பின் தொடர்பவர்கள்

0558 கற்றது கைமண் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0558 கற்றது கைமண் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 3 ஜூலை, 2018

0558 கற்றது கைமண்

 கற்றது கைமண் அளவு ,பேசாலைதாஸ்                                                                    

அன்பர்களே எல்லாம் தெரிந்தவன் தான் அறிவாளி என்று நாம் தவறாக மதிப்பீடு செய்கின்றோம். அது எவ்வளவு மடமை என்பதை இந்த கதை முலமாக தெரிந்து கொள்ளுங்கள்! உலகத் தில் மிக அறிவாளி யார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆசையில் டெல்பி எனும் கிரேக்க ஆலையத்திற்கு சென்றான். ஒரு கிரேக்க நாடோடி ,அந்த ஆலையத்தில் இருக்கும் டெல்பி சிலை நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் ஆற்றல் படைத்தது. அங்கு சென்ற நாடோடி, கேட்டான், உலகத்தில் தலை சிறந்த அறிவாளி யார் என்று கேட்க, டெல்பி சாக்ரட்டீஸ் என பதில் சொன்னது. 

                                                        அந்த சாக்ரட்டீசை காண்பதற்கு ஆசைப்பட்டு , சாக்ரட்டீசிடம் சென்றான். சாக்ரட்டீசைக் கண்டதும் அவர் மிகச்சாதா ரணமாக இருப்பதைப்பார்த்து, டெல்பி சொன்னது நீர்தான் உலகத்தில் தலை சிறந்த அறிவாளி என்று, அது உண்மையா என்று வினாவினான். சாக்ரட்டீஸ் மிக தாழ்மையாக நேற்றுவரை நான் அப்படித்தான் நினை த்தேன். இன்றுதான் நான் தெரிந்து கொண்டேன், நான் ஒரு அறிவாளி அல்ல என்று,, நாடோடிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது, நேராக டெல்பி ஆலையம் சென்று, டெல்பி சிலையிடம், நீ சொல்கின்றான்

                                                                                 உலகத்தில் தலை சிறந்த அறிவாளி சாக்ரட்டீஸ் என்று அவரோ நான் இல்லை என்கின்றான். என்ன நீ என்னை ஏமாற்றுகின்றாயா? எனக்கேட்டான். அதற்கு டெல்பி சொன்னது, அதனால் தான் சாக்ரட்டீஸ் உலக அறிவாளி என்றேன். ஒருவேளை இந்த கேள்வியை நீ கேட்டு இருந்தால் எனது பதிக்ல் சாக்ரட்டீச் இல்லை என் பதாக இருந்திருக்கும்! எவன் ஒருவன் தான் அறிவதற்கு இன்னும் நிறைய இருக்கின்றது, நான் கற்றுக்கொண்டது சொற்பமே என நினைப்பவன் உலகத்தில் அறிவாளி ஆகின்றான் என டெல்பி சிலை அமைதியாக விள க்கம் கொடுத்தது. கற்றது கைமண் அளவு ,,,அன்புடன் பேசாலைதாஸ் (இந்த கதை நாம் கட்சி அமைப்பாளர் சீமானின் உரையில் இருந்து சுட்டது)

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...