சொர்க்கமும், நரகமும் நம் வசமே!
அன்பர்களே! வசந்த மாளிகை திரை ப்படத்தில் ஒரு பாடல் உண்டு அதில் இந்த வசனம் இருக்கின்றது. " சொர் க்கமும் நரகமும் நம் வசமே! நான் சொல்வதை உன் மனம் கேட்கட் டுமே"" ஆம் அன்பர்களே சொர்க்கம், நரகம் நம் இயல்பில் இருக்கின்றது. உங்கள் மனதில் எது நிரம்பி இருக்கி றதோ, அதுதான் உங்கள் சொர்க்கத் தையும் நரகத்தையும் நிர்மாணிக்கிறது. கோபம், பொறாமை, எரிச்சல், பதற்றம், ஆத்திரம், சந்தேகம், பயம் இவ ற்றால் ஆளப்படும்போது, நீங்கள் நரகத்தில் இருக்கிறீர்கள். அன்பு, ஆனந்தம், பரவசம் இவற்றை அனுபவிக் கையில் நீங்கள் சொர்க்கத்தில் இருக்கிறீர்கள். இரண்டையுமே நீங்கள் தான் உருவாக்குகிறீர்கள். எது வேண்டுமென்று நீங்களே தீர்மானியு ங்கள். எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கின்றது. நான்காம் ஆண்டு, சமய பாடப்புத்தகத்தில் இரண்டு சிறுவர்களின் படம் இருக்கும், ஒன்றில் கோபம் கொண்ட முகமும், அவன் இருதய த்தில் பாசாசு இருப் பது போல இருக்கும். அடுத்த படத்தில் சாந்தமான சிறுவனின் முகமும், அவன் இதயத்தில், சம்மனசு இருப்பது போல, சித்தரிக்கப்பட்டு இருக் கும். ஒரு சின்ன சம்பவ த்தோடு இதனை விபரிக்கின்றேன்.
ஒரு இராணுவ படைத் தளபதி, மடுக்கோயில் சோதனைச்சாவடியில், சுவாமியிடம் கேட்டான். ‘‘குருவே, சொர்க்கம், நர கம் என்பதெல்லாம் உண்மையிலேயே இருக்கிறதா?’’ என்று வினவினார். ‘’தளபதி என்கிறாய்? உன்னைப் பார்த்தால் இறைச்சி வெட்டுபவன் போல் அல்லவா இருக்கிறாய்?’’ என்று சுவாமியார் வாய்விட்டுச் சிரித்தார்.
தளபதி ஆவேசமாகி, தன் கைத்துப்பாக்கியை உயர்த்தி சுவாமியின் நெற்றியிலே வைத்தான். ‘’உன்னை சுட்டுத்தள் ளவா?’ என்றான். உடனே சுவாமியார் ‘’நரகத்தின் கதவுகள் திறந்துவிட் டன!’’ என்றார். தளபதி உடனே சினம் தணிந்தார். பணிந்து மன்னிப்புக் கேட் டார். ‘’சொர்க்கத்தின் நுழைவாயில் தெரிகிறது…’’ என்றார் சுவாமி.
அன்பர்களே இதில் இருந்து நீங்கள் என்ன புரி ந்து கொள்கின்றீ ர்கள்? சுவாமியார் தைரியமாக, துப்பாக்கியை நீட்டிய, இராணுவ தளபதிக்கு, உன் செய்கையால், நீ நரகம் அடைவாய் என்று சொல்ல அவன் பயந்து மன்னிப்பு கேட்டான். மன்னிப்பது, தவறை உண ர்ந்து, மன்னிப்பு கேட்பது எல்லாம் சுவர்க்கத்தின் படிகள். ஆக மொத்தத் தில் சொர்க்கம் நரகம் என்பன, நம்து எண்ணங்களினாலும் செய்கையா லும் நிர்மாணிக்கப்படுகின்றது. நரகம் சொர்க்கம் இரண் டுமே இடம் சார் ந்தது அல்ல, இதயத்தின் உணர்வு சார்ந்தது, எனவே மனதை நல்லப்டியாக பார்த்துக்கொள்ளுங்கள், அன்புடன் பேசாலைதாஸ்