக்கிறான் என்னைய..?" அதிசயமாக ஏறிட்டுப் பார்த்தார் மகனை. அவர் கண்களில் சிறு மின்னல் கீற்று.. முகத்தில் சில வினாடி பிரகாசம்..!

"இந்தாங்க முதல் மாத சம்பளம்..!"

"எவ்வளவு..?"

"முப்பதாயிரம்.. ட்ரெய்னிங் பீரியட் இரண்டு வருஷம் முடிஞ்சா லட்சத்துக்கு மேலே வரும்..!"

"நல்லது.. அதை நீயே வச்சுக்கோ ..!"

"ஏன் அப்படி சொல்றீங்க..?"

" ஆமா தம்பி.. நான் கூட சின்னச் சின்ன அனாவசிய செலவு செய்வேன்.. நீ ரொம்ப சிக்கனமாக இருக்கிறத கவனிச்சிருக்கேன்..! அப்பா உங்களுக்கு எந்த சொத்தம் சேர்த்து வைக்கல.. படிக்க வச்சிட்டேன்.. அதுதான் நான் உனக்கு தர சொத்து. உன் பணத்தை நீயே வச்சுக்கிட்டு நீ என்னென்ன ஆசைப்பட்டாயோ அதற்கு செலவு பண்ணிக்கோ.. என் உடம்புல தெம்பு இருக்கிற வரைக்கும் அம்மாவுக்கும் தங்கச்சிக்கும் கஞ்சி ஊத்துவேன்.. அதுக்கப்புறம் நீ அவங்களை பொறுப்பா பாத்துக்கப்பா..!"

" நான் பார்த்துப்பேன்பா.. நீங்க கண்கலங்காதிங்கப்பா..!"

" நான் அதற்கு கண் கலங்கவில்லை.. ரொம்ப வருஷங்களுக்கு அப்புறம் நீ என்னை "அப்பா" ன்னு கூப்பிட்டுப் பேசினல்ல..!"

மகன் கண்கள் கலங்க அப்பாவின் கைகளைப் பிடித்துக் கொண்டான்..!

"அப்பா.. இத்தனை நாளா உங்களை தப்பாப் புரிஞ்சிட்டேம்பா..!

மகன் பற்றி இருந்த அப்பாவின் கைகளில் வயோதிகத்தின் சிறு நடுக்கம்..

மகனின் கைகளிலோ குற்றம் இழைத்தப் பெரு நடுக்கம் ...!

அப்பாவின் விழிகளில் கசிந்த கண்ணீர் ஆனந்தக் கரையாடிக்கொண்டிருந்தது...

மகனின் கண்களில் வழிந்த கண்ணீர் குற்ற உணர்வைக் கரைத்தோடிக் கொண்டிருந்தது...!

ஆணவம், அழிவின் விதை- பேசாலைதாஸ்

ஆணவம், அழிவின் விதை- பேசாலைதாஸ்

ஒரு மாடு மேய்ச்சலுக்காக ஒரு காட்டுக்குள் சென்றது.

மாலை நேரம் நெருங்கியது. ஒரு புலி தன்னை நோக்கி வருவதை மாடு பார்த்தது.

மாடு பயத்தில் ஓட ஆரம்பித்தது . அந்த புலியும் அதன் பின்னால் ஓட ஆரம்பித்தது. ஓடும் மாடு முன்னால் ஒரு குளத்தைக் கண்டது. பயந்துபோன மாடு குளத்துக்குள் நுழைந்தது.

புலியும் அதனை பின்தொடர்ந்து குளத்திற்குள் நுழைந்தது. அந்த குளம் மிகவும் ஆழமாக இல்லை, அதில் கொஞ்சம் தண்ணீர் இருந்தது மற்றும் சேறு நிரம்பியிருந்தது.

அவற்றின் இடையிலான தூரம் மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் இப்போது புலி சேற்றில் சிக்கியதால் எதுவும் செய்ய முடியவில்லை.

மாடு மெதுவாக சேற்றுக்குள் மூழ்கத் தொடங்கியது. புலியின் அருகில் மாடு இருந்தபோதும் புலி அதனை பிடிக்க முடியவில்லை. அவர்கள் மெதுவாக சேற்றுக்குள் மூழ்க ஆரம்பித்தனர். இருவரும் சேற்றுக்குள் கிட்டத்தட்ட கழுத்து வரை மூழ்கிவிட்டனர்.

