பின் தொடர்பவர்கள்

0403 பாவம் மதுமிதா! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0403 பாவம் மதுமிதா! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

0403 பாவம் மதுமிதா!

பாவம் மதுமிதா
ஹட்டன் சிறீபாத பஸ்தரிப்பில், பஸ்ஸி ற்காக காத்திருந்த மோகனுக்கு, கண்டி வழியாக கொழும்பு நோக்கி வந்த பஸ்ஸைக்கண்டதும் சற்று மனம் இளை ப்பாறிக்கொண்டது. ஹட்டன் பஸ் ஸ்டா ன்ட் போய் பின்னே அங்கிருந்து கண்டி, அதன் பின் கொழும்பு பஸ், இப்படி பஸ் மாறி, பஸ் எடுக்கவேண்டிய அவசியமே இல்லை. நேராக கொழும்புக்கு போய்வி டலாம். பஸ் தரிப்பிடத்தில் நின்றது தான் தாமதம், ஒரே தாவலில், பஸ்ஸுக்குள் பாய்ந்து கொண்டான் மோகன். போதிய இருக்கைகள் காலியாகவே இருந்தன. ஜன்னல் ஓரமாய் ஒரு இருக்கையில் அம ர்ந்து கொண்டான் மோகன். 
                                                               பஸ் கொஞ்ச ம் பழையதாய் இருக்கவேண்டும், புகை யை தாராளமாய் கக்கி க்கொண்டு, மலைப்பாதை வழியாக தாவி ஓடியது. கண்டி மலைச்சாரல் வழியாக தவழ்ந்துவந்த மெல்லிய இளம் காற்று, மோகனின் கடந்த கால நினைவுகளை அசைபோட உதவியது. அவனின் நினைவுச்சுழியிலே மதுமிதா வின் நினைவுகள் அக ப்பட்டுக்கொண்டன. மதுமிதா ஓர் அழ குச்சுரங்கம், யானையின் தந்தந்தை கடைந்தெடுத்தால் போல, அங்கமெல்லாம் மினு மினுப்பு. நிலாவெனச்சிரிக்கும் முகம் அவளுக்கு! அவளின் அழகின் மேல் அவளுக் கென்றெ ஒரு அக ங்காரம், ஆண்கள் எல்லாம் அவளின் அழகிலே நீண்ட ஆரா தனை செய்யவே ண்டும் என்ற இறுமாப்பு. கனிவான குரலில் இனிமை கலக்க,  மதுரமாய் பாடும் ஒரு பாடகி,  மருத்துவபீட இறுதி ஒன்று கூட லில் பாடுவதற்காக வரவழைக்கப்பட மதுமிதா மீது மோகனுக்கு காதல் கசிந்து கனிவானது. மோகன் அழகும் வசீகரம் கொண்ட ஆண் அழகன் என்றாலும், நடுத்தர குடும்பத்தை சார்ந்தவன்.  மதுமிதா ஒரு உல்லாசப்பேர்வழி, சுற்றுலா, பொழுதுபோக்கு, ஆடம்பர களியாட்டம் இவைகளில் நாட்டம் கொண்டவள் அதற்கு ஏற்ற மாதிரி அவளின் இசைத்திறனும்  அவளுக்கு உதவி செய்தது..  திருமணம், குடும்பம் இவைகளில் அவளுக்கு நாட்டம் கிடையாது. இது எல்லாம் மோகனுக்கு தெரிந்தும் கூட, நாள டைவில் தன் போக்கிற்கு அவளை மாற்றி விடலாம், அவனின் அன்பு அவளை மாற்றும் என்று தீர்க்கமாக நம்பி அவளை உயிருக்கு உயிராக காதலித்தான். மதுமிதாவின் நடவடி க்கை களில் மாற்றம் ஏதும் நிகழ்ந்ததாக இல்லை, அவளுக்கு நிறைய பணக்கார வாலிபர்களின் நட்பு கிடைத்தது அதன் விளவு மோகனின் காதலை மதுமிதா கொஞ்சம் கொஞ்சமாக நிராகரித்து இறுதியில் மோகனை அப்படியே கழற்றிவிட்டாள்!
                                                      மதுமிதாவின் காதல் தோல்விக்குப்பின், பெண்கள் மீதான மோகனின் நாட்டம் அறவே  அவனை விட்டு ரெம்ப தூரம் விலகி இருந்தது, ஒருவித விரக்தியில் அவன் நாட்களை நகர்த்திக்கொண்டி ருந்த ஒரு நாள்,  வவுனியா பஸ் ஸ்டான்டிலே இரவு பத்து மணி இருக்கும், மன்னார் பஸ்ஸிற்காக மோகன் காத்துக்கொண்டிருந்தான், அப்பொழுது யாழ்ப்பாணம் இருந்து வந்த பஸ்சில் இருந்து வாசுகி இறங்கினாள். அவளும் மன்னாருக்கு போகும் கடைசி பஸ்சை பிடிக்கும் எண்ணத்தில் தான் வவுனியாவு க்கு வந்தாள், பஸ்ஸை விட்டு இறங்கியதும், மன்னார் தரிப்பிடத்தில் நின்ற மோகனிடம், மன்னாருக்கு போகவேண்டிய கடைசி பஸ் போய்விட்டதா  என்று படபடக்க கேட்டாள் வாசுகி. இன்னும் இல்லை நானும் அதற்குத்தான் காத்துக்கொண்டு நிற்கின்றேன். கொழும்பில் இருந்து வரும் பஸ்தான் மன்னாருக்கு போக வேன்டும்,  ஏனோ கொழும்பில் இருந்து வரும் பஸ் இன்னமும் வரவில்லை என்றான் மோகன். அப்படா இப்போது வாசுகிக்கு மனதில் ஒரு நிம்மதி!
