அங்கு இங்கு எண்ணாதபடி எங்கும் பரகசமாய் வியாபித்து இருப்ப வனே இறைவன். இறைவன் ஆலையத்தில் இருக் கின்றான் என்று சிலரும், உள்ள த்துக்குள்ளே ஒழிந் திருப்பவன் இறை வன் என்று தத்துவவாதிகளும் கூறுவா ர்கள்.இஸ்லாம் மார்க்கத்தில், மெக்கா (ஹாபா) இருக்கும் திசை நோக்கி தொழுது கொள் வார்கள். சைவர்கள் கைலாய மலையில் சிவன் இரு ப்ப தால் வடக்கு திசை இருக்கும் பக்கம் கால்வை த்து படுப்பதில்லை. இதுபோலவே இஸ்லாமிய நண் பர்கள் ஹாபா இருக்கும் திசை நோக்கி கால் நீட்டி ப்படுப்பதில்லை. ஒரு முறை மெளளாவி ஒருவர் மரத்தடியில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியில் வந்த ஒருவர் ஆழ்ந்த உறக் கத்தில் இருந்த அந்த மெளளாவியை தட்டி எழுப்பி " என்ன காரியாம் செய்கின்றீர்கள், ஹாபா இருக்கும் இடத்தை நோக்கி கால் நீட்டி படுக்கலாமா? அது அல்லஹா இருக்கும் திசை அல்லவா " என்றார். அத ற்கு அந்த மெளளாவி அவர்கள் "அப்படியா? எனக்கு இறைவன் இல்லாதா திசை எது என்று தெரியாது, உனக்கு தெரிந்தால் சொல்லுங்கள். அந்த பக்கம் நான் கால்களை நீட்டிக்கொள்கின்றேன்" என்றார். வந்தவர் குழம்பி ப்போனார். மெளளாவி தொடர்ந்து சொன்னார்" இறைவனுக்கு திசை ஏது? அவன் எங் குமே வியாபித்து இருக்கின்றான். எங்கு அவன் இல்லை? மனிதனை படைத்த அவன் மனிதனுக்கு தலையை படைத்தது போலவே, கால்களையும் படைத்திருக்கின்றான். அவனை நோக்கி தலையை வைத்துப்படுத்தால் இறவன் சந்தோசப்படுவாரா? அல்லது கால்களை வைத்துப்படுத்தால் கோபப்ப டுவாரா? இல்லை எதுவுமே இல்லை" என்று சொல்லி மீண்டும் தூங்கலானார். அன்புடன் பேசாலைதாஸ் பேர்கன் நோர்வே