பின் தொடர்பவர்கள்

0018 நம்மை நாமே செதுக்குவோமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0018 நம்மை நாமே செதுக்குவோமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 ஜூன், 2015

0018 நம்மை நாமே செதுக்குவோமா? பேசாலைதாஸ்

நம்மை நாமே செதுக்குவோமா?      பேசாலைதாஸ் 

அன்பர்களே உங்களை மற்றவர்கள் அற்பம் என் நினைக்கின்றார்களா? கவலை வேண்டாம் இயற்கை இறைவனுக்கு முன்னால் நாம் அற்புதமானவர்கள், ஆனால் அது நமக்கு புரிவதில்லை, காரனம் நமக்குள் இருக்கும் சோர்வு, தாழ்வு சிக்கல், அவநம்பிக்கை என்பன நமக்குள் இருக்கும் அற்புதத்தை மழுங்கச்செய்கின்றது. யார் எது சொன்னாலும் கவலைப்படாதே, எனக்கு சரி என்று எது தெரிகின்றதோ அந்த பாதையில் நடந்து செல், உன் அற்புதம் உனக்கு விளங்கும். அதற்கு நாம் செய்யவேண்டியது, நம்மை நாமே செதுக்குவது, நம்மை நாமே செதுக்கிக்   கொண்டால் அற்புத மனிதராக மாறிவிடு வோம், அதற்கு நாம் செய்யவேண்டிது ஒன்றே உளியை கையில் எடுப்போம் வேண்டாத குணங்களை உளி கொண்டு அப்புறப்படு த்துவோம் அதற்காக அற்புதமான ஒரு கதை சொல்கின் றேன் கேளுங்கள்! 

                                           அற்புதமான சிற்பி ஒருவர், ஒருநாள் தெருவில் போய்க்கொண்டிருந்தபோது ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார். ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி அவருக்கு. அதன்பின் அந்தக் கடைக் காரரிடம், 'ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக் குத் தேவையா அல்லது இதை நான் எடுத்துச் செல்லலாமா?' என்று கேட்டார். 'தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள். இது இந்த இடத்தில் பெரிய இடையூறாய்க் கிடக்கிறது. போவோர் வருவோரெல்லாம் இடறி விழுகின்றனர்! என்றார் கடைக்காரர். 

                                                 பாறாங்கல்லை உருட்டிச் சென்ற அந்தச் சிற்பி, அதை நுட்பமாகச் செது க்கி அற்புதமான கடவுள் சிலை ஒன்றை உருவா க்கினார். அந்தச் சிலை கடைத்தெருவில் விலை க்கு வந்தது. போட்டி போட்டுக் கொண்டு மக்கள் அதை விலைக்குக் கேட்டனர். அப்படிக் கேட்டவர் களுள் கல்லைக் கொடுத்த கடைக்காரரும் ஒரு வர். முடிவில் அந்தக் கடைக்காரரே அதிக விலை கொடுத்து அந்தச் சிலையைப் பெற்றுக் கொண்டார். 

                                       அந்தச் சிற்பியை மறந்துவிட்ட அந்தக் கடைக்காரர், 'இந்த அற்புதமான சிலை க்குரிய கல்லை எந்த மலையிலிருந்து எடுத்து வந்தீர்கள்?'… என்று கேட்டார். அதற்குச் சிற்பி, 'வேறு எங்கிருந்தும் இல்லை. தங்கள் கடை வாச லில்தான் இதைக் கண்டெடுத்தேன். என்னை நினைவில்லையா தங்களுக்கு? ஆறு மாதங் களுக்குமுன் இடையூறாய்க் கிடக்கிறது என்று சொல்லி என்னிடம் நீங்கள் கொடுத்த கல்தான் இது என்றார். கடைக்காரர் வியந்தார். தங்கள் பார்வையில் இது தடைக்கல்லாய்த் தெரிந்தது. என் பார்வையில் கடவுளைப் பொதிந்து வைத்தி ருக்கும் சிற்பக் கல்லாய்த் தெரிந்தது. வேண் டாத பகுதியையெல்லாம் செதுக்கி எடுத்தேன். உள்ளே இருந்த கடவுளின் உருவம் வெளிப்ப ட்டது!' என்றார் சிற்பி. ஆம். நாமும் வாழ்வில் தேவையற்ற வார்த்தைகளை நீக்கினால் விலை மதிப்பற்ற மனிதராய் வாழ்ந்து காண்பிக்க லாம்.  அன்புடன் பேசாலைதாஸ் 


துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...