பின் தொடர்பவர்கள்

0500 பொறுத்தார் பூமியாளவார்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0500 பொறுத்தார் பூமியாளவார்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 20 ஜனவரி, 2018

0500 பொறுத்தார் பூமியாளவார்!

பொறுத்தார் பூமியாளவார்!
அன்பர்களே இந்த அவசரமான உலகினிலே யாவும் மிகவும் சீக்கி ரம் நடக்கவேண்டும் என்று எதிர்பா ர்க்கின்றோம். கடவுளிடம் நமது கஸ்டங்களை சொல்லி, பிரார்த்தி க்கும் பொழுதும், கடவுள் நமது மன்ராட்டை கேட்டு உடனடியாக உதவி செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். பொறுமை என்பது மருந்துக்கும் கூட கிடையாது. பொறுமை காக்கத் தெரியாத என்னைப்போன்ற ஒரு அண்ணனுக்கு அவனது தம்பி, பொறுமை பற்றி மிக எளிதான கதை என் கற்பனைக்கு வந்தது,,,பேசாலை என்ற‌ ஊரில் வாழ்ந்து வந்த அண்ணன் தம்பிகளில், தம்பி சமர்த்தானவர், அண்ணன் சற்று சோம்பேறி. என்னைப்போல, ஒரு நாள் இருவரும் காட்டுக்கு பன ங்காய் பொறுக்கச் சென்றனர். இருவரும், காலையிலிருந்து மதியம் வரை கஷ்டப்பட்டு பனக்காய் பொறுக்கி, அவற்றை இரு பகுதிகளாக பிரித்தனர். அதன் பின்னர் அண்ணனும், தம்பியும் பனங்காய்களை பெட்டியில் வைத்து அதை தலையில் வைத்துக் கொண்டு நடக்கலாயி னர். சிறிது தூரம் நடந்து சென்றவுட னேயே, பனங்காய்ப்பெட்டி, பார மாக இருக்கிறதே என்று புலம் பிக் கொண்டே நடந்தார் அண்ணன். ஆனால் தம்பி எதுவுமே சொல்லாமல் நடந்து கொண்டிருந்தார். இதைப் பார்த்த அண்ணன், இருவரின் சுமையும் ஒரே அளவில்தானே இருந்தது, ஆனால் தம்பி எதுவும் சொல்லாமல் எளிதாக நட ந்து வருகிறாரே என்று சிந்தித்தார். பின்னர் தம்பியி டம், உனக்கு பனக்காய்ப்பெட்டி பாரமாக இல்லையா? என்று கேட்டார். அதற்குத் தம்பி, இல்லை, எனது சுமை பார மாக இல்லை, ஏனெனில் நான் அதில் ஒரு மூலிகை இலையை வைத்திரு க்கிறேன் என்று சொன்னார். அப்படியா! அந்த மூலிகை இலை என்ன வென்று சொன்னால் நானும் எனது சுமையில் வை த்துக் கொள்கிறேன் என்றார் அண்ணன். அதற்குத் தம்பி, அந்த மூலிகை இலையின் பெயர் பொறுமை என்றார்  தம்பி. ஆம் அன்பர்களே அந்த தம்பி சொன்னது போல‌. வாழ்வில் ஏற்படும் இன்னல்களை, இடை யூறுகளை, தடைகளை, கடுகளவும் சினமுறாது, இன்முகத்துடன் அவற்றை ஏற்று பொறுமையு டன் நடந்தால் வாழ்வில் வெற்றியை அடையலாம் அன்புடன் பேசாலைதாஸ்

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...