பின் தொடர்பவர்கள்

0191 விளக்கே நீ கொண்ட ஒளி நானே! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0191 விளக்கே நீ கொண்ட ஒளி நானே! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 30 ஜூன், 2015

0191 விளக்கே நீ கொண்ட ஒளி நானே!

விளக்கே நீ கொண்ட ஒளி நானே!
அறிவு அதனை நாம் அனுபவத்தாலும், கற்கையாலும் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் ஞானமோ அப்படியல்ல, தன்னை அறிய முனை வதும், தான் உருவாக அடிப்ப டையாக இருந்த படை ப்பின் சுட்சுமத்தை அறிய முயல்வதே ஞானத்தேடல் ஆகின்றது. அறிவாளிகள் எல்லோரும் ஞானிக ளாக இரு ப்பதில்லை ஆனால் ஞானிகள் அறிவாளியா கின்றார்கள். ஞானத்தை அறிய அறிவு தேவையில்லை ஆயினும் ஞானம் அத்தனை அறிவையும் தருகின்றது. பைபில் சொல்கின்றது. "கடவுள் அறிவாளிகளுக்கும், மேதைகளுக்கும், ஞானத்தை மறை த்து, குழந்தைகளுக்கும், அறிவற்றவர்களுக்கும் வெளிப்படுத்துகி ன்றார் "என்று. அறிவுடையோர் உலக செலவங்களின் மீது பற்றுள்ள வர்களாக இருக் கின்றார்கள் ஆனால் ஞானிகளோ உலக பற்று அற்றவர்களாக , எதுவுமற்றவர்களாக இருக்கின்றனர். சாலமோன் எண்ர மன்னன், ஞானத்தின் உறைவிட மாக இருந்ததாக பைபிள் சொல்கின்றது. " காட்டுப் புஷ்பங்களைப்பாருங்கள் அவை எவ்வளவு அழகாய் இருக்கின்றன. சாலோமோன் மன்னன் கூட, தன் மாட்சி மையில், இவ்வாறு உடுத்தியதில்லை" என்று கூறும் இயேசு, " சாலா மோனின் ஞானத்தை கேட்க, உலகின் பல பாகங்களிள், இருந்து மக்கள் வந்தார் கள், இதோ சாலமோனின் ஞானத்தைவிட மேலான ஞானம் இங்கே இருக்கின்றது" என்று தன்னை வெளிப்படுத்துகி ன்றார் இயேசு. சாலமோன் மன்னன் ஞானம் நிரம்பியவராகவும் இருக்கலாம், அதே வேளை இராச்சியத்தின் அதன் செலவத்தின் மீது ஆட்சியாளராகவும் இருக்கலாம், ஆனால் பதவி மீதோ, அல்லது செலவத்தின் மீதோ பற்றுவைத்தி ருந்தாரா? என்பதுதான் இங்குள்ள கேள்வி? பற்றுக பற்றற்று என்று வள்ளுவர் சொல்ல விழைந்தது இதைத்தான். ஒருமுறை மட ஆதீனத்தில் சாமியார் ஞானம் பற்றி விளக்கவுரை நடத்திக்கொண்டிருந் தார். ஒரு சமான்யமான மனிதன் எழுந்து " சாமி யாரே! அறிவுக்கும், ஞானத்திற்கும் உள்ள வேறு பாடு என்ன?" என்று கேட்கின்றான். அதற்கு அந்த சாமியார் " உனக்கு அறிவிருந்தால், வழியை அறிய, விளக்கை உபயோகப்படுத்துவாய். உனக்கு ஞானம் இருந்தால், நீயே விளக்காகி மற்றவர்களுக்கு ஒளி யாவாய்" என்றார். நாம் ஒளியாய் பிரகாசிக்க வேதங்கள் அழைக்கி ன்றன. ஞானம் சொகின்றது "விள க்கே நீ கொண்ட ஒளி நானே! முள்ளும் நானே! மலர் நானே!"                                                        மலராக, ஒளியாக துடிக்கும் பேசாலைதாஸ்

கேள்விக்கு மட்டும் பதில்

 கேள்விக்கு மட்டும் பதில் பேசாலைதாஸ் ஒரு முறை ஒரு இளைஞன் ஒரு கிராமப்புற பெண்ணை பெண் பார்க்கச் சென்றான். அவனுக்கு அந்தப் பெண்ணை மிகவும் பிடித...