பின் தொடர்பவர்கள்

0369 ஞானத்தின் இருப்பிடம்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0369 ஞானத்தின் இருப்பிடம்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 7 மே, 2016

0369 மெளனமே ஞானத்தின் இருப்பிடம்!


மெளனமே ஞானத்தின் இருப்பிடம்!

சாரிபுத்தர் என்பவர், ஞானம் பெற, புத்தரைத் தேடி வந்தார், புத்தர் அவரிடம், “உன் மனதில் ஏராளமான கேள்விகள், எண்ணற்ற சந்தேகங்கள் இருப்பதை நான் அறிவேன். அதனால் உன் மனம் அலைபாய்கிறது. நீ என்னுடன் இரு. ஒரு வருடம் எதுவும் பேசாது மௌனமாயிரு. அடுத்த ஆண்டு உன் கேள்விகளுக்கு நான் தெளிவாக பதில் சொல்வேன்.” என்று சொன்னார். சாரிபுத்தர் மௌனமானார். அன்று முதல் அவர் எதுவும் பேசுவதேயில்லை. ஓராண்டு கடந்தது. "சாரிபுத்தா! உன் ஐயங்களைக் கேள்," என்றார் புத்தர். "கேட்க ஏதுமில்லை, பெருமானே!" என்றார், சாரிபுத்தர்.
ஆம். அவர் ஞானம் பெற்றுவிட்டார்.
மனமே, கேள்வியின் பிறப்பிடம். பதிலும் அங்கேயேதான் இருக்கிறது. மௌனம், மனதின் கதவுகளை விரியத் திறக்கிறது. அப்போது, அங்கு நிறைந்திருக்கும் ஆரவாரங்கள், ஐயங்கள் ஆகியவை கும்பலாக வெளியேறி விடுகின்றன. அதன் பின், அங்கே, விடை, அமைதியாக மேடையேறுகிறது. அன்பர்களே மெளனம் ஆன்மாவின் தாய்மொழி, நானே எனக்கு விடையானேன் என்று நீங்களே உங்களை ஒரு நாளில் கண்டு கொள்வீர்கள். இது எனது தேடலில் நான் கண்டு கொண்டது. அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...