பின் தொடர்பவர்கள்

0441 வெங்கய காதல்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0441 வெங்கய காதல்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 21 மார்ச், 2017

0441 வெங்கய காதல்!

வெங்கய காதல்!









அறிவற்றவனை வெங்காயம் என்றழைக்கும்
மானிடர் மடமை  எனக்கு வியப்பை  விதைக்கின்றது!
உன்னைக் கொல்பவர் கண்களில் ஈரத்தை
தெளிக்கும் தெளிவான அறிவு யாருக்கு உண்டு!

என்ணெய்யில்  உன்னை  வறுத்து வதைத்தாலும்
பொன்னிறம் காட்டும் பொன்மனச் செம்மல் நீ!
என்னைப்பொறுத்தவரை, வெங்காயமே நீ
பளபளக்கும் இறகுகளைக் கொண்ட
ஒரு பறவையைக் காட்டிலும் செளந்தரியமானவள் நீ

வட்ட வட்டமாய் வெட்டி உன்னை, தக்காளித் துண்டோடு
துவையல் செய்யும் என் மனைவி, உன்னை காதலிப்பது
என்னை வெறுப்பேற்றுகின்றது,  வெங்காய சம்பல்
எனக்கு காம  வெறி ஏற்றும் என்று, உன்னை என்னிடம்
புழுகித்தள்ளுகின்றாள். காமம் பற்றாமல் ஒரு நாள்அவள்
புழம்பியழுதாள் உன்னைவிட வெங்காயம் மேல் என்று,
ஆண்மை என்னை ஏளனம் செய்ய வெட்கி தலை குனிந்தேன்
                                                                                பேசாலைதாஸ்
( கவிதை படைக்க ஊக்குவித்த பாப்லே நெருடாவுக்கு நன்றி)

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...