பின் தொடர்பவர்கள்

0338 எந்நிலையிலும் காண்பவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0338 எந்நிலையிலும் காண்பவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

0338 எந்நிலையிலும் காண்பவன் ஒருபோதும் மாறுவதில்லை!.

எந்நிலையிலும் காண்பவன் ஒருபோதும் மாறுவதில்லை!. 
ஒரு சமயம் ஜனக மகாராஜன் ஒரு கனவு கண்டான். கனவில் அவன் வறியவனாகவும் நீண்ட நாள் பசியில் வாடுவதாய் கண்டான். தனது பிச்சை பாத்திரத்தை கூட ஏந்தும் வலுவு கூட அவன் கைகளுக்கு இல்லை ! ஒரு மகராசி இட்ட உணவை கைகளிலிருந்து கீழே தவறவிட்டார். அருகில் இருத்த நாய் ஒன்று அந்த உணவில் வாய் வைத்து விட்டது .இதை கண்ட அவருக்கு ஆற்றொணாத கோபமும் அழுகையும் வந்துவிட்டது ! கதறி அழுதவாறு படுக்கையிலிருந்து கீழே விழுந்தார். திடுக்கிட்டு விழித்தார். தான் ஒரு மன்னனாயும் தன் அருகே அறுசுவை உணவு இருப்பதையும் காண்டார்.
கனவில் அவர் கண்ட காட்சிகளும் காணும் வரை உண்மை என்பதையும் உணர்ந்தார். எது உண்மை? என்ற கேள்வி அவர் மனதில் எழுந்தது ! வசிஷ்டரிடம் தனது நிலையை விளக்கி ஐயனே! கனவு - நினைவு இதில் எது உண்மை என கேட்டார்.அதற்கு வசிஷ்டர் ஜனகனே ! எந்நிலையிலும் காண்பவன் ஒருபோதும் மாறுவதில்லை!. காட்சிகளே மாறுகின்றன என்பதை அறிந்துகொள். நீ கண்ட கனவிலும் நினைவிலும் அனுபவிப்பவன் ஒருவனே! அவன் ஒருபோதும் மாறுவதில்லை! அனுபவங்கள் மாத்திரமே மாற்றம் அடைகின்றன,அனுபவிப்பவனாகிய நீ ஒருபோதும் மாறுவதில்லை! எனவே காண்பது ஒருவனே! அந்த மாற்றம் அடையாத தன்மையில் நீ எப்போதும் நிலைதிருப்பாயாக! என ஆசிர்வதித்தார்.
 அன்புடன் பேசாலைதஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்  ஆசைகாட்டி மக்களை தூண்டி தம் காரியங்களை சாதிக்கும் பல மக்களை நாம் நிஜவாழ்வில் சந்தித்து இருக்கின்றோம்,...