பின் தொடர்பவர்கள்

0178 ஆன்மாவின் தேடல்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0178 ஆன்மாவின் தேடல்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 26 ஜூன், 2015

0178 ஆன்மாவின் தேடல்!

ஆன்மாவின் தேடல்!
ஆன்மாக்கள் எல்லாமே இறைவனிடம் இருந்து வந் தவை, அவை எல்லாமே மீண்டும் இறைவனையே நாடிச்செல்ல ஆசைப்படுகின்றன. அதுவே சுவர்க்க இன்பம், வீடுபேறு இன்பம். பேரின்பம் என்றெல்லாம் ஞானிகள் சொல்கின்றார்கள். எல்லா வேதங்களும் சொல்லவிழைவது இதுதான்! எல்லா மனிதர்களா லும் இறைவனை அடைய, காணமுடியும், பிரச்சினை என்னவென்றால் இப் பிறவில் காண்பதுதான், ஒரு சிலர் கண்டிருக்கின்றார்கள். உணர்ந்திருக்கின் றார்கள். இப்பிறவியிலே இறைவனை காண முடியுமா? என்று சீடன் ஒருவன் சந்தேகத்துடன் தன் ஞானியிடம் கேட்டான். அந்த ஞானி அவனைஊருக்குள் அனுப்பி எல்லோரிடம் என்ன வேண்டும் என்று கேட்டு அவரவர் விருப்பங் களை கேட்டுவா என்று அனுப்பினார். சீடன் திரும்பிவந்து அவரவர் ஆசைக ளை விபரித்தான். ஒருவன் சொன்னான் தான் பாராளமன்ற உறுப்பிணராக வேண்டும் என்று, இன்னொருவன் சொன்னான், தான் மந்திரியாகவேன்டும் என்று, இனொருவன் சொன்னான் நான் பெரிய தனவந்தனாக மாறவேண்டும். இப்படியே ஒவ்வொருவரின் ஆசைகளை சீடன் அடுக்கிக்கொண்டே போனான். ஞானி சீடனைப்பார்த்து ஆக ஒருவன் கூட இறைவனை காணவேண்டும் என்று ஆசைப்பட்டது கிடையாது. நீயும் கூட என்றார் ஞானி..இஎத உலகத்தின் ஆசைகள் அப்படித்தான்! இறைவன இணர்ந்தவன் தன்னையே மறந்துவிடுகி ன்றான். தன்னை மறப்பவன் என்னை காண்கின்றான், என்னை காண்பவன் என் தந்தை இறைவனை காண்கின்றான். ஆக மொத்தத்தில் இறைவனை நாம் காணும் போது நாம் இருக்கமாட்டோம் ஏனெனில் நாம் அவருள் ஒன்றாக கலந்துவிடுவோம். கண்டவர் விண்டிலர் என்று சொல்வது இதுதான்.
                                                               பேசாலைதாஸின் சிந்தனையில் இருந்து,,,,,,,,

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...