பின் தொடர்பவர்கள்

0036படிக்காத மேதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0036படிக்காத மேதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 ஜூன், 2015

0036படிக்காத மேதை

படிக்காத மேதை


ஒருநாள் படித்த ஒருவரும், படிக்காத ஒருவரும் அருகருகே அமர்ந்து இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு பந்தயம். பொது அறிவு யாருக்கு அதிகம்? படித்தவருக்கா? இல்லை, படிக்காதவ ருக்கா? என்பதே அப்பந்தயம். இதில் தோற்றவர் அடுத்தவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். “எனக்குப் படிப்பறிவில்லை. நீங்கள் படித்தவர்கள், ஆதலால் நீங்கள் ஒரு கேள்வி கேட்டு அதில் நான் தோற்று விட்டால் உங்களுக்கு நான் இருநூறு ரூபாய் தருகி றேன், அதேசமயம் நான் ஒரு கேள்வி கேட்டு அதில் நீங்கள் தோற்றுவிட்டால் எனக்கு நானூறு ரூபாய் தரவேண்டும், சரியா?” என்று கேட்டார் படிக் காதவர். சரி என்று சொல்லி, முதலில் நீங்களே கேள்வி கேளுங்கள் என்றார் படித்தவர். “ஒரு விலங் குக்கு ஆறுகால்கள், இரண்டு வால்கள், ஒரு கொம்பு. அது என்ன விலங்கு?” என்று கேட்டார் படிக்காதவர். நீண்ட நேரம் ஆராய்ந்தார் படித்தவர். பதில் கிடைக்க வில்லை. எனவே தனது தோல்வியை ஒப்புக் கொண்டு, பந்தயப்படி, நானூறு ரூபாயை எடுத்து நீட்டினார். பந்தயப்படி பணத்தைப் பெற்றுக்கொண் டார் படிக்காதவர். அது சரி, அந்த விலங்கின் பெயர் என்ன? என்று கேட்டார் படித்தவர். இந்தாருங்கள் இருநூறு ரூபாய் என்று பந்தயப் பணத்தை நீட்டி, எனக்கும் அந்த விலங்கின் பெயர் தெரியாது என்று சொன்னார் அறிவுஜீவியான நம் படிக்காதவர்.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...