பின் தொடர்பவர்கள்

0248 கல்லில் எழுது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0248 கல்லில் எழுது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 10 செப்டம்பர், 2015

0248 கல்லில் எழுது

 கல்லில் எழுது

அன்பர்களே இன்றைய உல கில் நன்றி உணர்வு மருந்தி ற்கு கூடகிடைக்காது. சொந்த சகோதரங்கள் கூட நன்றி மற ந்து வாழும் உலகம் இது. நன்றி மறந்தவர்களுக்கு வாழ் வில் நிம்மதி கிடைக்காமல் ஒரு நாள் வருந்துவார்கள் என்று வள்ளுவன் சொல்லி இருக் கின்றான்என் நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம், உய்வில்லை செய் நன்றி இல்லாதார்க்கு. கடவுள் கூட நன்றி உணர்வை எதிர்பார்க்கின்றார் என்று வேதாகமம் அழகாக சொல்கின்றது. 

                                             காலத்தால்  செய்த உதவி சிறிது எனினும் ஞாலத்தில் மானப்பெரிது. சின்ன உதவியாக இருந்தாலும்,         மிக  கஸ்டமான காலங்களில்  அது நமது வாழ்வை காப்பாற்றிய‌ பெரிய உதவி அல்லவா, அதை நாம் எளிதில் மறந்துவிடலாமா? .நன்றியை கல்லின் மேல் எழுத்தாக இதயத்தில் பதிக்கவேண்டும் என்பதை அழகாக சொல்லும் கதை இது!

                                      பாலை மணல் வெளியில் நட ந்து போய்க் கொண்டிருந்தார் கள் இரு நண்பர்கள். ஒரு கட் ட த்தில் இருவருக்கும் ஒரு விடயம் குறித்து வாக்குவா தம் ஆரம்பி த்தது. அது வாய்ச் ச ண்டையாக மாறியபோது, நண்பனின் கன்னத்தில் அறைந்துவிட்டான் மற்றொருவன். அறை வாங்கியவன், கோபிக்கவில்லை. அமைதியாக ஒதுங் கிப்போய் மணலில் அமர்ந்து, “இன்று என் உயிர் நண்பன் என் கன்னத்தில் அறைந்துவிட்டான்!” என மணலில் தன் விரல் கொண்டு எழுதினான். மற்றவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருவரும் நடையைத் தொடர்ந்தார்கள். வழியில் ஒரு பாலை வன ஊற்றைக் கண்டார்கள்.

நடந்ததை மறந்து, அந்த ஊற்றில் வெப்பம் தீர குளிக்க ஆரம்பி த்தார்கள். கன்னத்தில் அறை வாங்கியவன் காலை, திடீரெ ன்று யாரோ இழுப்பது போன்ற உணர்வு. புதைக்குழியில் சிக் கிக் கொண்டதை உணர்ந்து அவன் கத்தினான். நண்பனின் நிலை கண்டதும், பெரும் சிரமப்பட்டு அவனைக் காப்பாற்றி கரையேற்றினான், அவனை அறைந்தவன். உயிர் பிழைத்த நண்பன், ஊற்றை விட்டு வெளியில் வந்ததும், அருகில் இருந்த ஒரு பாறையின் மீதமர்ந்து, மற்றொரு கல் கொண்டு பாறை யில் எழுத்துக்களைப் பொறிக்க ஆரம்பித்தான் - “இன்று என் உயிர் நண்பன் என் உயிரைக் காப்பாற்றினான்” இதையெ லலாம் பார்த்த மற்றவன், “நான் உன்னை அறைந்தபோது, மணலில் எழுதினாய். இப்போது காப்பாற்றியிருக்கிறேன். கல்லில் எழுதுகிறாய். இதற்கு என்ன அர்த்தம் நண்பா?” என்று கேட்டான். அறை வாங்கிய நண்பன், “யாராவது நம்மை காய ப்படுத்தினால், அதை மணலில் எழுதிவிடு. மன்னிப்பு எனும் காற்று, அதை அழித்துவிட்டுப் போய்விடும். ஆனால் யாராவது நல்லது செய்தால், அதை கல்லில் எழுது. காலத்தைத் தாண்டி அது நிலைத்திருக்க வேண்டும்!” என்று சொன்னான். நன்றியை கல்லின் மேல் எழுத்தாக இதயத்தில் பதிக்கசொல்லும் அன்பின் பேசாலைதாஸ்

பேரழகும் பெருஞ்செல்வமும்

பேரழகும்  பெருஞ்செல்வமும்   பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...