பின் தொடர்பவர்கள்

0464 பலூன்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0464 பலூன்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 20 டிசம்பர், 2017

0464 பெயர்கள் எழுதப்பட்டப் பலூன்கள்

பெயர்கள் எழுதப்பட்டப் பலூன்கள்

அன்பர்களே நாம் யாரை அன்பு செய்கி ன்றோமோ? அல்லது யாருடைய அன்பை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகின்றோமோ அவர்களைப்பற்றி உயர்வான மதிப்பீடுகளை நாம் வைத்திருக்கவேண்டும், ஒருவரைப்பற்றி கீழ்த்தரமான எண்ணங்களை வைத்துக்கொ ண்டு, அவர்களிடம் இருந்து அன்பை பெற்று க்கொள்ள முயல்வது முட்டாள் தனமானது. நாம் அன்பை எதிர்பார்க்கும் ஒருவரைப்பற்றி அழகான, உயர்வான மதி ப்பான எண்ணங்களை முதலில் நமக்குள் வைத்திருக்கவேண்டும். அவரிடம் ஆயிரம் குறைகள் இருக்கலாம், அதுபற்றிய கவலை நம்க்கு எதற்கு? அவரைப்பற்றி நாம் அழகான மதிப்பான உயர்வான எண்ண ங்களை நாம் வைத்திருக்கின்றோம், அதனை அவருக்கு நாம் அடிக்கடி சொல்லும்போது, அதனை அவருக்கு நாம் கொடுக்கும் போது, குறித்த நபர் பதிலுக்கு நம்மைப்பற்றி அழகான உயர்வான எண்ணங்களை  அவ ரது உள்ளத்தில்   வளர்த்துக்கொள்ளும் வழியை உருவாக்கும், அதுவே அவரிடம் ஆழமான அன்பை உருவாக்கும், தன்னிடம் உள்ள குறைகளை அவரே கண்டுபிடித்து அதனை திருத்திக்கொள்ள முயற்சிப்பார். முத லில் அவரவருக்குரிய மதிப்புக்களை அவருக்கு கொடுங்கள்! அவரை ப்பறிய உயர்வான எண்ணங்களை அவருக்கு தெரியப்படுத்துங்கள் அன்பும் பாசமும் அமுதாய் பொழியும், இன்பம் பெருகும், இதனை மிக எளிதாக விளக்கும் ஒரு பயிற்ச்சி பாசரைக்கு உங்களை அழைத்து செல்கின்றேன்,,,,,,,,,,,,
                                                       தன்னையே முன்னேற்றும் வழிகளைக் கற்றுத் தரும் பயிற்சிப் பாசறை ஒன்று நடந்தது. 200க்கும் அதிகமானோர் பங்கே ற்ற அந்தப் பாசறையை வழி நடத்திய வர், தனது உரையை நடுவில் திடீ ரென நிறு த்தினார். பாசறையில் கலந்து கொண்டோருக்கு ஒரு பயிற்சி யளிக்கப் போவதாகக் கூறினார். அரங்கத்தில் இருந்த ஒவ்வொருவரு க்கும் காற்றடைக்கப்பட்ட ஒரு பலூன் கொடுக்கப்பட் டது. அந்தப் பலூ ன்களில் அவரவர் தங்கள் பெயர்களை பெரிதாக எழுதும்படி கூறினார், பயிற்சியாளர்.
                                                     பெயர்கள் எழுதப்பட்டப் பலூன்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு, அடுத்த அறையில் வைக்கப்பட்டன. பின்னர், பயிற்சி யாளர், அரங்கத்திலிருந்தவர்களி டம், "நீங்கள் அனைவரும் அடுத்த அறைக்குள் சென்று, உங்கள் பெயர் எழுதப்ப ட்ட பலூனை எடுத்துவாரு ங்கள். உங்களுக்கு 5 நிமிடங்கள் தரப்பட்டுள்ளன" என்று கூறினார்.
அரங்கத்தில் இருந்த அனைவரும், அடுத்த அறைக்குள் சென்று, அவசர, அவசர மாகத் தங்கள் பலூனைத் தேடினர். குறிப்பிட்ட 5 நிமிடங்களுக்குள் ஒருவரும் தங்கள் பெயர் எழுதப்பட்டப் பலூனைக் கண்டுபிடிக்கமுடி யவில்லை.
                       5 நிமிடங்கள் சென்றதும், அறையில் நுழைந்த பயிற்சியாளர், "சரி, இப்போது நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கு முன் இருக்கும் பலூ னை எடுத்து, அதில் எழுதப்பட்டுள்ள பெயருக்கு உரியவரிடம் அதைக் கொடுங்கள்" என்று கூறி னார். அடுத்த 5 நிமிடங்களுக்குள், ஒவ்வொருவ ரும் அவரவர் பெயர் எழுத ப்பட்டிருந்த பலூனைப் பெற்றுக் கொண்டனர்.
அடுத்தவருக்குரிய அடையாளத்தையும், மகிழ்வையும், மதிப்பையும், அழகான எண்ணங்களையும்,   உயர்வான அபிப்பிராயங்களையும் அவர்களுக்கு வழங்கும்போது, நமக்குரிய அடையாளமும், மகிழ்வும், அன்பும் பாசமும் தானாகவே நம்மை வந்தடையும்.
அன்புக்கு வழி சொல்லும் உங்கள் அன்பின் பேசாலைதாஸ்

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...