பின் தொடர்பவர்கள்

0398 எனக்கு 4 மனைவிகள் ! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0398 எனக்கு 4 மனைவிகள் ! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 1 பிப்ரவரி, 2017

0398 எனக்கு 4 மனைவிகள் !

எனக்கு நான்கு மனைவிகள் !

 
                                                                   அன்பர்களே! நம் ஒவ்வொரு வருக்கும் ஒரு மனைவி உண்டு, சிலவேளைகளில் இரகசிய காதலி சிலருக்கு இருக்கக்கூ டும். உண்மையில் நம் ஒவ்வொ ருவருக்கும் கடவுள் நான்கு மனைவிகளை கொடுத்திரு க்கின்றார்.  வேடிக்கையாக பேசுகின்றேன் என நினைக்கி ன்றீர்களா? உண்மைதான் அன்பர்களே! நமது நான்கா வது  மனைவி நமது தேகம்தான், என்னதான் ஆரோக்கியமாக உண்டு குடித்து உடம்பை பார்த்துக்கொண்டாலும், நாம் செத்த வுடன் நம்மை விட்டு அழிந்துவிடும். மூன்றாவது மனைவி, நமது சொத்தும் பணமும், நாம் செத்தவுடன் அடுத்தவனோடு ஓடிவி டும்! இரண்டாவது மனைவி நமது சொந்தங்களும், உறவுகளும் செத்தபின் சுடுகாடு வரை வரும் அதன் பின், ஓடிடுவார் கூட வரார், நாம் செல்லும் தூரம்! நமது முதல் மனைவி நமது ஆன்மா தான்! நம்மோடு கூட இருந்து நமது பவ புண்ணியங்களில் பங்கெடுத்து, மோட்சமோ? நரகமோ? நம்மோடு கூடவருவது நமது முதல் மனைவி நமது ஆன்மா தான்! இதனை ஒரு கதை வடிவமாக உங்களுக்கு தருகின்றேன்........
                                                                    தேவதாஸிற்கு நான்கு மனைவிகள் ஆனாலும் அவன் நான்காவது மணைவி மீது கொள்ளை ஆசை வைத்திருந்தான் காரணம் மினு மினுப்பான அவள் அழகு வதனம்! மூன்றாவது மனைவியையும் நேசித்தான் காரணம் அவள் படித்து பட்டதாரியாய், உயர்பதவியில் இருந்தபடியால் அவளை நேசித்தான். இரண்டாவது மனைவியையும் அன்பு செய்தான் அவளின் சொத்துகளுக்காக, ஆனல் தேவதாஸ் தனது முதல் மனைவியை அடியோடு வெறுத்தான். முதல் மனைவியோ அவனுக்காக, அவன் சுகத்துக்காக, இரவு பகலாக,  தவம் இருந்து, அழகு கெட்டு, தன் கணவனை உளமார அன்பு செய்தாள். காலங்கள் உருண்டன தேவதாஸ் உடல் நலிந்து சுகவீனமுற்று மரணப்படுக்கை யில் கிடந்தான்! இப்போது அவனுக்குள் ஒரு ஆசை! யாராவது ஒரு மனைவி என்னோடு கூட சாகமாட்டாளா? என்று தேவதாஸ் ஏங்கினான்! தனது ஆசையை தான் அதிகம் நேசித்த நான்காவது மனையிடம் சொன்னான் அவளோ உ ன்னோடு சாகமுடியாது எனக்கு வாழ ஆசை என்று ஓடிவிட்டாள். அப்படியே மூன்றாவதும், இரண்டாவதும் அவனை கைகழுவி அகன்று விட்டனர். அப்பொழுது தழுதழுத்த குரலில் முதல் மனைவி பேசினாள். கவலைப்படாதீங்க! நான் உங்க கூட சாக த்தயாராக இருக்கின்றேன் என்று அழுது கொண்டே கூறினாள். முதல் மனவியோ தவமும் நோன்பும் இருந்து இளைத்து களை த்து மரணத்தை நோக்கி நின்றாள். வாழ் நாள் முழுவதும் முதல் மனைவியின் முக்கியம் தெரியாமல் இருந்துவிட்டேனே என்று தேவாதாஸ் மனசுக்குள்ளே அழத்தொடங்கினான்.  அன்பர்களே ஆன்மா என்ற முதல் மனைவியின் எண்ணப்படி நாம் வாழ வேண்டும். சொத்தும் சுகமும், பட்டமும் பதவியும்  நம்மோடு பயணிப்பதில்லை!  என்றும் சிந்தித்ததை, சிந்தித்த படியே கதை, கதையாய் பேசும் உங்கள் அன்பு பேசாலைதாஸ்

பேரழகும் பெருஞ்செல்வமும்

பேரழகும்  பெருஞ்செல்வமும்   பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...