பின் தொடர்பவர்கள்

0484 இதயத்தின் மொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0484 இதயத்தின் மொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 6 ஜனவரி, 2018

0484 இதயத்தின் மொழி தெரிந்தவர் என் இயேசு.....

இதயத்தின் மொழி தெரிந்தவர் என் இயேசு.....
அன்பர்களே! நாம் எந்த நிலையில் இருந்தாலும் நம்மை வெறுக்கா தவர் இயேசு ஒருவரே! அவருக்கு மட்டுமே நம் இதயத்தின்மொழி தெரியும். நாம் செய்யும் காரிய ங்கள் ஊடாக இதயத்தின் ஆழb த்தை ஊடுருவிப்பார்ப்பவர் இயேசு! இயேசுவின் பாதங்களை தன் கண்ணீரால் துடைத்து,  தன் கூந்தலால் துடைத்து, விலை உய ர்ந்த தைலத்தால் பூசிக்கின்றாள். யூத சமூகத்தில் பெண்களுக்குரிய நிலையை எண்ணிப்பாருங்கள் இங்கே! என்னே தைரியம் இந்த பெண்ணுக்கு, தனது இதய அன்பை இயேசுவுக்கு காட்ட, எதற்கும் அஞ்சா மல், ஒரு பெண் என்றும் பாரமல், அவள் செய்த செயலை மனக்கண் முன் கொண்டுவருகின்றேன்,,,,,,,,,,,
மேரி மக்தலினா ஒருமுறை ஏசுவைக் காண ஒரு விலையுயர்ந்த வாசனைத் திரவியத்தோடு வந்தார். வாசனைத் திரவியக் குப்பியைத் திறந்து ஏசுவின் கால்களில் மிகுந்த பிரியத்துடன் ஊற்றிக் கழுவினாள்.

ஏசுவின் அருகிலிருந்த யூதாஸ், “இது சரியானதல்ல. கால்களில் விலையுயர்ந்த வாசனைத் திரவியத்தை ஊற்றுவதை நீங்கள் தடுத்திருக்க வேண்டும். இந்தப் பணத்தை வைத்து மொத்த நகரத்து ஏழைகளுக்கும் உணவளித்திருக்க முடியும்” என்றார்.

அது சரிதானே. ஏன் இத்தனை விலையுயர்ந்த திரவத்தை வீண்டிக்க வேண்டும். ஒருவரின் பாதங்களைக் கழுவுவதற்கு தண்ணீ்ரே போதுமே. யூதாஸின் வாதத்துக்கு ஏசு என்ன பதிலளித்தார்.

“ஆமாம் யூதாஸ். ஏழைகள் உன்னுடனேயே இருப்பார்கள். ஆனால் நான் உன்பக்கம் இல்லை. நான் போன பிறகு நீ ஏழைகளுக்கு உணவளிக்கலாம். ஆனால் மக்தலினாவை நான் நிறுத்த மாட்டேன். நீ அவள் கொண்டுவந்த வாசனைத் திரவியத்தின் விலையை மட்டும்தான் பார்த்தாய். நான் அவளது இதயத்தைப் பார்த்தேன். அவளிடம் நான் வேண்டாமென்று மறுக்க முடியாது. ஆழமான நேசத்தில், அபரிமிதமான பாசத்தில், எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் அவள் என் கால்களில் வாசனைத் திரவியத்தை ஊற்றிக்கழுவுகிறாள். நான் அதை மறுக்கவே முடியாது” என்றார் ஏசு. ஆம் அன்பர்களே இயேசுவுக்கு இதய மொழி தெரியும் ஆழமான நேசம், அபரிமதாமான பாசம் எந்த கடினமான சூழ்நிலையையும் தகர்த்தெரியும்  அன்புடன் பேசாலைதாஸ்

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...