உங்கள் கண்களை ஈரமாக்கும் ஓர் கதை இது....
மனைவியின் காதல்....
♥வேலை முடிந்து வீட்டிற்கு போன போது சாரா சமையலறையில் இருந்தாள். அவசர அவசரமாக குளித்து உடைமாற்றி சாப்பாட்டு மேசையில் வந்தமர்ந்த போது சாப்பாடு பரிமாறத் தொடங்கினாள். அவளின் கைகளை பற்றியவாறு, "எனக்கு விவாகரத்து வேண்டும் "என்றேன்.
♥"ஏன்?" என்றாள் ஒற்றை வரியில்.
நிச்சயமாய் அவள் அதை சீரியஸாய் எடுத்துக் கொள்ளவில்லை என்பது அவளது நடத்தையில் புரிந்தது.
♥அதை ரசிக்கும் மன நிலையில் நான் இருக்கவில்லை.எப்படியாவது எனது நிலைப்பாட்டை சொல்லியே ஆக வேண்டுமென நினைத்தேன்.
♥"அலுவலகத்தில் என்னுடன் பணிபுரியும் ஜேனை இரண்டு வருடமாக காதலிக்கிறேன்.விவாகரத்து வேண்டும் என்றேன்"தீர்க்கமாய்.
எதுவும் பேசவில்லை அவள்.
♥திடீரென நட்டாற்றில் அவளோடு என் மகனையும் விடுவதாய் மனம் குத்திக் காட்டியது.குடியிருக்கும் வீடு,கார்,மற்றும் சொத்தின் 30% அவளுக்குரியது என எழுதப்பட்ட பத்திரத்தை அடுத்த நாளே அவளிடம் நீட்டினேன்.
எரிமலையாய் சிதறினாள்.பத்திரத்தை வெறி கொண்ட மட்டும் கிழித்தாள்.
பத்து வருடமாய் தன் வாழ்வை பகிர்ந்தவள் அந்நியமாய் தெரிந்தாள்.
♥சத்தமாய் அழுதாள்.ஆர்ப்பாட்டம் பண்ணினாள்.பலம் கொண்ட மட்டும் என் சட்டையைப் பற்றி உலுக்கினாள்.சலனமின்றி மீண்டும் சொன்னேன்,"விவாகரத்து வேண்டும்".
♥முழுவதுமாய் நொறுங்கிப் போயிருந்தாள்.விவாகரத்து எனும் வார்தையால் எதை எதிர்ப்பார்த்தேனோ அது நடந்தது.
♥அடுத்த நாளை ஜேனுடன் கழித்து விட்டு நள்ளிரவில் வீடு சென்ற போது மேசையிலிருந்து சாரா எதையோ எழுதிக் கொண்டிருந்தாள்.
♥விவாகரத்து ஒப்பந்தம் என்பது புரிந்தது.
என்னிடமிருந்து எதுவும் வேண்டாமென்று கூறியிருந்தாள்.
ஒரு மாதத்தில் மகனுக்கு பரீட்சை இருப்பதாகவும்,இது பற்றி எதுவும் அவனுக்கு புரியாதவாறு வீடு சுமூகமாக இருக்கட்டும் என்று கூறியிருந்தாள்.
முறிந்து போன ஒரு திருமணம் மகனை பாதிக்கக் கூடாதென எண்ணியிருக்கலாம்.
எப்படி திருமண இரவன்று வாசற் கதவிலிருந்து படுக்கையறை வரை அவளை தூக்கி வந்தேனோ அதே போல ஒவ்வொரு நாளும் தூக்கி வர வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தாள்.
வினோதமாய் இருந்தது.என்னுடனான கடைசி நாட்களை இன்பமாக கழிக்க நினைக்கிறாள் என ஏளனமாய் எண்ணிக் கொண்டேன்.
♥முதல் நாள் அவளை ஏந்திச் சென்ற போது இருவருமே சங்கடமாகவே உணர்ந்தோம்.மகன் விசித்திரமாய் பார்த்தான்.கடந்த ஒன்பது வருடமாக அவன் தன் தாய்,தந்தையை இப்படி அன்னியோன்யமாய் பார்த்திருக்கவில்லை என்பது உறுத்தலாய் இருந்தது.
♥"அப்பா அம்மாவை தூக்கிச் செல்கிறார்" என குதூகலித்தான்.
நமது விவாகரத்து பற்றி அவனுக்கு தெரிய வேண்டாம் என்றாள் படுக்கையில் இறக்கிவிட்ட போது எங்கோ பார்த்தபடி.
திருமணத்தன்றிருந்த உணர்வுகள் மங்கிப் போயிருப்பது தெரிந்தது.
♥அடுத்த நாள் அவளை தூக்கும் போது இன்னும் இலகுவாக இருந்தது.உரிமையுடன் மார்பில் துவண்டிருந்தாள்.
அவளது கூந்தலின் மணம் ஏதேதோ செய்தது.
