பின் தொடர்பவர்கள்

0162 எழுத்தறிவித்தவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0162 எழுத்தறிவித்தவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 ஜூன், 2015

0162 எழுத்தறிவித்தவன்

 எழுத்தறிவித்தவன்

அன்பர்களே எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். ஆசிரியர்கள் நம்மை உரு வாக்குகின்றார்கள் ஆனால் நம்மில் எத்தனைபேர் நம் ஆசான்களை நன்றியோடு நோக்கு கின்றோம். ஆசான்களின் சிறப்பை சீர்தூக்கிப்பார் க்கும் கதை இதோ ஒரு குருவிடம் மூன்று சீடர்கள் இருந்தனர். குருகுல வாசம் முடிந்து மூவரும் குரு விடம் சொல்லிக் கொண்டு தத்தமது வழியில் பிரி ந்து சென்றனர். என்ன வேலை செய்வது என்று முத லாவது சீடன் யோசித்தான். இந்த நாட்டின் அரசன் கற்றறிந்த அறிஞர்களை மதிப்பவன் என்பதால் அரச வை சென்று மன் னனை போற்றிப் பாடி நின்றான். அந்தத் துதிப்பாடல் கேட்டு பெருமகிழ்ச்சி கொன்ட அரசன் சீடனுக்கு வெகுமதி அளித்ததோடு, அரசவை யிலேயே வைத்துக்கொண்டான். இரண்டாவது சீட னிடம் நிறைய யோசனைகள் இருந்தன. ஆனால் எதைச் செய்வது, எப்படிச் செய்வது என்பதில் குழப் பம் இரு ந்தது. அவன் தன் மனம்போன போக்கில் எங்கெங்கோ சுற்றித் திரிந்தான். ஒரு நாள் சத்திரம் ஒன்றில் இளைப்பாறினான். அந்தச் சத்திரத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. அவன் அதை வாங்கி உண்டபோது, அதுவரை கண்டறியாத ருசியை உண ர்ந்தான். அந்த அறுசுவை உணவைத் தயாரித்து அளி த்த சமையல்காரரைச் சந்தித்துப் பேசினான். தனக் குப் பின்னால் அந்தக் கலையை, அடுத்த தலைமு றைக்குக் கொண்டு செல்லத் தகுந்த வாரிசு இல்லா மல் அவர் வாடுவது புரிந்தது. சற்றும் தயங்காமல், அந்தப் பெரியவரிடம் உதவியாள ராக ச் சேர்ந்து கொண்டான். அவனைப் பிடித்துப் போனதால் சமை யல் கலையின் நுணுக்கங்கள் எல்லாவற்றையும் அவனுக்குக் கற்றுக் கொடுத்தார். அவனும் வெகு விரைவிலேயே சிறந்த நளபாகச் சக்கரவர்த்தியாக உருவெடுத்தான். மூன்றாவது சீடனோ முதலில் தனது சொந்த ஊருக்குச் சென்றான். அப்போதுதான் அந்தக் கிராமத்தில் நிறையச் சிறுவர்கள் காடுகளி லும் வரப்புகளிலும் கிடைத்த வேலைகளைச் செய் து பொழுதைக் கழிப்பதைக் கண்டான். தனக்கு அ மைந்தது போல ஒரு குருவின் வழிகாட்டல் அவர் களுக்குக் கிடைக்கவில்லை என்பதைப் புரிந்து கொ ண்டான். ஏன் அந்தச் சிறுவர்களுக்குத் தான் கற்ற கல்வியை அளிக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் செயலில் இறங்கினான். ஆனால் தன்னுடைய வாழ் க்கைக்கே வழிதேட வேண் டிய நிலையில் தன்னால் எப்படி மற்றவர்களுக்கு உதவ முடியும் என்ற சந் தேகம் அவனுக்கு. குரு அடிக்கடி சொல்லும் உபதே சம் ஒன்று நினைவுக்கு வந்தது. எந்த ஒரு நல்ல காரி யத்தையும் சிந்தித்தவுடன் செயல்படுத்தத் துவங்கி விடவேண்டும்; அவ்வாறு துவங்கிவிட்டால் அதை வெற்றிகரமாக முடிப்பத