பின் தொடர்பவர்கள்

0417 நான் நானாக‌ இருக்கும் வரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0417 நான் நானாக‌ இருக்கும் வரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

0417 நான் நானாக‌ இருக்கும் வரை,,,,,

நான் நானாக‌ இருக்கும் வரை,,,,,

அன்பர்களே!  நாம் நாமாக இருக்கும் வரை நம்ம்க்கு தொல்லைகள் கவலைகள் இருப்பதில்லை எப்பொழுது மற்றவர்க ளோடு நம்மை ஒப்பிடுகின்றோமோ அப்பொழுதே நமக்கு பிரச்சினைகள்  ஆர ம்பமாகின்றன. ஒப்பிடுவதால் தாழ்வு எண்ணம் அல்லது ஆணவம், தலைக்க ணம்  தொற்றிக்கொள்ளும். அதுவும் இல்லாவிட்டல் கவலைகள் பற்றிக்கொ ள்ளும்.  நீங்கள் ஆறடி உயரம் என்று வைத்துக்கொள்வோம். ஐந்தரை அடி க்குமேல் உயராதவர்கள் மத்தியில் இரு க்கும்போது, உயரமானவர் என்ற எண்ணம் உங்களுக்குள் எழும். உயரமா னவர் போலவே நடப்பீர்கள். உயரமான வர் போலவே உட்காருவீர்கள். உயரமா னவர் போலவே ஓடுவீர்கள். திடீரென்று உங்களை நாடு கடத்திப் போய் வேறொரு சமூகத்தில் விடலாம். அங்கே, குறைந்தபட்ச உயரமே எட்டடியாக இருந்தால், அந்தச் சமூகத்தில் திடீரென்று நீங்கள் குள்ளமானவராக உணர்வீர்கள். குள்ளமானவர் போலவே நடப்பீர்கள். குள்ளமானவராக உணர்ந்தே அமர்வீர்கள். புலன் உணர்வு மூலம் மனிதன் ஏற்படுத்திக்கொள்ளும் தீர்மான ங்கள் பெரும்பாலும் ஒன்றுடன் ஒன்றை ஒப்பிட்டுப் பார்த்தே அமைகின்றன. உண்மையில் அது உண்மையை அப்படியே ஏற்காமல் உங்கள் தீர்மானத்தை அதன் மீது திணிப்பதாக இரு க்கிறது. அன்றாட வாழ்வை நடத்துவதற்கு மட்டுமே ஒப்பிட்டுப் பார்ப்பது தேவைப்படுகிறது. ஆறடியாக இருந்தாலும், எட்ட டியாக இருந்தாலும் நீங்கள், நீங்கள்தானே..?

                                                          நீங்கள் ஒரு யானையாக இருக்கும்போது, சிங்கம், சிறு மிருகமாகத் தெரியும். நீங்கள் எலியாக இருக்கு ம்போது, அதே சிங்கம் பெரிய மிருகமாகத் தோன்றும். எறும்புக்கு அந்த எலியே பெரிய மிருகமாகத் தோன்றும். ஒன்றைத் தொட்டு ப் பார்த்து, அது குளுமையாக இருக்கிறது என்றால், அதைத் தொ ட்டுப் பார்ப்பவரின் உடல் அதைவிட அதிக உஷ்ணத்துடன் இரு க்கிறது என்பதுதானே உண்மை..? இப்படி ஒப்பிட்டுப் பார்ப்பது என்பது உண்மையாக உணர்வது ஆகாது. வாழ்க்கையை, உயிரை, அதன் உண்மையான பரிமாணத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், இது உயர்வு, இது தாழ்வு, இது உயரம், இது குள்ளம், இது அழகு, இது குரூரம், என்று ஒப்பிட்டு, தீர்மானங்க ளுக்கு வருவதை விட்டொழிக்க வேண்டும். புத்தரின் ஞானத்தை தேடிய ஒரு மனிதனின் கதை இது!


                                                                             புத்தரின் வாழ்க்கையைப் பற்றி மற்றவரிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொண்ட ஒருவனுக்கு அவ ரைப் போன்ற உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற பேர வா தோன்றியது. எத்தனையோ குருமார்களைச் சந்தித்து, இது பற்றி விசாரித்தான். அவர்கள் கொடுத்த விளக்கங்கள் அவனு க்குப் போதுமானதாக இல்லை. . அவனுடைய தவிப்பைப் பார்த்து, “அந்த மலை உச்சியில் புத்தரைப் பற்றி முழுமையாக உணர்ந்த ஒரு குரு வாழ்கிறார். அவரிடம் சென்று உன் சந்தே கத்தைக் கேள்..” என்று யாரோ சொன்னார்கள். கடினமான மலை ப்பாதையில் பயணம் செய்து, இறுதியில் உச்சியில் இருந்த குரு வின் குடிலுக்குச் சென்றான். அங்கு ஏற்கெனவே, பல சீடர்கள் இருப்பதைக் கவனித்தான். அவர்களுடன் குரு பேசிக்கொண்டி ருந்தார். இவனைப் பார்த்ததும், அருகில் அழைத்தார். “என்ன வேண்டும்..?” “புத்தரின் போதனைகளைப் புரிந்துகொள்ள அலைந்து கொண்டிருக்கிறேன். எத்தனையோ ஆசான்களைச் சந்தித்தேன். யாரும் முழுமையாக என் சந்தேகத்தைத் தீர்க்கவி ல்லை. அவர்களைவிட நீங்கள் சிறப்பாக சொல்வீர்கள் என்று கேள்விப்பட்டு இங்கே வந்தேன். “அப்படியா..? உட்கார்.. இவர்க ளெல்லாம் போன பிறகு சொல்கிறேன்..” என்றார்  குரு. வந்தவனு க்கு மனம் நிறைந்துபோனது. இத்தனை சீடர்கள் இவரைச் சூழ்ந்திருக்கிறார்கள் என்றாலே மற்ற குருமார்களைவிட இவர் சிறப்பானவர் என்றுதானே அர்த்தம்..? ஒவ்வொரு சீடரிடமும் ஏதோ பேசி அனுப்பிவிட்டு குரு இறுதியில் இவனிடம் வந்தார். “என்னுடன் வா..!” என்றார். மலைச்சரிவில் அவனைச் சற்று தூரம் அழைத்துச் சென்றார். குறிப்பிட்ட இடம் வந்ததும், எதிரில் வள ர்ந்திருந்த தாவரத்தைக் காட்டினார். “இது என்ன..?” என்றார். “மூங்கில் மரம்..” அருகருகே இருந்த மூங்கில்களைக் காட்டினார். “இதைப் பார்த்ததும், உனக்கு என்ன தோன்றுகிறது..?” என்றார். “இந்த மூங்கில் உயரமாய் இருக்கிறது. அந்த மூங்கில் இன்னும் வளராமல் குட்டையாக இருக்கிறது..” என்றான் அவன். “இவை மூங்கில்கள்..” என்று சொல்லிவிட்டு, குரு திரும்பி நடந்தார்.


                                                                 இந்த கதையில் இருந்து  உங்களுக்கு என்ன புரிகின்றது? நெட்டையாக இருந்தாலும், குட்டையாக இரு ந்தாலும் அவை யாவும் மூங்கல் மரங்களே! எனவே நாம் யாராக இருந்தாலும், நாம் மனிதர்கள் என்ற எண்ணத்தில் மனித நேயம் காப்போம் வாருங்கள்! 
அன்புடன் அழைப்பது உங்கள் பேசாலைதாஸ்

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...