சிறிது நேரம் கழித்து, மாடு புலியைக் கேட்டது,

மாடு: உனக்கு மாஸ்டர் அல்லது உரிமையாளர் இருக்கிறாரா?

புலி: நான் காட்டில் ராஜா. நான் யாருக்கும் சொந்தமில்லை. நானே இந்த காட்டின் உரிமையாளன்.

மாடு: ராஜாவா இருந்து என்ன பலன்? நீயும் என்னைப் போல மாட்டிக்கிட்டு இருக்க.

புலி: நீயும் தான் என்ன போல சாகப்போற. உங்கிட்ட மாஸ்டர் இருந்தாலும் உன் நிலை என்னுடையது போலவே தான் இருக்கு.

மாடு: இல்லவே இல்லை. என் எஜமானர் மாலையில் வீட்டிற்கு வந்து என்னை தேடி பார்ப்பர், அவர் நிச்சயமாக என்னைத் தேடி இங்கு வந்து என்னை இந்த மண்ணிலிருந்து வெளியே எடுத்து வீட்டிற்கு அழைத்துச் செல்வார். உங்களை யார் அழைத்துச் செல்வார்கள்?

சிறிது நேரத்தில், ஒரு மனிதன் அங்கு வந்து மாட்டை சேற்றிலிருந்து வெளியே எடுத்து தன் வீட்டிற்கு அழைத்து சென்றார்.

செல்லும்முன், மாடு மற்றும் அதன் உரிமையாளர் இருவரும் நன்றியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவர்கள் விரும்பினாலும் புலியை சேற்றில் இருந்து வெளியே எடுக்க முடியவில்லை, ஏனெனில் அது அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக அமையலாம்.

மாடு - அர்ப்பணிப்புள்ள இதயத்தின் சின்னம்.

புலி - இறுமாப்புள்ள மனம்.

உரிமையாளர் - கடவுளின் சின்னம்.

மண் - இதுதான் உலகம்.

யாரையும் நம்பாமல் இருப்பது ஒரு நல்ல விஷயம், ஆனால் நான் தான் எல்லாம், எனக்கு யாருடைய ஆதரவும் தேவையில்லை என்ற ஆணவம், அழிவின் விதையை விதைத்துவிடும்.

Thursday 28 September 2023

புகழ்ச்சி தரும் அழிவு பேசாலைதாஸ்

புகழ்ச்சி தரும் அழிவு பேசாலைதாஸ் 


கன்றுக்குட்டி ஒன்று அழுதபடியே தாய்ப்பசுவிடம் ஓடி வந்தது.

அதைப் பார்த்த தாய்ப்பசு தனது கன்றை நாக்கினால் நக்கியபடி அதன் அழுகைக்கான காரணத்தை விசாரித்தது.

உடனே அந்த கன்று, "அம்மா, இந்த வீட்டில் என்னைப் போலவே ஆட்டுக்குட்டி ஒன்றும் உள்ளது. என் அழகு அதற்கு இல்லை. கன்னங்கரேலென்று மிகவும் கருப்பாக உள்ளது. என் சுறுசுறுப்பும் அதற்கு இல்லை. ஆனால் இந்த வீட்டில் இருக்கும் முதலாளியின் மகன் என் மீது அன்பு காட்டுவது இல்லை. ஆனால் அந்த ஆட்டுக்குட்டியிடம் மட்டும் விளையாடுகிறான். அதற்கு பசுமையான புல் தருகிறான். அதன் கழுத்தில் அழகான மணி ஒன்று கட்டி அழகு படுத்துகிறான். ஆனால் என்னுடைய நிலையைப் பார். இங்கே கிடக்கும் காய்ந்த வைக்கோலைத்தான் தின்ன வேண்டியிருக்கிறது. என்னிடம் என்னம்மா குறை இருக்கிறது? " என்றபடி மீண்டும் அழத் தொடங்கியது.

"கண்ணே, இதற்காகவா வருத்தப்பட்டு அழுகிறாய்? அதிகமான மரியாதையும், அதிகமான இன்பத்தையும் அனுபவிப்பது மிக்வும் ஆபத்தானது. பிறருக்குக் கிடைக்கும் இன்பத்தைப் பார்த்துப் பொறாமைப் படாதே, அந்த ஆடு பெறும் நலமும் வளமும் அதன் அழிவிற்கே. அதன் நிலையைக் கண்டு இரக்கப்பட வேண்டுமே தவிர பொறாமைப் படாதே." என்றது தாய்ப்பசு.

