பின் தொடர்பவர்கள்

0223 புத்தகத்தை எடைபோடாதே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0223 புத்தகத்தை எடைபோடாதே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 27 ஜூலை, 2015

0223 அட்டையைப்பார்த்து புத்தகத்தை எடைபோடாதே

அட்டையைப்பார்த்து புத்தகத்தை எடைபோடாதே

இது நாகரீக உலகம், இங்கே ஆடம்பரங்கள், பகட்டு, பெருமை இவைகள்தான் முத ன்மையான இடத்தை பிடிக்கி ன்றது. எளிமை என்பது அர்த் தமற்ற ஒரு விடையமாக மா றிவிட்டது. விலை உயர்ந்த கா ரில் பவணி வருவது, விலை உயர்ந்த கைத்தொலைபேசி யில் பேசிக்கொண்டு பந்தா காட்டுவது, இப்படியாக இந்த உல கம் மாறி, மனிதர்களும் மாறிவிட்டார்கள். மனிதர்களை அவ ர்களின் நற்பண்பு, குணங்களை வைத்து எடை போடுவது தொலைந்துபோய்விட்டது. Do not judge the book by its cover அட்டையைப்பார்த்து புத்தகத்தை எடைபோடாதே என்பது பொதுவான ஒரு முதுமொழி. மனிதர்கள் வெறும் பகட்டில் மயங்கி, உண்மை அன்பை, குணத்தை மறந்துவிட்டார்கள், மதிப்பளிக்க தவறுகின்றார்கள் என்பதை விளக்கும் ஒரு சம் பவம் இதோ! ஒருமுறை முல்லா அவர்கள் அழுக்கு வேட்டி சட்டையோடு செல்வந்தர் ஒருவர் வீட்டுத் திருமண விருந்து க்குச் சென்றார். அவரை வாயிலிலே தடுத்தி நிறுத்திய காவ லாளர், இது முதலாளி வீட்டுத் திருமணம், அதனால் உமக்கு அனுமதி இல்லை என்றார். அதற்கு முல்லா, நான் உங்கள் முதலாளிக்கு நண்பன், அதனால் நான் உள்ளே செல்வதற்கு அனுமதி அளி என்றார். முடியாது, ஏனெனில் நீங்கள் கோட், சூட்டோடு வரவில்லையே என்று சொல்லி உங்களை உள்ளே அனுமதிக்க மாட்டேன், இது உறுதி என்றார் காவலாளர். அவ மானமாகத் திரும்பிச் சென்ற முல்லா அவர்கள், எப்படியும் முதலாளி வீட்டுத் திருமணத்தில் கலந்து கொள்வது எனத் தீர்மானித்தார். கடைக்குச் சென்று வாடகைக்கு கோட், சூட் வாங்கிப் போட்டுக் கொண்டு, வாடகைக் காரில் பந்தாவாகச் சென்றார். தலைவணங்கி வழிவிட்டார் காவலாளர். விருந்தி லும், மரியாதையோடு பந்தியில் அமர்த்தப்பட்டார் முல்லா. உணவும் பரிமாறப்பட்டது. உடனே உணவை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக கோட், சூட்டுக்கு ஊட்டத் தொடங்கினார் முல்லா. முல்லாவின் செயலை பந்தியில் அமர்ந்திருந்த எல் லாரும் வியப்போடு வேடிக்கை பார்த்தனர். விருந்தைப் பார் வையிட வந்த முதலாளி, பதறிப்போய், முல்லா, இது என்ன, கோட், சூட்டுக்கு உணவூட்டுகிறீர் என்று கேட்டார். அப்போது முல்லா, முதலாளி, இந்த கோட், சூட்டுக்குத்தானே மதிப்பு என்றார்.

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...