                                                       மாசி மாதம் பின்பனிக்கால இரவானதால் பனி கலந்த காற்று குளிரை அங்கே நிரப்பிக்கொண்டிருந்தது. வாசுகி சேலைத்தைப்பால் தன் உடலை  போர்த்திக்கொண்டு மோகனை பார்க்கின்றாள் எங்கேயோ பார்த்த முகம் போல, அல்லது அவளுக்கு நன்கு அறிமுகமான ஒரு நபரின் நகலாக மோகனின் முகம் தென்பட்டது. நீண்ட நேர மெளனத்திற்கு பின்னர் எதோ ஒரு நினைவுக்கு வந்ததைப்போல, குரலை கொஞ்சம் தாழ்த்திக்கொண்டு, நீங்க பேசாலை தேவதாஸின் உறவுக்காரரோ என்று மெல்ல இழுத்தாள் வாசுகி. ஆமாம் அவர் எனக்கு மைச்சான் முறை என்று சொன்ன மோகன், உங்களுக்கு அவரை எப்படி தெ,,,ரி,,யும் என்று தயங்கிய படியே கேட்டான். தேவதாஸும் நானும் யாழ் பல்லகைக்கழகத்தில் படித்தவர்கள் என்று தன்னை அறிமுகம் செய்தாள் வாசுகி. இருவருக்கிடை யில் உரையாடல் வளர்ந்தது. அந்த முதல் சந்திப்பு, நட்பாகி பின்னர் காதலாக மலர்ந்து கல்யாணம் வரை சென்றது. வாசுகி மோகன் இருவரும் கருத்தொருமித்த தம்பதிகளாய் வாழ்வை இனிதே வாழ்ந்தனர்.
                                                                                                நாளடைவில் இருவரும் தமது வதிவிடத்தை கொழும்புக்கு மாற்றிக்கொண்டனர். ஒரு நாள் மாலை ப்பொழுதில் கொழும்பு காலி முகத்திடலில்,  வாசு கியும் மோகனும் பொழுதைக்கழித்துக்கொண்டிரு க்கையில், , மதுமிதா தன் நண்பர்களுடன் உல்லாசமாக அங்கே வந்தாள். மோகனைக்கண்டதும், ஹலோ மோகன் எப்படி இருக்கின்றீ ர்கள்? என்று கேட்டவண்ணம் மோகனிடம் வந்தாள். மோகன் அருகில் வ்ந்ததும் சட்டென்று எழுந்து¨" வாசுகி நேரமாகின்றது வீட்டுக்கு கிழம்புவோமென்று" சொல்லிக்கொண்டு வாசுகி யோடு அந்த இடத்தை விட்டு அகன்றான். வாசுகிக்கு ஒன்றுமே புரியவில்லை. " மோகன் உங்களு க்கு என்ன நடந்தது? ஏன் அவளைக்கண்டதும் அந்த இடத்தைவிட்டு விலகினீர்கள் என்று கேட்டாள். மோகன் தன் வாழ்நாளில் நடந்ததை ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் வாசுகியிடம் ஒப்புவித்தான். ஓ அப்படியா! பாவம் மதுமிதா உங்கள் அருமை தெரியாமல், உங்களை அவள் இழந்துவிட்டாள். பாவம் அவள்! இப்போது அவளுக்கு எதுவுமே புரியாது. வயதாகி, அழகு கெட்டபின் அவளை யார் நாடுவார்? நீங்கள் அவளை உளமார நேசித்தது உண்மை என்றால் அவளு க்கு நீங்கள் ஒரு நல்லவழியை காட்டவேண்டும் என்று வாசுகி சொல்ல, சொல்ல வாசுகியை கண் இமைக்காமல் பார்த்து க்கொண்டிருந்த மோகன், என் வாசுகியின் இதயம் இமயம் வரை உயர்ந்தது என்று மனுக்குள் சொல்லிக்கொண்டு வாசுகியை இறுகத்தழுவி முத்தமழை பொழிந்தான் மோகன்!  யாவும் கற்பனையே! அன்புடன் பேசாலைதாஸ்

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...