பின் தொடர்பவர்கள்

0513 எங்கள் பிதாவே! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0513 எங்கள் பிதாவே! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 29 மார்ச், 2018

0513 பரலோகத்தில் இருக்கின்ற எங்கள் பிதாவே!

பரலோகத்தில் இருக்கின்ற எங்கள் பிதாவே! 
அது ஒரு தனிமையான தீவு, அங்கு மனிதர்கள் யாருமே வசிப்பதில்லை ஆனால் மூன்று மனிதர்கள் மட்டும் அந்த தீவில் வசித்து வந்தார்கள். பார்ப்பதற்கு அவர்கள் சித்தர்கள் போல இருந்தார்கள். பேசுவதுக்கு மொழி கூட தெரியாத காட்டு வாசிகளாக பலகாலமாக வாழ்ந்துவந்தார்கள்.ஒரு முறை அந்த தீவை அண்மித்து சென்ற கப்பல் ஒன்று பழுதடைந்த நிலையில் அந்த தீவுக்கு அருகாமையில் நங்கூரம் இட்டு தரித்து நின்றது. அந்த கப்பலில் ஒரு கத்தோலிக்க குருவானவர் இருந்தார். அவர் ஒரு சிறு படகு மூலம் அந்த தீவை சுற்றி பார்க்க சென்றார். அந்த தீவிலே இந்த மூன்று மனிதர்களையும் கண்டு அவர்களுக்கு ஒரு வாரகாலமாக அந்த தீவிலே தங்கி, அவர்களுக்கு வேதம் போதித்தார்.  அவர்கள் எளிதில் எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள். கடைசியில் பரலோகத்தில் இருக்கின்ற எங்கள் பிதாவே என்ற அந்த செபத்தை கற்றுக்கொடுத்தார். பின்னர் கப்பல் புறப்படும் நேரம் வந்ததும் அந்த தீவை விட்டு கப்பலுக்கு சென்றுவிட்டார். கப்பல் புறப்பட இருந்த அந்த இராத்திரியில், அந்த மூன்று பேர்களும், கடல் மீது நடந்து வந்து, கப்பலுக்கு அருகில் நின்று, எங்களுக்கு மீண்டும் பரலோகத்தில் இருக்கின்ற எங்கள் பிதாவே என்ற செபத்தை சொல்லித்தாருங்கள், நாங்கள் மறந்துவிட்டோம் என்றார்கள். அவர்கள் கடல் மீது நிற்பதை பார்த்த அந்த குரு, அதிர்ச்சி அடைந்து, ஞானிகளாக வாழ்ந்த மனிதர்களை பார்த்து. இனி அது உங்களுக்கு தேவை இல்லை. நீங்கள் தீவில் வாழ்ந்ததுபோலவே வாழுங்கள் என்று சொல்லி திருப்பி அனுப்பிவைத்தார். இயற்கையோடு ஒன்றிந்து வாழ்பவர்கள் இறைவனைப்போலவே வாழ்வார்கள் என்பதற்கு இந்த மூன்று மனிதர்களுமே நல்ல உதாரணம்.
யாவும் கற்பனையே  அன்புடன் பேசாலைதாஸ்.

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...