பின் தொடர்பவர்கள்

0389 மன்னிக்கும் இதயம்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0389 மன்னிக்கும் இதயம்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 26 ஜனவரி, 2017

0389 மன்னிக்கும் இதயம்!

மன்னிக்கும் இதயம்!

ஒருநாள் ஒரு மனிதர் ரின்சாய் என்கின்ற துறவியைக் காண வந்தார்.  வரும் வழி யில் அந்த மனிதை எரிச்சலூட்டும் வித த்தில் ஒரு நிகழ்வு நடந்தது. எனவே கோபத்துடனே அங்கு வந்தார் அவர். வந்த வேகத்தில் அறைக் கதலை வேக மாய்த் தள்ளி, தன்னுடைய காலணிக ளைக் கழற்றி சுவற்றில் எறிந்துவிட்டு துறவி ரின்சாய் அவர்கள் முன்வந்து மண்டியிட்டு வணக்கம் செலுத்தினார். அப்போது ரின்சாய் அவர்கள், நான் ஒரு போதும் உன்னைச் சீடனாக ஏற்றுக்கொ ள்ள முடியாது என்றார். இங்கு வரு ம்போது ஏன் நீ இந்தக் கதவைத்  தள்ளி விட்டு உன் காலணிகளை உதறி எறிந்தாய் என்று கேட்டார். முதலில் உன் காலணிகளிடமும், கதவிடமும் மன்னிப்புக் கேள். பின்பு இங்கு வா. நான் உன்னை அனுமதிக்கிறேன் என்றார் ரின்சாய். அந்த மனிதரு க்கு ஒரே குழப்பம். இவ்வளவு பெரிய துறவி பகுத்தறிவுக்குச் சிறி தும் தொடர்பு இல்லாத ஒரு செயலைச் செய்யக் கட்டாயப்படுத்து கிறாரே என்று நினைத்தார். பின்பு துறவியிடம், ஐயா, நான் எதற்கு என் காலணிகளிடமும், கதவிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும், முதலில் அவற்றுக்கு உயிர் இருக்கிறதா, அப்படி நான் கேட்டாலும் அவை புரிந்துகொள்ளத்தான் போகின்றனவா என்று எதிர் கேள்வி கேட்டார். அதற்கு ரின்சாய் அவர்கள் உண்மைதான். ஆனால் நீ உனது கோபத்தை அந்த உயிரற்ற பொருள்களிடம்தானே காண்பி த்தாய், அப்போது அவை உயிரற்றவை என உனக்குத் தெரியவி ல்லையா, அதனால் நீ கட்டாயம் மன்னிப்புக் கேட்டுத்தான் ஆக வேண்டும் என்றார். அந்த மனிதரும் தனது தவறை உணர்ந்தார்.  மன்னிப்பதற்கு உயிரான உடல் அவசியமில்லை மன்னிக்கும் இதயம் இருந்தாலே போதும், அன்புடன் பேசாலைதாஸ் பேர்கன் நோர்வே

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...