பின் தொடர்பவர்கள்

0381 தாய் ஒரு கோயில்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0381 தாய் ஒரு கோயில்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 22 ஜனவரி, 2017

0381 தாய் ஒரு கோயில்!

தாய் என்னும் ஒரு கோயில்!

                       
ஒரு சமயம், ஒரு பெரிய மகானிடம், பெண் ஒருவர் சென்று, ஐயா, நான் விலைமகளாக இருந்து தவறு செய்துவிட்டேன், என் பாவத்தி ற்குத் தண்டனை கொடுங்கள் என்று வேண்டினார். அந்த மகான் மிகுந்த கருணையோடு, இன்னும் நான்கு மாதங்கள் கழித்து வா என்று சொல்லி அனுப்பினார். அந்தப் பெண்ணும் நான்கு மாதங்கள் கழித்துச் சென்றார். இப்போது உன் நிலைமை என்ன? என்று கேட்டார் அவர். ஐயா, நான் தாய்மை அடைந்திருக்கிறேன் என்று அப்பெண் சொன்னதும், அப்படியா, நீ, குழந்தை பெற்ற பிறகு என்னை வந்து பார் என்றார் மகான். அந்தப் பெண்ணும் குழந்தை பெற்ற பிறகு சென்று பார்த்தார். ஒரு குழந்தை தன் தாயிடத்தில் இரண்டு ஆண்டு காலம் பால் குடிக்கக் கடமைப்பட்டது, எனவே, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு என்னை வந்து பார் என்று சொல்லி யனுப்பினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்தத் தாய்க்கு உரிய தண்டனையைச் சொன்னாராம் அந்த மகான். அப்பெண் தவறுக்குத் தண்டனைக்கு உரியவரே என்றாலும், அந்தப் பெண்ணி ன் குழந்தை எவ்வகையிலும் தண்டனைக்குரியது அல்ல, குழந்தை பாதிக்கப்படக் கூடாது என்பதில் அந்த மகான் கவனமாக இருந்தார். ஆம். ஓர் உயிருக்காக, இன்னோர் உயிர் துன்புறக் கூடாது. எல்லா உயிர்களுக்காவும் தானே யேசு பிரான் உயிர்ப்பலியாயானாரே! உயிர்களை மதிக்கவும், அன்புகூரவும் தெரிந்தவர்களே மனிதர்க ளவும் ஏன் கடவுளாகவும் கருதலாமல்லவா? உங்கள் சிந்தனை க்கதவை மீண்டும் தட்ட போய் வருகின்றேன்                                 அன்புடன் பேசலைதாஸ். 

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...