ஒரு சில மாதங்கள் கடந்தன. அந்த கன்றுக்குட்டி மீண்டும் அழுது கொண்டே வந்தது.

தாய்ப்பசு அழுகையை நிறுத்திக் காரணம் கேட்டது.

"அம்மா, நடந்த கொடுமையை எப்படிச் சொல்வது? அதை நினைத்தாலே எனக்குப் பயமாக இருக்கிறது. இன்று காலையில் அந்த ஆட்டைக் குளிப்பாட்டி மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள். அதற்கு சுவையான உணவெல்லாம் கொடுத்தார்கள். சிறிது நேரம் கழித்து ஒருவன் பட்டாக்கத்தியுடன் வந்து அதன் தலையை வெட்டி வீழ்த்தினான். பிறகு அதன் உடலையும் துண்டு துண்டாக வெட்டினார்கள்." என்று சொல்லி மீண்டும் தேம்பித் தேம்பி அழுதது.

"கண்ணே, நான் அன்றே உனக்குச் சொல்லவில்லையா? மாலை மரியாதைகள், புகழ் மொழிகள் இவற்றிற்குப் பின்னால் அழிவு காத்திருக்கிறது. நமக்குக் கிடைப்பதைக் கொண்டு மகிழ்ச்சி அடைவதே மேலானது. மனிதர்களில் பலரும் இப்படித்தான் புகழ்ச்சியான பேச்சுக்கு மயங்கி அனைத்து உடமைகளையும் இழந்து கடைசியில் அழிந்தும் போய் விடுகிறார்கள்." என்றது தாய்ப்பசு.....

சிறந்த அரசன் பேசாலைதாஸ்

சிறந்த அரசன்  பேசாலைதாஸ் 

”திரும்பத் திரும்ப பிக் பாக்கெட் அடிச்சிட்டு ஜெயிலுக்கு வர்ரியே, நீ திருந்தவே மாட்டியா?” என்றார் ஜட்ஜ் ஜவர்லால்.

“எவ்வளவு தரம் பிக் பாக்கெட் அடிச்சாலும் அதே தண்டனையே தர்ரீங்களே, நீங்க சட்டத்தைத் திருத்த மாட்டீங்களா?” என்றான் பிக் பாக்கெட் பக்கிரி.

ஜட்ஜூக்கு சுருக்கென்றது.

பக்கிரியை ஜெயிலுக்கு அழைத்துப் போகச் சொல்லிவிட்டு ஜெயிலரைத் தனியாக அழைத்து ஏதோ பேசினார் ஜட்ஜ்.

ஜெயிலர், பிக் பாக்கெட் அடித்த பத்துப் பேரை ஒரு பிளாக்கில் வைத்தார். பக்கிரியைத் தனியாக அழைத்து சொன்னார்,

“இந்த பிளாக்கில் உனக்கு நேரப்படி சோறு கிடையாது. இந்த பிளாக்குக்கு ஒரு கேண்டீன் இருக்கிறது. செய்கிற வேலைக்கு தினமும் இருநூறு ரூபாய் கூலி. அதைக் கொண்டு போய் காசு கொடுத்துச் சாப்பிட வேண்டும். ஒரு டிஃபன் ஐம்பது ரூபாய். ஒரு சாப்பாடு நூறு ரூபாய். மிச்சம் பிடிக்கிற காசு உனக்கு”

பக்கிரி சந்தோஷமாக ஒப்புக் கொண்டான்.

ஜெயிலர் மற்ற ஒன்பது பேரைத் தனியாக அழைத்தார்.

“பக்கிரி கூலியை வாங்கிக்கிட்டு செல்லுக்குப் போகிற வழியில அவனை பிக் பாக்கெட் அடிக்கிறது உங்க வேலை. அவனுக்குத் தெரியவே கூடாது. தினம் ஒருத்தரா இந்த வேலையைச் செய்யணும், யார் எப்ப பண்றீங்கன்னு தெரியக் கூடாது. தெரிஞ்சா உங்க யாருக்கும் சோறு கிடையாது” என்றார்.

அவர்கள் இந்த தொழில் சவாலை ஏற்றார்கள்.

முதல் நாளே பக்கிரி பிக்பாக்கெட்டில் காசை விட்டான். எவ்வளவு கெஞ்சியும் அவனுக்கு இலவசமாய் டிஃபன் தரவில்லை. பசியில் அவனைத் துடிக்க விட்டு கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்ச விட்டு அப்புறம் துளியூண்டு சாப்பிடத் தந்தார்கள்.