நீண்ட நாட்களாக அவளை நான் ரசிக்கவில்லை என்பதை உணர்ந்தேன்.
முகத்தில் சில சுருக்கங்கள் இருந்தது.
ஆங்காங்கே சில நரைமுடிகள் எட்டிப் பார்த்தன.
கூந்தலின் அடர்த்தி வெகுவாக குறைந்திருந்தது.
அன்று கொடியிடையாளாய் இருந்தவள் சற்று பருத்திருந்தாள்.
திருமண வாழ்வு அவள் அழகை,கவர்ச்சியை கொள்ளையிட்டிருந்தது.
என்னுடன் வாழ்ந்ததில் எனக்காக தன் இளமையை தொலைத்து விட்டிருந்தது அப்பட்டமாய் தெரிந்தது.
♥நான்காம்,ஐந்தாம் நாட்களில் எனக்காய் தன் வாழ்வை அர்ப்பணித்தவள் மீண்டும் அன்னியோன்யமானதாய் தோன்றியது.
நாட்கள் செல்லச் செல்ல விரிசல்கள் காணாமல் போயிருந்தன.அவள் சுமையாய் தெரியவில்லை.எமது செயல் மகனுக்கும் பழகிவிட்டிருந்தது.
♥ஒரு நாள் காலையில் திருமணமான புதிதில் பரிசளித்த ஒரு ஆடையை அணிந்தபடி கண்ணாடி முன் நின்ற படி தலை வாரிக் கொண்டிருந்தாள்.நன்றாக மெலிந்து போயிருப்பது தெரிந்தது.
♥இந்த பெண் எத்தனை வடுக்களை மௌனமாய் ஏற்றுக் கொள்கிறாள் என தோன்றியது.
♥மெதுவாக அவளது தோள்களை பற்றினேன்.திரும்பி என் கண்களை ஊடுறுவினாள்.என் மனம் மாறிவிடுமோ என்றஞ்சி பார்வையை தவிர்த்தேன்.
♥"இன்னு அம்மாவை தூக்கவில்லையா?"என்றான் மகன்.அவனைப் பொருத்தவரை அது வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டிருந்தது.
♥தூக்கிய போது கைகளை கழுத்துகளை வளைத்து கோர்த்துக் கொண்டாள்.பிடிமானத்தை நான் இறுக்கிய போது சொகுசாக நெஞ்சோடு அணைந்தாள்.
கல்யாண நாளன்று காதல் ததும்ப நடந்தது போலவே ஒவ்வொரு நடையாக எடுத்து வைத்தேன்.
நாட்கள் வேகமாக உருண்டோடியது.
♥கடைசி நாளில் சாரா என்ற பெண் மீதினில் என் காதல் என்னை ஒரு அடி கூட நகர்த்த விடவில்லை.அவசரமாய் அவளை கையிலிருந்து இறக்கிவிடக் கூடாதென நினைத்தேன்.
♥திருமண இரவில் அவளை ஏந்தியபடி"மரணம் வரை உன்னை பிரிய மாட்டேன்" என்ற என் வாக்குறுதி இனிமையாய் நிழலாடியது.
♥மென்மை மாறாமல் சாராவை படுக்கையில் இறக்கிவிட்டேன்.ஜேனிடம் விரைந்து சென்று,"சாராவை கைவிடும் எண்ணம் எனக்கில்லை.என் வாழ்வும் என் மரணமும் அவளுடன் தான்" என்று முடிவாய் சொன்னேன்.ஜேனுடைய பதிலிற்காய் காத்திருக்க தோன்றவில்லை.
♥பூக்கடையில் சாரா மிகவும் விரும்பும் வெள்ளை ரோஜாக்கள் நிரம்பிய ஒரு பொக்கேயை வாங்கி."You are my life "என்று ஒரு அட்டையில் எழுதிக் கொண்டு சாராவை நோக்கி விரைந்தேன்.
♥அங்கே...
அதே கட்டிலில்,
என் சாரா பிணமாக,சடலமாக,உயிரற்றிருந்தாள்..
♥கடந்த சில மாதங்களாக அவள் புற்றுநோயுடன் போராடிக் கொண்டிருந்ததை அவளது நண்பி அப்போதுதான் சொன்னாள்.
அதை கூட அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு நான் அந்நியனாக வெட்கித்து நின்றேன்.
♥அத்தனை போராட்டத்திலும் என்னை ஒரு நல்ல கணவனாக,அன்பான தந்தையாக என் மகனிடம் நிரூபிக்க ஆசைப்பட்டிருக்கிறாள்.
மரணத்தை தவிற வேறெதுவும் நம்மை பிரிக்காது என்பதை உணர்த்த முயற்சித்திருக்கிறாள்.
♥மகன் என் கால்களை கட்டிக் கொண்டு அழுதான்.
"சாரா ,இனி என் வாழ்வு நம் பிள்ளைக்கானது" என மௌனமாய் அவள் மனதிடம் சொல்லிக்கொண்டான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக