பின் தொடர்பவர்கள்

0286 ஜோடிக் கிளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0286 ஜோடிக் கிளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 14 டிசம்பர், 2015

0286 ஜோடிக் கிளி

           ஜோடிக் கிளி


அன்பர்களே நாம் எத்தகைய ஆபத்தில் மாட்டிக்கொண்டாலும் நமது புத்தி சாதுரியம் நம்மை ஆபத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும், என் வாழ்வில் நடந்த ஒரு அனுபவம் இதற்கு நல்ல உதாரணம், ஒரு முறை எனது ஊரிலே ஒரு சிறு பிள்ளையின்  சவ அடக்கம் சேமக்காலையில் நடந்தது,  அந்த நேரம் பார்த்து இராணுவம் சேமக்காலையை சுற்றி வளைத்தது, காரனம் இயக்கத்தில் இருக்கும் ஒருவன் அக்கூட்டத்தில் இருப்பதாக தகவல் இராணுவத்துக்கு கிடைத்துள்ளது. ஒவ்வொருவராக இராணுவம் சோதனை செய்தது இந்த நேரத்தில் அந்த இயக்க தோழனை காப்பாற்ற  அவன் நண்பன் காக்காவலிப்பு வந்தது போல கீழே விழுந்து பெரிய சத்தத்தோடு கையை காலை உதறினான், உடனே நான்கு பேர் அவனை தூக்கிக்கொண்டு இராணவ சிப்பாய் தலைவனிடம் கொண்டு சென்றனர் உடனே அவனும் அவர்களை வெளியே போக அனுமதித்தான் அவர்களுடன் தேடப்பட்ட இயக்க தோழனும் வெளியேறிவிட்டான். இதனை மேலும் தெளிவாக்க இதோ எனது கற்பனைக்கதை

ஒருர்வர் கிளி ஒன்றை கூண்டினுள் வைத்து வளர்த்து வந்தார் . ஒரு முறை அவர் உயிலங்குளம் செல்லும்போது, கிளி சொல்லிற்றாம், ''என் ஜோடிக் கிளி அங்கிருக்கும். அதனிடம் நான் இங்கு கூண்டில் இருப்பதாகச் சொல்லுங்கள்'' என்று. அவரும் தன் வேலை முடிந்தபின், சிரமப்பட்டு, காட்டில் தனியாக இருந்த அந்தக் கிளியைக் கண்டு விபரம் சொல்ல, அது உடனே கண்ணீர் உகுத்து, கீழே சுருண்டு விழுந்துவிட்டது. 'அடடா, இந்தக் கிளி இறந்ததற்கு நாம் காரணமாகி விட்டோ மே,' என்று வருத்தப்பட்டு, ஊருக்கு வந்து கூண்டுக் கிளியிடம் விபரம் சொல்ல, அக்கிளியும் கண்ணீர் உகுத்து கூண்டினுள்ளேயே விழுந்துவிட்டது. நம்மால் இந்தக் கிளியும் அநியாய மாய் இறந்து விட்டதே என்ற வருத்தத்துடன் கூண்டைத் திறந் தார் அவர். உடனே அந்தக் கிளி பறந்து போய் பக்கத்திலிருந்த மரக்கிளையில் அமர்ந்தது. அதிர்ச்சியான அவர், ''உன் ஜோடிக் கிளி இறந்தது தெரிந்தும், நீ என்னிடம் நடித்துத் தப்பிவிட்டா யே!'' என்றார். அதற்கு அக்கிளி, 'என் ஜோடிக் கிளி இறக்கவி ல்லை. கூண்டில் அடைபட்ட நான் தப்பிக்கும் வழியை, உங்க ளிடமே அது சொல்லி அனுப்பியிருக்கிறது' என்று கூறிவிட்டு, தன் ஜோடிக் கிளியைத் தேடி, உயிலங்குளம்  பறந்துவிட்டது. புத்தியுள்ள பிள்ளை பிழைத்துக்கொள்ளும். அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...