அவன் சாப்பாடு கிடைக்காமல் தவிப்பதை மற்ற ஒன்பது பேரும் பார்த்துக் கொண்டிருந்தாலும் வேறு வழியில்லை. ஆட்டத்துக்கு ஒப்புக் கொள்ளா விட்டால் ஒன்பது பேர் பட்டினி! அதை விட ஒருத்தன் பட்டினி பரவாயில்லையே!

எல்லோரும் விடுதலை ஆகும் அன்று ஜட்ஜ் ஜவர்லால் வந்தார்.

“சட்டத்தையோ, தண்டனையையோ கடுமையாக மாற்றுகிற அதிகாரம் எனக்கில்லை. ஆனால் ஜெயில் வழக்கங்களை முன் அனுமதியோடு பரிட்சார்த்தமாக மாற்றும் அதிகாரம் ஜெயிலருக்கு உண்டு. உங்கள் மனப்பாங்கு இப்போது எப்படி இருக்கிறது?” என்றார்.

“ஒரு நாள் முழுக்க கஷ்டப்பட்டு சம்பாதிச்சதை ஒரு செக்கண்டில தட்டிக்கிட்டு போறது எவ்வளவு அக்கிரமம்ன்னு இப்போ புரியுது, இனி பிக்பாக்கெட் அடிக்க எனக்கு மனசு வராது” என்றான் பக்கிரி.

“பிக் பாக்கெட் கொடுத்தவன் பசியில துடிக்கிறதைப் பார்க்க சகிக்கல்லை. செத்தாலும் இனிமே பிக்பாக்கெட் அடிக்க மாட்டோம்” என்றார்கள் மற்ற ஒன்பது பேரும்.

ஜட்ஜ் ஒரு திருக்குறள் அபிமானி. வள்ளுவர் சொன்னதைத்தான் அவர் செய்தார்.

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்

ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து

குற்றம் செய்யப்பட்ட சூழ்நிலையை ஆராய்ந்து, குற்றவாளி மீண்டும் அத்தகைய குற்றத்தைச் செய்யாத வண்ணம் தண்டனை வழங்குகிறவன்தான் சிறந்த அரசன் ஆவான்

புத்திசாலித்தனமான உழைப்பு பேசாலைதாஸ்

புத்திசாலித்தனமான உழைப்பு பேசாலைதாஸ் 

ஒரு ஊரில் , ஒரு ராஜா !

ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.

அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.

இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர்'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.

இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.

மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான்; அதற்கு இவ்வளவு அலங்காரமா!''

தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!''

கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.

மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.

மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி,புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.

படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் ''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''

''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''

''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''

''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''

''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''

''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!

இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.

மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!

நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.

இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றான் மன்னன்.

ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?

பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.

ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.

இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!

அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும்,திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே !

கிளி சொன்ன ஞானம்

கிளி சொன்ன ஞானம் பேசாலைதாஸ் 


ஒரு பெரியவர் தவம் செய்து கொண்டிருக்கும்போது அவருக்கு அருகில் ஒரு கிளி இருந்துகொண்டு அவரை கவனித்து “நீங்கள் ஞானி” என்று திரும்ப திரும்ப கூறிக்கொண்டே இருந்தது.

அதைக் கேட்ட பெரியவர் தான் ஞானி இல்லை.

இப்போது தான் நான் தவம் செய்யும் முறையை பயின்று கொண்டிருக்கிறேன் என்று கூறினார்.

ஆனாலும் தொடர்ந்து அந்த கிளி அவரை ஞானி என்று கூறிக் கொண்டே இருந்தது.

சிறிது காலம் தவம் செய்த பின் பெரியவருக்கும் கிளி கூறுவதில் உண்மை என்றே நினைத்தார்.

அதனால் அடுத்த நாள் கிளி ஞானி என்று கூறும்போது ஆம் நான் ஞானி தான். தவம் செய்து ஞானத் தன்மை அடைந்துவிட்டேன் என்ற செய்தியை கூற வேண்டும் என்று எண்ணினார்.

அடுத்த நாள் அதேபோல் தவம் செய்ய ஆரம்பித்தவுடன் பெரியவர் அருகில் கிளி வந்தமர்ந்தது.

