பின் தொடர்பவர்கள்

0139 குருவே கடவுள்... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0139 குருவே கடவுள்... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 ஜூன், 2015

0139 குருவே கடவுள்...

குருவே கடவுள்...

அந்த நாட்டின் அரசனுக்கு இரண்டு மகன்கள். அவ னுக்குப் பின் நாட்டை ஆட்சி செய்ய வேண்டியவர் கள். எனவே அவர்கள் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க வேண்டும் என்று ஓர் ஆசிரியரிடம் கல்வி கற்பதற்கு அனுப்பி வைத்தான்.கல்வி கற்பதற்குப் புறப்பட்ட மகன்களுக்குச் சில அறிவுரைகளைப் போதித்தான் அரசன். ``பிள்ளைகளே... உங்களுக்கு அறிவுக் கண்ணை அளிப்பவர் ஆசிரியர். அவரை பெற்றோரைப் போல நேசிக்க வேண்டும். அடக்க மாக நடந்துகொள்ள வேண்டும். குருவின் பேச்சைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும். அவர் முன் சத்த மாகப் பேசக் கூடாது. அவரைச் சந்திக்கும்போது வணக்கம் செலுத்த வேண்டும். அவரிடம் அன்பாக வும், அடக்கமாகவும் இருக்க வேண்டும். கல்வி கற் கும் இடம் ஒரு கோவில், புத்தகங்கள் அறிவுப் பெட் டகங்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும்'' என்று கூறி அனுப்பி வைத்தான் அரசன். பிள்ளைகள் இரு வரும் கல்வி கற்பதற்குப் புறப்பட்டுச் சென்றனர். தந்தையின் சொல்படி தங்களது ஆசிரியரிடம் மிக வும் மரியாதையாக நடந்து வந்தனர்.
                                                  ஒருசமயம் ஆசிரியர் கல்வி போதித்துவிட்டு வெளியே செல்லப் புறப்பட்டார். உடனே மாணவர்கள் இரண்டு பேரும் போட்டி போட் டுக்கொண்டு ஆசிரியரின் காலணியை எடுத்துவர முண்டியடித்து ஓடினர். ஆளுக்கொரு காலணியை எடுத்துவந்து ஆசிரியரின் கால்களில் அணிவித்தா ர்கள். குருவும் மிகவும் மனம் மகிழ்ந்து நல்லாசி வழங்கினார். அதை அறிந்த அரசன் தனது மகன்க ளைப் பாராட்டினான். அந்தப் பிள்ளைகள் இருவரும் பிற்காலத்தில் சிறந்த மன்னர்களாகத் திகழ்ந்தார் கள். சிறுவயதில் தங்களுக்குப் பாடம் போதித்த குரு வையும் மறவாமல் உதவி செய்து உரிய கவுரவம் அளித்தனர்.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...