பின் தொடர்பவர்கள்

0092 ஊரெல்லாம் கடன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0092 ஊரெல்லாம் கடன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 ஜூன், 2015

0092 ஊரெல்லாம் கடன்

ஊரெல்லாம் கடன்

ஊரெல்லாம் கடன் வாங்கி அதைத் திருப்பித்தராது ஏமாற்றிக்கொண்டிருந்தான் ஒரு டம்பப் பேர்வழி. அவன் முல்லாவிடம் ஒரு பெருந்தொகையை வாங்கி அவரையும் ஏமாற்றத் திட்டமிட்டான். நிட்ச யமாக முல்லாவை ஏமாற்றி ஒரு பெருந்தொகையி னை கடனாக வாங்கி வருவதாக பலரிடம் மார்தட்டி க்கொண்ட அவன். முல்லாவிடம் சாமத்தியமாக செயற்படத் திட்டமிட்டான்.
                                                          முல்லா தன்னை நம்பி பெருந்தொகையினைக் கொடுக்க மாட்டார் என்ப தும் அவனுக்குத் தெரியும். அதனால் தன்மீது நம் பிக்கை ஏற்படுவதற்காக ஒரு நாடகம் நடிக்க எண் ணினான். ஒருநாள் அவன் முல்லாவிடம்ட சென்றா ன் "முல்லா அவர்களே எனக்கு ஒரே ஒரு காசு கட னாகத் தர முடியுமா?" என்று கேட்டான். "நம்பிக்கை மோசம் செய்யாத யாருக்கும் நான் எவ்வளவு தொகைவேண்டுமானாலும் கடனாகத் தருவதற்குத் தயங்கமாட்டேன்.
                                            நீ ஒரு காசுதானே கேடகிறாய் இதிலே நீ நம்பிக்கை மோசம் செய்யவில்லை என் றால் நான் உனக்கு பத்தாயிரம் காசுகள் கேட்டாலும் கொடுப்பேன்." என்று கூறி டம்பனுக்கு ஒரு காசினை க் கடனாகக் கொடுத்தார் முல்லா. டம்பன் நாலு ஐந்து நாட்கள் கழித்து முல்லா கொடுத்த ஒரு காசி னை எடுத்தக்கொண்டு முல்லாவிடம் வந்தான். "முல்லா அவர்களே தாங்கள் கொடுத்தது அற்ப பொருள்தான் என்றாலும் மிகுந்த நாணயத்துடன் அதைத் திருப்பித்தருவது என்று வந்திருக்கிறேன். பணவிடயத்தில் நான் மிகவும் நேர்மையானவன்
என்பதை தாங்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்" என்று கூறியவாறு டம்பன் அந்த ஒரு காசினை முல்லாவிடம் கொடுத்தான். முகத்தில் மலர்ச்சி இல்லாமல் ஏதோ உபத்தைப்படுபவர் போல் அத னை வாங்கிக்கொண்டார் முல்லா. டம்பன் அந்த இடத்தை விட்டு அகலாமல் தலையினைச் சொறி ந்துகொண்டு நின்றான். "என்ன சமாச்சாரம்...?" என்று கேட்டார் முல்லா. "ஒன்றுமில்லை ஒரு ஐயாயிரம் பொற்காசுகள் தேவைப்படுகின்றது கொடுத்தீர்கள் என்றால் இதைத் திருப்பிக் கொடுத்தது போல் அத னையும் நாணயமாகத் திருப்பித்தருவேன்." என் றான் டம்பன். உனக்கு இனி நான் ஒரு காசுகூடக் கடனாகக் கொடுக்க முடியாது" என்று கோபமாகக் சொன்னார் முல்லா. "முதலில் நான் வாங்கிய ஒர காசைத்தான் திருப்பித் தந்துவிட்டேனே" என்று ஒன்றும் விளங்காமல் கேட்டான் டம்டபன். "நீ ஒரு காசு வாங்கிய விடையத்தில் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டாய்" என்றார் முல்லா. டம்பன் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தவனாய் " முல்லா அவர்களே நான் வாங்கிய தொகையினைத் திருப்பி க்கொடுத்திருக்கின்ற போது எவ்வாறு நான் நம்பி க்கைத் துரோகம் செய்ததாகக் கூறுகின்றீர்கள்" என்றான். " நம்பிக்ககைத் துரோகம் தான் செய்து விட்டாய் நான் கொடுத்த ஒருகாசை நீ திருப்பி க்கொடுக்கமாட்டாய் எனக நம்பினேன். நீயோ திருப்பிக் கொடுத்துவிட்டாய். ஆகவே நீ நம்பிக்கைத் துரோகம் தான் செய்து விட்டாய். உனக்கு ஒருகாசும் இனித் தர முடியாது" என்று கூறியவாறே முல்லா எழுந்து வீட்டுக்குள் சென்றுவிட்டார். டம்பன் அதிர்ச்சியுடன் வெளியேறினான்.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...