ற்குத் தேவையான அனை த்து உதவிகளும் தானே தேடிவரும் என்பதுதான் அந்த உபதேசம். உடனடியாக, அந்தச் சீடன், அச் சிறு வர்களின் பெற்றோர் களைச் சந்தித்துப் பேசினான். சில சிறுவர்களைச் சேர்த்துக் கொண்டு, ஒரு மரத்த டியில் அவர்களுக்குக் கல்வி கற்றுக் கொடுக்க ஆரம் பித்தான். அவனுடைய அர்ப்பணிப்பு உணர்வைக் கண்ட அந்த மக்கள் அவன் எதிர்பார்த்ததற்கும் மே லாகவே, தாமாக முன்வந்து உதவிகளைச் செய்த னர். அவற்றைச் சிறப்பா கப் பயன்படுத்தி, படிப்படி யாக வளர்ந்தான். சீக்கிரத்திலேயே, பெரியதொரு கல்விச் சாலையை நிறுவி, சிறந்த கல்வியாளனா கத் திகழ்ந்தான். பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் தன் சீடர்களைக் காண விரும்பினார் குரு. மூவரும் குருவைக் காண ஒருசேரக் கிளம்பிப் போனார்கள். தனது சீடர்களைக் கண்டதும், அவர் பெரிதும் மகிழ்ந்தார். தங்களுக்கு ஞானம் அளித்த குருவுக்கு, சிலநாட்கள் பணிவிடை செய்வது என்று மூவரும் தீர்மானித்தனர். ஆசிர மத்தில் தங்கி, குரு வுக்குப் பணிவிடைகள் செய்தனர். அப்போது மற்ற இரண்டு சீடர்களைக் காட்டிலும் மூன்றாவது சீடனு க்குக் கூடுதல் முக்கியத்துவம் தந் தார் குரு. இது மற்ற சீடர்கள் இருவரையும் மனம் நோகச் செய்தது.
ஒரு நாள், மூன்றாவது சீடன் இல்லாத சமயம் பார் த்து, இருவரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத் தினர். குரு புன்னகைத்தார். பின்னர் முதலாம வனைப் பார்த்துச் சொன்னார். “நீ அரசவைப் புல வன்! சிறந்த இலக்கிய ங்களைப் படைக்கின்றாய். உனது படைப்பு, படிப்பவர்களுக்கு மகிழ்ச்சி தருகி றது. மன எழுச்சியையும் தருகிறது. அதனால் நீ உயர்ந்தவன்தான்! நான் மறுக்கவில்லை!’என்றார். பின்னர், இரண்டாமவனைப் பார்த்து, “நீ சிறந்த நள பாகனாக இருக்கின்றாய். வயிற்றுக்கு உணவளித்த வன் தாய்க்கு ஒப்பா னவன்! அதனால் நீயும் உயர்ந்த வன்தான்! நான் ஏற்றுக் கொள்கிறேன்,” என்ற குரு மேலும் தொடர்ந்தார். “ஆனால், அறியாமையில் இருக்கும் ஒருவ னுக் குக் கல்வி அளிப்பது என்பது, பார்வையில்லாதவனுக்கு பார்வை அளிப்பது போல! கல்விக்கண் திறக்கப்பட்டவனுக்குத்தான் உலகின் மற்ற வளங்கள் அனைத்தும் கிடைக்கும்! அதனால் எழுத்தறிவித்தவன் இறைவனாகிறான்! அதனால்தான் உங்கள் இருவரையும்விட மூன்றாம வனுக்குச் சற்றுக் கூடுதல் முக்கியத்துவம் கொடுத் துவிட்டேன். ஒரு குருவாக நான் இதைச் செய்திரு க்கக்கூடாதுதான்! உங்கள் மூவரையும் சமமாகப் பாவித்திருக்க வேண்டும்… என்னை மன்னித்துவி டுங்கள்…’ என்றார் குரு. “அகங்காரம் எங்கள் கண் களை மறைத்துவிட்டது. எங்கள் இருவரைக் காட் டிலும் அவனுடைய சேவை உயர்வானது என்பதை நாங்கள் இப்போது தெளிவாக உணர்ந்து கொண் டோம். தாங்கள்தான் எங்களை மன்னிக்க வேண் டும்’ என்றனர் சீடர்கள் இருவரும்.
அன்புடன் பேசாலைதாஸ்


ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...