பெரியவர் கிளி எப்போது ஞானி என்று சொல்லும் என்று எதிர்பார்த்துக்கொண்டு இருந்தார்.

வெகு நேரமாகியும் கிளி சொல்வே இல்லை.

பொறுமை இழந்த பெரியவர் தானே கிளியிடம் நீ கூறுவது உண்மை தான். நான் ஞானி என்று என்னை உணர்ந்து கொண்டேன் என்றார்.

அதைக் கேட்ட கிளி உடனே நேற்றுவரை 

நீங்கள் ஞானி தான், ஆனால் இன்று நீங்கள் ஞானி இல்லை என்று கூறியது.

இதைக் கேட்ட பெரியவர் மிகவும் திடுக்கிட்டார்.

பெரியவர் மட்டுமா திடுக்கிட்டார். இதை படிக்கும் நாமும் தானே......!!!

இது கற்பனை கதை என்றாலும் ஆழமான உள் அர்த்தம் இருப்பதை கவனிக்க வேண்டும்.....!!!

யாரோவர் தன்னை ஞானி என்று பறைசாற்றிக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறாரோ அவர் ஞானத் தன்மையை அடையவில்லை என்பதே நிதர்சனமான உண்மை......!!!

கல்வி கல்விதான்.

கல்வி கல்விதான்பேசாலைதாஸ்

‘‘அப்பா, உங்க கிட்ட ஒண்ணு கேக்கணும்’’ என மகன் ஆரம்பித்தான். அவனுக்கு 10 வயது இருக்கும்.

‘‘சொல்லுப்பா?’’

‘‘நீங்க படிச்சது பி.எஸ்ஸி கெமிஸ்ட்ரியா?’’

‘‘ஆமா. ஏன் கேக்குறே?’’

‘‘கெமிஸ்ட்ரி படிச்சிட்டு ஏன் மரக்கடை வச்சிருக்கீங்க?’’

‘‘ஏன்... வைக்கக்கூடாதா?’’

‘‘வைக்கலாம். ஆனா உங்க படிப்புக்கும் நீங்க செய்யற வேலைக்கும் சம்பந்தமே இல்லையே அப்பா!’’

‘‘சரி, இப்ப நீ சைக்கிள் ஓட்டுறேதானே... அது எப்படி ஓடுகிறது?’’

‘‘அது டயர் இருக்கறதால ஓடுதுப்பா!’’

‘‘அந்த டயர்ல காத்து இல்லன்னா என்னவாகும்?’’

‘‘சைக்கிளை ஓட்ட முடியாது.’’

‘‘சரி, இப்படி காற்று அடைக்கிற சைக்கிள் டயரை முதன்முதலில் கண்டுபிடித்தவர் யார்... சொல்லு!’’

‘‘ஸ்காட்லாந்தை சேர்ந்த ஜான் டன்லப் என்ற விஞ்ஞானிதான் அதைக் கண்டுபிடித்தவர் அப்பா.’’

‘‘சரியான விடை. காற்று அடிக்கும் வகை சைக்கிள் டயரைக் கண்டுபிடித்தவர் ஜான் டன்லப்தான். ஆனால், அவர் விஞ்ஞானி கிடையாது. அவர் ஒரு கால்நடை மருத்துவர். அவருக்கும் டயருக்கும் சம்பந்தமே கிடையாது. அவர் தன் மகனின் முச்சக்கர சைக்கிளை வேகமாக நகர வைக்க என்ன வழி என்று யோசித்தார். இந்த காற்று அடைக்கும் டயரைக் கண்டறிந்தார்.

அதைப் பயன்படுத்தும்போது சைக்கிள் வேகமாக ஓடியது. அந்த காற்று அடைக்கும் டயர் முறை பிரபலமாகி, அதைக் கண்டுபிடித்த பெருமையும் ஜான் டன்லப்புக்கு வந்து சேர்ந்தது.’’

‘‘இந்த புதிய தகவல் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது அப்பா.’’

‘‘ஆமாம். இதைக் கேட்கும் அனைவருக்கும் ‘கால்நடை மருத்துவரா காற்றடிக்கும் டயரைக் கண்டுபிடித்தார்’ என்று ஆச்சரியமாக இருக்கும். ஜான் டன்லப் தான் கற்ற கல்வியை ஒரு துறை சார்ந்த கல்வியாக பார்க்கவில்லை.

