பின் தொடர்பவர்கள்

பிதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 29 ஜூலை, 2015

0226 மாதா, பிதா, குரு, தெய்வம்,

மாதா பிதா குரு தெய்வம், 

மாதா, பிதா, குரு, தெய்வம், படைத்த இறைவனுக்கு மேலாக ஆசிரியரை போற் றி துதிக்கும் இனம் நமது இனம்! ஆனால் ஆசிரியர் தொழிலை இலட்சிய தொழி லாக, உயர்வான தொழிலாக நாம் இப் போது கருதுவதில்லை. அதற்கு ஆசிரியர் களும் ஒருவிதத்தில் காரனம். வருமானம் குறைந்த தொழில் என்று நன்றாக தெரிந்தும் கூட, அந்த தொழிலை தெரிவு செய்து விட்டு, பின்னர் பொருளாதார வசதி கருதி, தமது நேரத்தை மாற்று தொழில்களுக்கு பாவிக்கும் ஆசிரியர்கள் ஒருபுறம், ஒழுக்கம் பண்பாடுகளை மறந்து, இலட்சியமற்று இருக்கும் ஆசிரியர்கள் மறுபுறம். இந்த ஆசிரியர்களைக் கண்டு மாணவ சமூகம் எள்ளி நகையாடுகின்றது. நான் இறக்கும் தருவாயில் மாணவர்களுக்கு போதித்த வண்ணம் உயிர்பிரிய வேண்டும் என்று எண்ணிய அந்த விஞ்ஞானியை இப்போது என் மனக் கண் முன் உருவகித்துப்பார்க்கின்றேன். அந்த விஞ்ஞானியின் பாடசாலை வாழ்க்கையை சற்று அலசிப்பார்ப்போமா? அந்த மாணவர் மிகவும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இளவய திலேயே படிக்க வசதியில்லாமல் சிறுசிறு வேலைகளைச் செய்து படிப்பைத் தொடர்ந்தவர். உயர் கல்விக்காக வெளியூர் செல்ல வேண்டியிருந்தபோது, இவரின் சகோதரி த‌ன் நகையை விற்று பணம் கொடுத்தார். இவர் மேற்படிப்பை மேற்கொண்டிரு ந்தபோது, தந்தையின் சிறுதொழிலும் முடங்கியதால், படிப்பை பாதியிலேயே விடவேண்டிய நிலை. ஊருக்குத் திரும்ப பணம் இல்லாததால், தன் புத்தகங்களை பழைய பேப்பர் கடைக்கார ரிடம் எடுத்துச் சென்றார். நன்றாகப் படிக்கிற ஒரு மாணவனு க்கு இப்படி ஒரு நிலையா என வருத்தமுற்ற அந்த பழைய பேப்பர் கடைக்காரர், அவரின் புத்தகங்களை வாங்க மறுத்து, அவரின் படிப்புக்கான செலவுக்கும் பணம் கொடுத்து அனுப்பி னார். அந்த மாணவரின் வாழ்வு முழுவதும் மறக்கமுடியாத சம்பவம் அது. அதன்பின் எத்தனையோ உயர் பதவிகளை வகித் தாலும் அந்த மாணவர், பேப்பர்காரரை என்றும் நன்றியோடு குறிப்பிடுவார். ஒருமுறை இவரின் ஏவுகணை வெற்றியைத் தொடர்ந்து அந்த நாட்டு பிரதமரே இவரைச் சந்திக்க விரும்பிய போது, இவர் தன் சக அறிவியலாளரிடம் கூறிய வார்த்தைகள் என்ன தெரியுமா? 'பிரதமரைச் சந்திக்கச் செல்ல, என்னிடம் நல்ல ஆடைகளே இல்லையே”என்பதேயாகும். ஒருமுறை ஏழ் மையில் வாடிய, அதேவேளை மிகுந்த புத்திசாலியான ஓர் இராஜஸ்தான் மாணவனைச் சந்தித்தார் நம் இந்த ஏவுகணை அறிவியலாளர். நல்ல திறமையிருந்தும் அந்தச் சிறுவன், ஏழ் மையால் மனம் தளர்ந்து சோம்பிப் போயிருந்தான். அவனுடன் சில நிமிடங்கள் தனிமையில் பேசி அவன் மனதை மாற்றி நம் பிக்கையை ஊட்டினார் இவர். அதனால் அந்த சிறுவன் தன் பெயரை மாற்றி இந்த அறிவியலாளரின் பெயரை வைத்துக் கொண்டான். இந்த அறிவியலாளர், அரசின் உயர் பதவியை வகித்தவர் என்பதால் இவருக்கு அரசு பாதுகாப்பு வழங்கப்பட்டி ருந்தது. இவருக்குப் பாதுகாப்பாக முன்னால் சென்ற வாகனத் தில் ஒரு பாதுகாப்பு வீரர் துப்பாக்கியை ஏந்தியபடி நின்று கொண்டே வந்தார். இவர் தன் உடன் பயணிகளிடம், ‘அவரை உட்காரச் சொல்லுங்கள், அவருக்கு கால் வலிக்கும்’ என சொல்லிப் பார்த்தார். ஆனால் கடைசிவரை அந்தச் செய்தி, முன் வாகனத்தில் அமர்ந்திருந்தவர்களுக்குச் சென்றடையவி ல்லை. சேர வேண்டிய இடம் சென்றடைந்தவுடன், இந்த அறிவி யலாளர் அந்த வீரரை அழைத்து, கைகுலுக்கி ‘thank you buddy’ என்றார். ‘நீ சோர்வாக இருக்கிறாயா? ஏதாவது சாப்பிடு. என் னால் நீ அவ்வளவு நேரம் நிற்க வேண்டியிருந்தது எனக்கு வருத்தமாக இருக்கிறது’ என்றார். அவர் இப்படிச் சொன்னது அந்த வீரருக்கு ஆச்சரியமாக இருந்தது. வார்த்தைகள் இல்லா மல், ‘சார். உங்களுக்காக இன்னும் 6 மணிநேரம்கூட நிற்பேன்' என்றார். இது நடந்தது அந்த முன்னாள அரசுத்தலைவர் இறப்ப தற்கும் சில மணித்துளிகளுக்கு முன்னால். ஒருமுறை தன் முன்னாள் மாணவரிடம், அறிவியளாளரும் முன்னாள் அரசுத் தலைவருமான இவர் கேட்டார், 'நீ இளைஞன். நீ என்னவாக நினைவில் கொள்ளப்பட விரும்புகிறாய்?’ என்று. அந்த மாண வரோ,‘முதலில் நீங்கள் சொல்லுங்கள். எதற்காக மக்கள் உங் களை நினைவில் வைத்திருக்க விரும்புகிறீர்கள்? குடியரசுத் தலைவர், அறிவியலாளர், எழுத்தாளர், ஏவுகணை நாயகன், இப்படி எதை எனச் சொல்லுங்கள்!’ என அவரிடமே திரும்பக் கேட்டடார். 'ஆசிரியராக’என்று அடக்கமாகப் பதில் சொன்னார் அந்த அறிவியல் மேதை அப்துல் கலாம். அந்த அறிவுலக மாமேதைக்கு என் அஞ்சலிகள்! பேசாலைதாஸ்

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...