பின் தொடர்பவர்கள்

0130 கழுதை கற்பித்த ஞானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0130 கழுதை கற்பித்த ஞானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 ஜூன், 2015

0130 கழுதை கற்பித்த ஞானம்?

கழுதை கற்பித்த ஞானம்  பேசாலைதாஸ்

                         அன்பர்களே கழுதையை மட்டகரமான மிருகம் அல்லது அறிவு கெட்ட மிருகம் என்று நாம் கருதுகின் றோம். ஆனால் வேதாகமத்தில் கழுதையின் வகிபாகம் அருமைகாக சொல்லப்பட்டிருக்கின்றது. இயேசு பிறப்பின் போது, கருவுற்ற மாதக்கர் பினியான மரியாளை சுமந்து திரிந் தது, ஏரோது குழந்தையை கொல்ல தேடிய போது,  கழுதை அவரை சும ந்து கொண்டு எகிப்து வரை சென் றது. இயேசு பாஸ்கா பண்டிகைக் காக ஜெருசலேம் வந்த போது, ஓசா ன்னா என்ற வெற்றிப் பவனியில் கழுதை இடம் பிடிக்கின்றது. 

இதைவிட இன்னுமொரு சுவாரஸ்ய மான விடயம் உண்டு. கழுதை பேசிய தாகவும், கழுதை நற்கருணையை வணங்கிஅதாகவும், இப்படி னிறைய விடயங்கள். இதை விட இன்னுமொரு விடயம், கழுதையிடம் எப்படி ஞான த்தை கற்றுக்கொள்வது, அதை விளக்குவதே இந்தக்கதை!
 
ஒரு ஞானியைப் பார்த்து ஒருவர், "ஞானத்தில் சிறந்த ஞானம் எது?" என்று கேட்டார். "இன்பத்தில் மகி ழ்ச்சி அடையாமலும், துன்பத்தில் சொர்டை வயா மலும் இருப்பதுதான் ஞானம்" என்றார் ஞானி. வந்தவர், விளக்கமாக கூறுங்கள் என்று கேட்டார். அதற்கு ஞானி அருகில் மேய்ந்து கொண்டிருந்த வண்ணான் ஒருவனின் கழுதையை காட்டி இதை காலையிலும் மாலையி லும் பார்த் தால் உமக்கு புரியும் என்றார். ஞானி கூறிய படியே அவர் காலையும், மாலையும் கழுதையை கவ னித்தார். அவருக்கு ஒன்றும் புரியாமல் போகவே ஞானியிடம் கேட்டார். ஞானி விளக்கினார், இந்தக் கழுதைக்கு, "காலையில் தன் முதுகில் அழுக்கு மூட்டையை சுமந்து செல்கிறோமே என்ற வருத்தம் இல்லை, மாலையில் சுத்தம் செய்த துணிகளை சுமந்து செல்கிறோமே என்ற மகிழ்ச்சியும் இல்லை" இதை பார்த்து தான் நான் அத்தகைய ஞானம் பெற்றேன் என்றார். துன்பத்திலும், இன்பத்திலும் துவளாமல் இருப்பதே சிறந்த ஞானம் என்பதை உணர்ந்தார் அந்த நபர்.

ஆம் அன்பர்களே! இன்பத்தில் துன்பம், துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி, சொல்லுக்கு செய்கை பொன்னாகும், வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும், என்பதைப்போல, இன்பத்தையும் துன்பத்தையும் சமமமாக நாம் பாவித்தல் நன்மை அடையாம்  அன்புடன் பேசாலைதாஸ்




ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...