பின் தொடர்பவர்கள்

0251 பழங்காலக் காசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0251 பழங்காலக் காசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 17 செப்டம்பர், 2015

0251 பழங்காலக் காசும் நல்ல சகுனமும்


பழங்காலக் காசும் நல்ல சகுனமும்

அன்பர்களே பழைய நாண யம், வலம்புரிசங்கு இது போன்ற பொருட்கள் மீது அதிஸ்டம் இருப்பதாகவும், ஊணம் உற்றோர், விதைவைகள் கறுத்த பூனை இவைகளை நேருக்கு நேர் சந்தித்தால் கெட்ட சகுணம் என்கின்றோம், இவையெல்லாம் வெறும் கற்பனை உருவகங்கள். அறிவியல் அர்த்தமற்ற மூட நம்பிக்கைகள்,

                                                   ஒரு முறை ஒரு நோர்வே நண்பருடன் காரில் பயணித்தேன், அது பனிக்காலம், திடீரெ ன்று கறுத்த பூணை ஒன்று குறுக்காக பாய்ந்தது, நல்லவேளை நான் மெத்வாக பயணித்ததால், பனிவழுக்கல் ஆபத்தில் இருந்து தப்பிவிட்டேன், கறுத்த பூணை பாய்வது நல்ல சகுனம் அல்ல என்வே நோர்வே நண்பரை அவதானமாக இருக்கும்படி அறிவுரை கூற, அவரும் சிரித்தபடி, உங்கள் ஆசிய நாட்டில் தான் பில்லி ,சூணியம், சகுணம் பார்ப்பார்கள், நாங்கள் இதனை நம்புவதே இல்லை அதனால் அது எங்களை பாதி க்காது என்று சொன்னவர், உண்மையில் அந்த கறுத்த பூணை தான், பாவம் அது பதுங்கி இருந்து, நல்ல தருனம் பார்த்து, பாய்ந்து தன் இறையை பிடிக்க இருந்தவேளை, அந்த சந்த ர்ப்பத்தை நீங்கள் தான் கெடுத்துவிட்டீர்கள் என்று சிரித்தபடி சொன்னார்.  சகுனம் என்பதை பொருத்ததல்ல நம்து வெற்றி தோல்விகள், நமது விட முயற்ச்சி, உழைப்பு இவைகளே வெர்ரி தோல்விகளை நிர்னயிக்கின்றன, சிலவேளை அதிஸ்டமும் கூடவே கைகொடுக்கலாம் ஆனாலும் முயற்றியே வெற்றி தரும்.  உண்மையில் நமது உயர்வு நமது முயற்ச்சியில் உள்ளது என்பதை எளிதாய் விளக்கும் ஒரு சின்ன கதை இது! 

                                                           அவர் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தார். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக் காசின் நடுவில் துளை இருந்தது. துளையிட்ட காசு கிடைத்தால் அதிர்ஷ்டம் வரும் என்று ஒரு நம்பிக்கை. அதனால், ‘அதிர்ஷ்டம் என்னைத் தேடி வரும், பணக்காரனாகிவிடுவேன்’ என்று நினைத்தார். அந்தக் காசைத் தன் கோட்டுப் பையில் போட்டுக் கொண்டார். அன்று, அவருக்கு மற்ற நாள்களைவிட அதிக வருமானம் கிடைத்தது. ‘எல்லாம் காசு கிடைத்த நேரம்’ என நினைத்தார். அன்றிலிருந்து அவர் தினமும் கோட்டுப் பையில் இருக்கும் காசை தொட்டுப் பார்த்துக்கொள்வார். வெளியே எடுக்கமா  ட்டார். சில ஆண்டுகளில் பணம், பதவி அனைத்தும் வந்து சேர்ந்தன. பல வருடங்களுக்குப் பின், ஒரு நாள் தன் மனைவி யிடம், ”அந்தக் காசைப் பார்க்கவேண்டும் போலுள்ளது” என்றவாறு கோட்டுப் பையில் இருந்து எடுத்தவருக்கு அதி ர்ச்சி! அந்தக் காசில் துளையே இல்லை. ‘என்ன ஆயிற்று?’ என்று குழப்பத்துடன் பார்த்தார். அவன் மனைவி சொன்னார், “என்னை மன்னியுங்கள். உங்கள் கோட்டு தூசியாக இருக்கி றதே என்று வெளியே உதறினேன். அதில் நீங்கள் வைத்திருந்த துளையிட்ட காசு தெருவில் விழுந்துவிட்டது. எவ்வளவோ தேடியும் கிடைக்கவில்லை. நான்தான் வேறொரு காசைப் போட்டுவைத்தேன்” என்றார். “இது எப்போது நடந்தது?” என்று கணவர் கேட்டார். “அந்தக் காசு கிடைத்த மறுநாளே” என்றார் மனைவி. கணவர் அமைதியாக சிந்திக்கத் தொடங்கினார்.

உண்மையில் அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது, அந்த நாணயம் அல்ல, தன்னுடைய நம்பிக்கைதான் என்பதை உணர்ந்தார். முன்பைவிட உற்சாகத்துடன் தனது பணியைத் தொடர்ந்தார். வெறியில் சிறந்தார் என்ன நண்பர்களே நான் சொல்வது உண்மைதானே ன்றும் நீங்கா அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...