அன்பர்களே பக்தி என்ற பரவசத்துக்குள் வீழ்ந்து, சிலவேளைகளில் பகுத் தறிவை இழந்து ஏமாளிகள் ஆகின்றோம். கடவுள் பக்தியை கருவியாக கொண்டு, நித்தியானந்தா போன்ற போலிச்சாமியாரை நம்பி மக்கள் மோசம் போகின்றார்கள். தற்போது மேலை நாட்டு மதம் என்று அழைக்கப் படும், கிறிஸ்தவ மதத்துக்குள்ளும், போல் தினகரன் போன்ற போதகர்கள், செலவ்ந்தர்களாக மாறி, வெளிநாடுகளிலும், இந்தியாவிலும், கோடி கோடி யாக சொத்து குவித்து வருகின்றார்கள். இதற்கெல்லாம் யார் காரனம்? மக்களின் கடவுள் நம்பிக்கை ஆதாரமாக கொண்டு இவர்கள் செயல்படுகி ன்றார்கள். நாம் எதையும் தீர ஆராய்வதில்லை ஆய்வுக்கு உட்படுத்துவதே இல்லை, இந்த மடமை இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் ஏராளம் உண்டு! அதை துள்ளியாமாக விபரிக்கும் கதை இதோ!
ஒரு துறவியின் சமாதியை பராமரிக் கும் பொறுப்பை ஒரு பெரியவரும் அவரின் மகனும் ஏற்றுக் கொண்டு, அதை சுத்தமாகவும் மக்கள் வந்து வழிபடுவதற்கு வசதியாகவும் செய்து வந்தார்கள் . அவர்களு க்கு வேறு எந்த வேலை யும் இல்லாததால் முழு நேர பணியாக ஏற்றுக் கொண்டு அதை செய்து செய்தார்கள். சிறிது சிறிதாக மக்கள் கூட்டம் அதி கமாக வர ஆரம் பித்தது. மக்கள் மிகுந்த பக்தியோடு மகானின் சமாதியை வணங்க ஆரம்பித்தார்கள். மகானின் புகழ் எல்லா இடங்களிலும் பரவ ஆர ம்பித்தது மக்கள் கூட்டம் அலை மோதியது .மக்கள் எல்லோரும் காணிக் கையாக நிறைய பொருட்களையும் காசுகளையும் சமாதியில் செலுத்திய தால் அதை பராமரித்த பெரியவர் பெரும் பணக்காரர் ஆனார் மிகவும் வசதியான வாழ்க்கையை வாழ ஆரம்பித்தார் ..
சொத்துக்கள் நிறைய சேர்ந்தன அவருடைய மகனும் பெரியவன் ஆனான் ..இந்த நிலையில் சொத்துக்கள் மீது மகனுக்கு ஆசை வந்தது ..அதை பிரித்துக் கொள்வதில் தந்தைக்கும் மகனுக்கும் போட்டி வந்து விட்டது ..அந்த பெரியவர் மகனை எப்படியாவது அங்கிருந்து விரட்ட நினைத்தார் ..அவர் அவனிடம் இனிமேல் இந்த சொத்துக்கள் உனக்கு எது வும் சொந்தமில்லை .. என்று சொல்லி கொஞ்சம் பொருட்களையும் ஒரு கழுதை குட்டியையும் கொடுத்து நீ எங்கேயாவது போய் இதை வைத்து பிழைத்துக் கொள் என்று அனுப்பி விட்டார் .. அவனும் வேறு ஒரு ஊருக்கு சென்று அங்கு தங்கினான் ..
சிறிது நாட்கள் யோசனை செய்தான் ..அவனிடம் இருந்த கழுதைக் குட் டியை அடித்து கொன்று அதை ஒரு இடத்தில் புதைத் தான் .. அவனிடம் இருந்த கொஞ்சம் பொருளைக் கொண்டு அதன் மீது ஒரு சமாதியை கட்டினான் ...அங்கு வந்த மக்களிடம் ஒரு மகான் இந்த இடத்தல் சமாதி அடைந்திருக்கிறார் என்று நம்பவைத்தான் .. மக்கள் யாவரும்
அந்த மகான் யார் என்று கேட்க வில்லை ...பய பக்தியுடன் சமாதியை வணங்கினார்கள் .. சமாதியின் புகழ் ஊரெங்கும் பரவ ஆரம்பித்தது
மக்கள் தாராளமாக பணத் தையும் பொருட்களையும் சமாதிக்கு வழங்கி னார்கள் ..நிறைய பணமும் பொருட்களும் சேர் ந்தன .அவனும் மிகுந்த செல்வந்தன் ஆனான் .. பெரிய பங்களா கார் என்று வசதிகள் வளர்ந் தன ..
ஒருநாள் அவன் தனது வயதான தந்தையை சந்திக்க நேர்ந்தது .. இவனுடைய வசதியான வாழ்க்கையின் நிலையை கண்ட அவர் அவனிடம் எப்படி பெரிய பணக்காரன் ஆனாய் என்று கேட் டார் ..அவனும் தனது தந்தையிடம் நடந்த அனைத்தையும் விளக்கமாக கூறினான் .. அவரும் தனது மகனை மிகவும் பாராட்டினார் .. அவனின் திறமையை வியந்து போற்றினார் ..தனது மகனிடம் அவர் மகனே நீ இந்த சமாதியில் புதைத்த கழுதைக் குட்டியின் தாய் கழுதைதான் பழைய சமாதியில் அடக்கம் ஆகி இருக்கிறது என்ற உண்மையைக் கூறினார் ..
மக்கள் எல்லோரும் இப்படித்தான் இருக்கிறார்கள் .. என்னவென்று எதை யுமே விசாரிப்பதில்லை .. எல்லாவற்றையும் உண்மை என்று நம்பி விடுகி றார்கள் அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்