இறை அன்பு
இறை அன்பு எப்படிப்பட்டதாக இருக்கும் என்று என்று ஒருவன் ஒரு ஞானியிடம் கேட்டான் அதற்கு அவர் கைத ஒன்றைச் சொன்னார். அது ஒரு கடலுக் குள் உள்ள இரயில் பாலம், கப்பல்கள் வரும் போது திறந்து கொள்ளும், அது போல இரயில் வரும் போது அது முடிக்கொள் ளும். இதனை சரியான நேரத்தில் மூடித்திறக்க ஒரு காவலாளி இருந்தான். அவனுக்கு ஒரே ஒரு பையன் இருந்தான். ஒருமுறை அந்தப் பையன் பாலம் மூடித்திறக்கும் அறையில் பெரிய முட்கள் உள்ள, சக்கரங்களுக்கிடையில் விளையாடி க்கொண்டிருந்தான். அந்த சக்கரங்கள் சுழன்றால் தான், பாலம் மூடித்திறக்கும். தூரத்தில் இரயில் வேகமாக வந்துகொண்டிருந்தது, பாலத்தை இப் போது மூடவேண்டும். காவலாளி அப்போதுதான் பார்க்கின்றான் தனது அருமை மகன், ஒரே ஒரு மகன் சக்கரங்களுக்கிடையில் விளையாடிக் கொண் டிருப்பதை, இக்கட்டான ஒரு நிலை! பாலத்தை மூடு வதா? அல்லது தன் மகனை காப்பாற்றுவதா? இரண் டில் ஒன்றை செய்வதற்குத்தான் நேரம் சரியாக உள் ளது. பாலத்தை மூடினால் நிட்சயம் தன் மகன் சக்க ரங்களுக்கு இடையில் உள்ள பற்களுக்குள் சிக்குப்ப ட்டு நசிந்து இறப்பான். பாலத்தை மூடாவிட்டால், இரயில் கடலுக்குள் விழுந்து, ஆயிரக்கனக்கான மக் கள் இறப்பார்கள். ஒன்றும் செய்ய முடியாத நிலை யில், காவலாளி , பாலம் மூடிக்கொள்ளும் ஆழியை அழுதுகொண்டு அழுத்துகின்றான். பாலம் தானாக மூடிகொள்கின்றது. அங்கே சக்கரங்களுக்கிடையில் அருமை மகன், அவன் கண் முன்னால் நசிந்து இரத் தம் சிந்திச் சாகின்றான். இரயிலும் பாலத்தை கடந்து செல்கின்றது,,,,,,,,,,,,அன்பர்களே கடமை தவறாத காவலாளியின் அன்பை ப்போலவே கடவுள் நம்மீது வைத்த அன்பும் இருக்கின்றது. தன் ஒரே பேறான, தன் மகனை பலியாக்கி, இந்த உலகத்தை இவ்வள வாக அவர் அன்பு செய்தார்`` என்ற வசனம் பைபி ளில் தரப்பட்டுள்ளது.