பின் தொடர்பவர்கள்

0482 அகிலம் அண்டம் ஆண்டவன்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0482 அகிலம் அண்டம் ஆண்டவன்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 5 ஜனவரி, 2018

0482 அகிலம் அண்டம் ஆண்டவன்!

அகிலம் அண்டம் ஆண்டவன்!
மெய்ப்பொருள் ஒன்றே மற்ற வையெல்லாம் அதன் பிம்பங்களே! இறைவன் ஒன்றே மற்றவை அனை த்தும் அவனின் பிம்பங்களே! நிற்பதுவே நடப்பதுவே பறப்ப துவே நீங்கள் எல்லாம் சொற்ப னக்கள் தானோ?  பல தோற்ற மயக்கங்களோ, உங்களில் ஆழ்ந்த பொருள் இல்லையோ? ஆஹா எத்தனை அற்புதமான அந்த பாரதி பாடல்! பா(ரதி) என்றாலே எனக்குள் ஒரு பரவசம்! சின்ன வயசில் இருந்தே இயற்கையை என்னை அறியாமல் இரசிப்பேன்! சிலவேளை என்னை உணராமல் ஒரு ஜடமாக சோம்பித்திரிந்த காலம் ஒன்று இருந்தது, அதனால் சுறுசுறுப்பான என் தம்பிமார் என்னை சோம்பேறி என்றழைத்தனர். கனவுகாண்பதும், கற்பனையில் மிதப்பதும் புத்தகம் வாசிப்பதிலும் என் நாட்டம் இருந்தது. ஏனோ என்னை ஒரு கடவுளாக நானே என்னை தரிசித்திருக்கின்றேன். எப்போது கடல் தாண்டி வந்தேனோ நான் நானாக இல்லை! வயது போகின்றது ஆசைகள் வற்றிய அறுபதுக்குள் அடியெடுத்து வைக்கின்றபோது ஞானக்கண் மெல்லத்திறக்கின்றது! இனி என்ன கல்லறைக்கான காலடிகளின் எண்ணிக்கை குறைந்து போகின்றது. என் மனக்குதிரையை தட்டிவிட்டால் அது ஞான பிம்பத்தையல்லவா நாடி ஓடுகின்றது, ஓடாட்டுமே அது உங்களோடும் என்னோடும் கொஞ்சம் ஓடட்டுமே! என் எண்ண ஓட்டத்தில் ஒட்டிக்கொண்ட இன்னுமொரு கதை!
                                               அது ஒரு பழைய கதை. ஒரு ராஜா பிரம்மாண்ட மாளிகை ஒன்றை கட்டினான். அதன் பெயர் கண்ணாடி மாளிகை. தரை, சுவர்கள், கூரை எல்லா சின்னச் சின்னதாக லட்சக்கணக்கான கண்ணாடிகளால் கட்டப்பட்ட மாளிகை அது. அந்த மாளிகை முழுக்க கண்ணாடிகள் தவிர வேறெதுவும் இல்லை.

அந்த மாளிகையில் ஒரு நாள் ராஜாவின் வளர்ப்பு நாய் தவறாக நுழைந்துவிட்டது. மாளிகைக்குள் நாய் நுழைந்தது தெரியாமல், இரவில் மாளிகை வெளியிலிருந்தும் பூட்டப்பட்டுவிட்டது. அந்த மாளிகைக்குள் லட்சக்கணக்கான நாய்களின் பிம்பங்களைப் பார்த்து அந்த நாய் பீதியடைந்தது.

அந்த நாய் சாதாரண நாய் அல்ல. ராஜாவின் நாய். அது மிகவும் தைரியமான நாய். ஆனாலும் மிகவும் தனிமையை உணர்ந்ததால் ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்கு ஓடியது. ஆனால் தப்பிக்கும் வழி தெரியவில்லை. எல்லா இடங்களிலும் நாய்கள் ராஜாவின் நாயைத் துரத்தின. அதனால் வெளியிலும் போய்த் தப்பிக்க முடியாது. கதவு வேறு பூட்டப்பட்டு விட்டது.

மற்ற நாய்களை அச்சமூட்டுவதற்காக ராஜாவின் நாய் குரைக்கத் தொடங்கியது. மற்ற நாய்களும் குரைக்கத் தொடங்கின. அவை அனைத்தும் எதிரொலிகள். ராஜாவின் நாய்க்குக் கூடுதல் பயமேற்பட்டது. நாய், தன் பிம்பங்களின் மேல் மோதிப் பாய்ந்தது. காயப்பட்டது. காலையில் அந்த நாய் சடலமாக அரண்மனையிலிருந்து மீட்கப்பட்டது. சடலமாக இறந்து கிடந்த நாய் மட்டுமே உண்மை மற்ற நாய்கள் எல்லாம் பிம்பங்களே!
 மெய்மை ஒன்றே. மற்றதெல்லாம் பிம்பத் தோற்றங்களே.  நாம் மெய்மையை நோக்கி நகரும்போது, இந்தப் பிம்பங்கள் காணாமல் போய்விடுகிறது.  நாம் இறைவனுக்குள் ஒன்றாகிவிடுகிறோம். ஏன் இறைவனாகவே மாறிவிடுவோம். இப்போது புரிகின்றதா நாம் ஒவ்வொருவரும் வாழும் தெய்வங்கள்
அன்புடன் பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்  ஆசைகாட்டி மக்களை தூண்டி தம் காரியங்களை சாதிக்கும் பல மக்களை நாம் நிஜவாழ்வில் சந்தித்து இருக்கின்றோம்,...