பின் தொடர்பவர்கள்

0418 தன்னை உணர்வதே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0418 தன்னை உணர்வதே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

0418 தன்னை உணர்வதே நிறைவான இன்பம்!

தன்னை உணர்வதே நிறைவான இன்பம்!

அன்பர்களே, நான் நீங்கள் நாம் எல்லோருமே ஏதோ வாழ்வதற்காக வாழ்கின்றோம் என்ற பிரமையில் இருகின்றோம். மனதுக்கு நிறை வாக வாழ்வது எப்படி என்பதை உணர தவறுகின்றோம் என்று தன் எனக்கு எண்ணத்தோன்றுகின்றது. சாப்பிடும்போது வீட்டை நினை ப்பது, வீட்டில் இருக்கும்போது வேலையை நினைப்பது, வேலையில் இருக்கும்போது, போக்குவ ரத்தை நினைப்பது, பயணம் செய்யும்போது, இரவைப் பற்றி சிந்திப்பது, தூங்கப் போகும்போது, வேறெதிலோ கவனத்தைச் செலுத்துவது, ஏன் மனைவி கூட உடலுறவு கொள்ளும் போது கூட, மனம் துறவறம்  இன்னொன்றை  தேடுகின்றது, தவறுத லாக இல்லறத்தில் நுழைந்தேனோ என்று மனம் அங்கலாய்க்கி ன்றது. அதனால் பெண் இன்பத்திலும் நிறைவு கண்பதில்லை. இப்படியே நமது வாழ்க்கை சுழன்று கொண்டிருக்கிறது. நம் உயிர் என்பதை முழுமையாக உணர வேண்டும் என்றால், செய்வதை முழு ஈடுபாட்டுடன், நூறு சதவிகித அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும். சதா சிந்தனைகளில் சிக்கிப் போனதால், சிந்தனைகளும், உணர்ச்சிகளும்தான் வாழ்க்கை என்று மாறி ப்போய்விட்டது. கோபம், ஆத்திரம், மகிழ்ச்சி, திருப்தி, இந்த உணர்ச்சிகளெல்லாம் , மனதால் உருவாக்கப்படுபவை. உயிரின் உண்மையான உணர்வுகளே நமக்கு    ம‌ ரத்துப் போய்விட்டன. எதையும் அதன் பரிணாமத்தோடு பார்ப்பதில்லை அதில் லஜிப்பதில்லை
                                                 ஆதியோகி என்று நாம் குறிப்பிடும் ஷிவா, மூன்று கண்களைக் கொண்டிருந்தார் என்கிறோம். மூன்றாவது கண் என்பது என்னவோ நெற்றியில் முளைத்த இன்னொரு விழி என்று தவறாக அர்த்தம் செய்துகொள்ளப்பட்டிருக்கிறது. அப்படி யல்ல,  இருப்பதை இருக்கும்படியே பார்க்கும் அந்தப் பரிமாண த்தை, அந்தக் கண்கொண்டு பார்க்கிறார் என்பதை விளக்குவத ற்காகவே அப்படிச் சொல்லப்பட்டது. இந்தப் பிரபஞ்சத்தை மாயை என்று ஞானிகள் கூறுவதை நாம் கேட்டிருக்கின்றோம், ஒரு தத்துவமாக அதனுடைய குணத்தைச் சொல்வதற்காக  மாயை என்று அவர்கள் சொல்லவில்லை . அதை நாம்  பார்க்கும் விதத்தைக் குறிப்பிடுவதற்காகவே அப்படி சொல்லப்பட்டது. இருப்பதை இருக்கும் விதத்திலேயே பார்க்க முடியாமல், அதை இப்படியும், அப்படியுமாக மாற்றி எமது மனது ஒரு மாயையை ஏற்படுத்திவிடுகிறது. உங்களுடைய பிரபஞ்சத்தை நாம் உண ரும் அந்த அனுபவம் நம்மைப் பொரு   த்தவரை ஒரு பிரமையாக, ஒரு மாயையாகத்தான் இருக்கிறது. மோட்சம், நரகம் இவற்றை யாரும் நேரடியாக அனுபவத்து நமக்கு சொன்னதில்லை. அவர வர் பார்க்கும் விதத்தில் நமக்கு சொல்லப்பட்டதால், கடவுள், சொர்க்கம், நரகம் எல்லாமே நமக்கு மாயையாக தோன்றுகி ன்றது. பிரபஞ்சம், கடவுள் இவைகளை அறியும் முன்னர் முதலில் நம்மை நாம் உணரவேண்டும், தன் நிலை அறிவதற்கு ஆசைப்ப ட்ட சீடன் கதையை சொல்கின்றேன்.

