சம்சாரம் என்பது வீனே!
அன்பர்களே மனைவி அமைவ தெல்லாம் இறைவன் கொடுத்தவரம், என்பா ர்கள். மனைவி என்பவள் ஒரு வீணை மாதிரி. வீணையை மடியில் வைத்து அதன் இசை நரம்புகளை அதற்கேற்றால் போல மீட்டி னால் அற்புதமான இசை பிறக்கும், அது போலவே மனைவியை அவள் மனம் நோகா மல், அவளுக்கேற்றபடி நடந்தால் இல்லறத் தில் அன்பும் இன்ப உணர்ச்சிகளும் ததும்பும் அதானால் தான் சம்சாரம் என்பது வீணை என்றார்கள்!
ஆனால் எல்லோருக்கும் அவர்கள் எதிர்பார்ப்பது போல மனைவி அமைவதி ல்லை. ஒருவேளை அப்படி அமைந்துவிட்டா லும், வீணை மீட்க தெரியாத முட்டாளுக்கு நல்லதோர் வீணை வாய்த்த மாதிரி. அதனால் தான் நகைச்சுவையாக சொல்வதுண்டு. மின்சாரம் அது சம்சாரம், தொட்டால் அடிக்கும் மின்சா ரம் ஆனல் மனை வியோ தொட்டாலும் அடிக்கும், தொடாமலும் அடிக்கும். இப்படித்தான். நகைச்சுவையாக விவேக் அடிக்கடி சொல்லுவார், சாது வாக இருக்கும் ஆண்களை சேதுவாக்குவதும் பெண்கள், சேறாக்குவதும் பெண்கள் என்று, விவேக்கின் இந்த கருத்தை, சித்தரிக்கின்றது. கீழ்வ ரும் சம்பவம்!
ஒரு மனிதருக்கு தன் மனைவியுடன் தீராத சண்டை இருந்து வந்தது. அப்போது அந்த ஊரில் ஒரு சாது, நகரின் ஒது க்குப்புறமாகத் திரிந்து கொண்டிருந்தார். எனவே அந்த மனிதர் அந்த சாதுவிடம் சென்று வணங்கி, ‘சாமி, என் மனைவி என் வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டிருக்கிறாள். தினம் தினம் செத்துக்கொண்டிருக் கிறேன். இதிலிருந்து தப்பிக்க, நீங்கள், என் பிரச்சனைக்கு ஏதாவது தீர்வு சொல்லுங்க ளேன்!’ என்று கேட்டார். அதற்கு அந்த சாது சொன்னார், ‘ஏய் முட்டாளே! இதற்கு தீர்வு சொல்ல முடிந்தால், நான் எதற்கு இங்கே சாதுவாகி உட்கார்ந்திருக்கிறேன்? ஹரி ஓம்!’ என்றார். அன்புடன் பேசாலைதாஸ்