எந்த விஷயத்தையும் கூர்ந்து கவனித்து ஆராயும் முறையைத்தான் அவர் கல்லூரியில் கற்றுக் கொண்டதாக நினைத்தார். அதனால்தான் தன் மகனின் சைக்கிளைக் கூட தனது துறையைச் சார்ந்ததாக இல்லாவிட்டாலும் கூர்ந்து கவனித்து ஆராய்ந்து காற்றடிக்கும் டயரைக் கண்டுபிடித்தார்.’’

‘‘புரிகிறது அப்பா!’’

‘‘நான் பி.எஸ்ஸி கெமிஸ்ட்ரி படித்துவிட்டு மரக்கடை வைத்திருக்கலாம். ஆனால், கெமிஸ்ட்ரியை எப்படி ஆராய்ந்து புரிந்து படித்தேனோ, அதே யுத்தியைத்தான் வியாபாரத்திலும் செயல்படுத்துகிறேன். அந்த வகையில், நான் கற்ற கல்வி எனக்கு மிக உபயோகமாக இருக்கிறது.

எந்த துறையைப் படித்தாலும், கல்வி கல்விதான். அது நம் அறிவை வளர்த்து நன்மையைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். ஆகையால் எந்த துறையானாலும் விருப்பத்துடன் படிக்க வேண்டும்’’ என்று அப்பா சொல்லி முடித்தார்.

Monday 28 August 2023

காவி

 1983 இலங்கை இன கலவரத்துக்கு பின்பும் கிளிநொச்சியில் புலிகள் மற்றும் போராட்ட இயக்கங்களுக்கு மத்தியில் கண்டி பிரதான சாலைக்கு அருகில் சிங்கள மகா வித்தியாலயம் இயங்கி கொண்டிருந்தது. ஒரு புத்த பிக்குவும் அருகில் இருந்தார். முழு தமிழர்கள் நிறைந்த தெருவில் ஒரு சிங்களவரும் இல்லாத தெருவில் பிக்கு குடை பிடித்தபடி நடந்து போய் வந்து கொண்டிருந்தார். அவர் அருகில் தமிழ் பிள்ளைகள் கூட சென்று வந்தனர்.அந்த காவி நிறம் எங்கள் தெருவுக்கு மிக அழகாக இருந்தது. காவி எப்போது அழகாக இருந்ததெனில் அப்போது தான்.

கிளிநொச்சி கரடி போக்கு சந்திக்கு அருகில் போர் தொடங்கிய பின்னரும் அரச மரம் புத்த பகவான் சிலை இருந்தது. அதை ஆக்கிரமிப்பு சின்னமாக நினைத்து போராளிகள் உடைத்து எறிந்ததை நான் காண வில்லை. புத்தர் சிலை எப்போது ஆக்கிரமிப்பு சின்ன மாறுகிறது இந்த கேள்விகளுக்கு பதில் தேட வேண்டியது தென் இலங்கையே.
அந்த புத்த பிக்கு தன் வீட்டில் இருந்து தமிழ் சனங்களுக்கு ஓதி நீர் தெளித்து ஆசீர் வதித்தார். அந்த அன்புக்காக கிளிநொச்சி பிள்ளைகள் கிளிநொச்சி குளத்தில் தாமரை மலர்கள் பறித்து சென்று பிக்குவுக்கு கொடுத்து அவர் தமிழில் மகிழ்ந்தனர்.
நல்ல நினைவு இருக்கிறது நானும் என் தாயாரும் சென்று. பிக்குவிடம் மருந்து எண்ணெய் பெற்று அவரிடம் நூல் கட்டி கொண்டோம். அந்த நூல் ஒரு விஷ பாம்பு போல் கை களில் தோன்ற வில்லை.
பிறகு கிளிநொச்சி பெரும் போரின் போது தமிழ் மக்களோடு அந்த பிக்குவும் அகதியாக நடந்து கொண்டிருந்தார்.இப்போதும் நாம் எதிர் பார்ப்பது அவரை போல தமிழ் மக்களை புரிந்து கொண்ட ஒரு பிக்கு கூட நடந்து வர வேண்டும் என்பதையே அந்த அன்பின் பிரதி உப கார மான தாமரை மலர் கள் இப்போதும் எங்களிடம் உண்டு.

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்  ஆசைகாட்டி மக்களை தூண்டி தம் காரியங்களை சாதிக்கும் பல மக்களை நாம் நிஜவாழ்வில் சந்தித்து இருக்கின்றோம்,...