பின் தொடர்பவர்கள்

0167 உலகம் ஆன்மா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0167 உலகம் ஆன்மா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 19 ஜனவரி, 2020

0167 உலகம் ஆன்மா

உலகம் முழுவதையும் வெற்றி கொண்டாலும், தன் ஆன்மாவை இழந்துவிட்டால்?,,,,, பேசாலைதாஸ் 

             மகா அலெக்ஸ் சாண்டர் வாழ்க்கை யில் இருந்து நாம் பெரும் படிப்பினை களை கற்றுக்கொள்ள லாம், அலெக்சாண்டர் இறக்கும் தருவாயில் நான் இறந்தபிறகு கல்லரைக்கு வெளியே என் கைகள் தெரியும் படி விட்டு விடுங்கள். இந்த உல கத்தையே, வெல்ல நினைத்தவன் கடைசியில் வெறுங்கையுடன் தான் இந்த உலகத்தை விட்டு் சென்றான் என்று இந்த உலகம் தெரிந்து கொள் ளட்டும்.கடைசியில் ஆறடி நிலமே சொந்தமா னது. ஆனாலும் அது கூட கொஞ்ச காலத்துக்கு பிறகு ஆக்கிரமிக்கப்படும் 

                                  அலெக்சாண்டர் இந்தியாவிற்கு புறப்பட்டபோது, டயோஜனீசைக் காணச் சென் றான்.அந்த காலத்தில் அவர் மகா ஞானியாகத் திகழ்ந்தவர்.அவர் "அலெக்சாண்டரிம் எங்கே போகிறாய்? எதற்காகபோய்கிறாய்?" என்று கேட்டார்.
                                                 அதற்கு அலெக்சாண்டர், "ஆசியா முழுவதும் வெல்லப் போகிறேன் " என் றான். "அதை வென்றபின் என்ன செய்யப்போகி றாய்?" என்று கேட்டார். "இந்தியாவை வெல் வேன்" என்றான் அலெக்சாண்டர். "அப்புறம் "
"உலகத்தையே வெல்வேன் " என்றான்.

                                                அப்போது டயோஜனிஸ், ஆற்றங்கரை மணலில் நிர்வாணமாக வெயில் காய்ந்து கொண்டிருந்தார். "உலகம் முழுவதும் வென்றபின் என்ன செய்ய போகிறாய்?" என்று மீண்டும் கேட்டார். "நான் அதற்கு பிறகு நிம்ம தியாக ஓய்வெடுப்பேன்" என்றான் அலெக்சா ண்டர். அந்தப் பதிலைக் கேட்ட ஞானி சத்தமாக சிரித்தார். சற்று தூரத்தில் படுத்திருந்த தனது நாயை கூப்பிட்டார்.அது அவர் அருகில் வந்து நின்றது.

                                           டயோஜனிஸ் அந்த நாயைப் பார்த்து, "கேட்டாயா இவர் சொல்வதை? உலக த்தையெல்லாம் வெற்றி கொண்ட பிறகு,இந்த மனிதன் ஓய்வெடுக்க போகிறாராம்!.இங்கே நாம் ஒரு சிறு இடத்தைக் கூட வெல்லாமல் நிம் மதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறோம்!" என்றார்.

                       இப்படி தன் நாயிடம் சொல்லி விட்டு, அலெக்சாண்டரிடம்,"ஓய்வு தான் உன்னுடைய கடைசி இலட்சியம் என்றால் ,இந்த அழகான ஆற்றங்கையில் என்னுடனும், என் நாயுடனும் நீ இப்போதே சேர்ந்து கொள்ளலாமே? இங்கே நம் எல்லோருக்கும் தேவையான இடம் இருக்கிறது. நான் இங்கே ஓய்வெடுத்துக் கொண்டுதான் இரு க்கிறேன்.கடைசியில் ஓய்வெடுப்பதற்காக வேண்டி, ஏன் உலகம் முழுவதிலும் துன்ப துயர ங்களை உண்டாக்க வேண்டும்? இப்போதே இங் கேயே ஓய்வெடுக்கலாமே?!" என்று கூறினார்.

                                 அலெக்சாண்டருக்கு என்னவோ போலாகிவிட்டது." நீங்கள் சொல்வது அறிவு பூர்வமாகத் தான் இருக்கிறது. ஆனால் நான் இப்போது ஓய்வெடுக்க முடியாது.உலகத்தை முதலில் வென்றுவிடுகிறேன்" என்றான்.

                             அதை கேட்ட ஞானி, " உலகத்தை வெல்வதற்கும் ஓய்வெடுப்பதற்கும் சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லை. உலகத்தை வெல் லாமல் நான் இங்கே ஓய்வெடுக்கவில்லையா? என்று கேட்டார்.

                                          "நீங்கள் சொல்வது நியாயம் தான். ஆனால் நான் புறப்பட்டாகிவிட்டது. இனி பின்வாங்க வழியில்லை" என்றான் அலெக்சா ண்டர். அப்போது ஞானி சொன்ன தீர்க்கதரிச னம் தான் பலித்தது.அவர் சொன்னார், " நீ பாதி வழியில் திரும்பி விடத்தான் போகிறாய். பய ணம் முடிந்த பிறகு யார்தான் இதுவரை திரும்பி வந்திருக்கிறார்கள்?"

                                              இந்தியாவை வென்றபிறகு நாடு திரும்புகையில் பாதி வழியிலேயே அலெக் சாண்டர் இறந்து விட்டான்.கிரீசை அவன் அடை யவேயில்லை. எல்லா அலெக்சாண்டர்களும் செத்து தான் போகிறார்கள் பாதி வழியிலேயே!.
அவர்கள் செல்வங்களை சேர்க்கிறார்கள். ஆனால் அவற்றை அனுபவிக்க அவர்களுக்கு நேரம் அமைவதில்லை. 

                                        அவர்கள் எல்லா இசைக்கருவி களையும் திரட்டி விடுகிறார்கள்.சரியான தரு ணத்தில் வாசிக்கும் சக்தியை அவர்கள் இழந்து விடுகிறார்கள். அவர்கள் வெறுங்கையுடன் ஒன் றும் செய்யமுடியாமல் அழ ஆரம்பித்து விடுகி றார்கள். வாழ்க்கை என்பது வாழ்வதற்கே அது வும் பகிர்ந்து அன்பாக வாழ்வதற்கே, பகிர்வதற் கும், கொடுப்பதற்கும் பொன்னோபொருளோ  தேவையில்லை நம்மிடம் இருக்கும் பாசத்தை அன்பை கருணையை மற்றவர்களோடு பகிர்வ தற்கு  முன்வரும் பொது வாழ்க்கை அர்த்தமா கின்றது 
அன்புடன் பேசாலைதாஸ் 

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்  ஆசைகாட்டி மக்களை தூண்டி தம் காரியங்களை சாதிக்கும் பல மக்களை நாம் நிஜவாழ்வில் சந்தித்து இருக்கின்றோம்,...