பின் தொடர்பவர்கள்

0566 ஆண்மை தவறேல்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0566 ஆண்மை தவறேல்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 2 டிசம்பர், 2018

0566 ஆண்மை தவறேல்!

ஆண்மை தவறேல்!  சிறுகதை  பேசாலைதாஸ்


                                                                கோணார்பண்ணை கிராமாம், ஒரு பக்கம் உப்புத்தரவை பிரதான வீதிக்கு எதிர்பக்கமாக அழகிய தென்னந்தோப்பு இதுதான் கோணார்பண்ணையின் எழில் சுருக்கம்; அந்த கிராமத்தில் ஒரு அழகிய காதல் கதை! காதலன் நிமாலுக்கு தலைநகர் கொழும்பில் ஒரு குமாஸ்தா வேலை கிடைத்து, அந்த செய்தி கேட்டு நிமால், தன் காதலி ரேகாவிடம் எனக்கு கொழும்பில் வேலை  கிடைத்துவிட்டது, நான் உடனே செல்ல வேண்டும் நீ என்ன சொல்கிறாய்? என்று கேட்கிறான். நாம் வாழ காதல் மட்டும் போதாது பணம் வேண்டும் என்று விளங்கிக் கொண்டவள் சரி நீ சென்று வா! ஆனால் உன் குழந்தையை நான் சுமக் கிறேன் என்னை மறந்துவிடாதே என்கிறாள் ரேகா.

                                                       பதறிப் போனன் நிமால், என்ன சொல்கிறாய்!!! எப்படி... என்று கேட்க,  ஒருநாள் அவன் தனிமையில் செய்த தவறை சொல்லி அழுகிறாள். உடனே காதலன்னிமால், தன் நன்பனின் உதவி யால் அவளை அங்கேயே ரகசிய திருமணம் செய்துக் கொள்கிறான்.தன் தாயாரிடம் நான் இவளை காதலித்து திருமணம் செய்துக்கொண்டேன் இப்போது இவள் மாசமாக இருக்கிறாள்பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு கொழும்புக்கு சென்றுவிடுகிறான். 


                                                                             மாதங்கள் பல ஓட அவள் வயிறு வளர ஆரம்பித்தது. கனவனின் தாயார் படுத்த படுக்கையில் இறந்துவிடுகி றார். அதற்குள் அவள் பெற்றோர்களுக்குவிசயம் தெரிந்துவிடுகிறது. அவளை அடித்து துன்புரித்தி குடும்ப கௌரவத்திற்காக வீட்டை வீட்டு விரட்டினர். நடந்த சண்டையில் அவள் ஒரு கை உடைந்து போனது. கை வலியோடு தன் கனவனை தேடி கொழும்புக்கு செல்கிறாள். கொழும்பில் விலாசம் தெரியாமல் பச்சை உடம்புக்காரி சோறுதண்ணீர் இல்லாமல் நடுரோட்டில் மயங்கி கீழே விழுகிறாள். 


                                                                                    அதே நேரத்தில் அங்கே நிமாலுக்கு எதோ கெட்டது நடப்பது போல் உணர்வு, எதோ ஒர் இனம் புரியா படபட ப்பு.  அதுதான ஆத்மபூர்வமான காதல் அன்பின் அலை! உடனே கிராம த்தில் இருக்கும் தன் நன்பனுக்கு Phone செய்து எல்லாவற்றையும் அறிந் துக்கொண்டு, office என்று கூட பார்க்காமல் ஆஆஆ... கதறி அழுகிறான். 


                                                                     நடுரோட்டில் விழுந்தவளை ஒரு தொண்டு நிறுவனம் பாதுகாத்து பிரசவம் பார்த்து எல்லா தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் முகநூல்கள் மூலம், தகவல் கொடுக்கப்படுகிறது. மறு பக்கம் கனவனும் அவனது நன்பர்களும் அவளை தேடுகின்றனர். 


                                                              இரண்டு நாட்களுக்கு பிறகு இரவு பனிரண்டு மணி இருக்கும், கொழும்பு கோட்டை இரயில் நிலையத்தில் ஒரு பிச்சை க்காரிப் போல் அழுக்கு சேலையில் கை குழந்தையுடன் தன் கனவன் நிமாலிடம் அய்யா!!! என் புருசனை பார்த்தீர்களா! என்கிறாள்.சடார் என்று திரும்பி பார்த்தவன் அய்யயோ!!! என்று அலறி ரேகாவை கட்டிப் பிடித்துஎன்னை மண்ணித்துவிடுமா!!! என்று கதறி அழுகிறான் நிமால். அப்போதுதான் அவளுக்கு தெரிந்தது அவன் தன்னுடைய கனவன் நிமால் என்று. அவனை இருக்கி அனைத்து எங்கடா போன!!! என்று சொல்லி அழுகிறாள்.சிறிது நேரத்திற்கு பிறகு தன் குழந்தையிடம் இதோ பார்! உன் அப்பா!!! உன் தந்தை வந்துவிட்டாரடா!!! என்று குழந்தையிடம் சொல்ல. மறுபடியும் குழந்தையும் மனைவியும் அனைத்து கொண்டு என்னை மண்ணித்துவிடு செல்வங்களை!!! என்று அழுகிறான்.


                                                அந்த பெண்ணின் உண்மையான காதலை பார்த்த நன்பர்கள் அத்தனை பேர் கண்களிளும் கண்ணீர் வந்தது.((காதலித்த பெண்ணிற்கு குழந்தை கொடுப்பதில்லை ஆண்மைஅவள் சாகும் வரை நம் காதல் அழியாமல் இருப்பதே ஆண்மை. காதலிக்கும் பெண்ணிடம் இவனையா நாம் காதலித்தோம் என்று அவள் நினைத்துவிட்டால் நம் காதல் ஒரு போதும் வெற்றி பெறாது ) அன்புடன் பேசாலைதாஸ்
இணையத்தில் படித்த ஒரு சம்பவத்தை கதையாக்கியுள்ளேன்

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...