                                              ஒரு ஞானி, தனது சீடர்களுடன் நீராட நதிக்குச் சென்றார். நன்றாக நீராடி வெளியில் வந்ததும், சீடர்கள் அவ ரைச் சூழ்ந்துகொண்டனர். “ஞானியே, தன்னிலை உணர நான் என்ன செய்ய வேண்டும்..?” என்று கேட்டான் ஒரு சீடன். “அந்த நாயிடம் கற்றுக்கொள்..” என்று சொல்லிவிட்டு, அவர் நடந்தார். சீடனுக்குப் பெரும் வருத்தம். தன் கேள்வியை அவர் அலட்சிய ப்படுத்திவிட்டார் என்று உள்ளுக்குள் ஆதங்கம். “குருவே, இந்த நாயிடம் நான் என்ன கற்க முடியும்..?” குரு, சற்று நேரம் எதுவும் சொல்லாமல் நடந்துகொண்டே இருந்தார். “அந்த நாயிடம் கற்க எனக்கு விருப்பமில்லை. சொல்லுங்கள் குரு..!” என்று சீடன் அவரைத் துளைத்தான். குரு, அடுத்த தெருவில் விளையாடி க்கொண்டிருந்த இன்னொரு நாயைக் காட்டினார். “அப்படி யானால், இந்த நாயிடம் கற்றுக்கொள்..!” “நீங்கள் என்னை கேலி செய்கிறீர்கள், குருவே..!.ஒரு நாயிடம் என்ன கற்க முடியும்? அது சாப்பிடுகிறது.. தூங்குகிறது.. இனப்பெருக்கம் செய்கிறது. அதிலிருந்து விடுபட வேண்டும் என்றுதானே உங்களைத் தேடி வந்தேன்..” “நீயும் சாப்பிடு.. தூங்கு..” என்று சொல்லிவிட்டு, ஞானி  தன் குடிலுக்குள் போய்விட்டார். சீடன் திகைத்து நின்றான். 

                                                                           அன்பர்களே!  ‘நாயைப் போல் இரு..’  என்றால் நம்மில் பலர் நன்றி என்ற கருத்துக்கு சென்று விடுவீ ர்கள். நாய்கள், பூணைகள், பறவைகள்   இவை எல்லாம் நாளை பற்றிய கவலை இல்லாமல் அன்றைய பொழுதை இன்பமாக கழிக்கின்றன. வானத்து பறைவகளை பாருங்கள் என்று இயேசு சொன்னதை நினைவு கூறுங்கள். அன்றன்றுள்ள அப்பம் என்று இயேசு குறிப்பிட்டது உணவு தேவை அல்ல மாறாக அன்றைய பொழுது திருப்திகரமாக இருக்க வேண்டும் என்பற்காகவே. எனவே நாம் கவலைகளை மறந்து அந்தந்த கணத்தில் இன்ப மாய் வாழுவோம்.   உறங்கும்போது, இந்த உலகத்தையே சுமப்ப தாக நாம்  நினைத்துக்கொள்ளாமல், சுமைகளை இறக்கி வைத்துவிட்டு, முழுமையாக உறங்கச் செல்லுவோம். தூக்கமும் கண்களை தழுவட்டுமே அமைதிய்ம் நெஞ்சில் நிலவட்டுமே! அன்புடன் பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்  ஆசைகாட்டி மக்களை தூண்டி தம் காரியங்களை சாதிக்கும் பல மக்களை நாம் நிஜவாழ்வில் சந்தித்து இருக்கின்றோம்,...