பின் தொடர்பவர்கள்

0309 புலி பூனையாகிறது! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0309 புலி பூனையாகிறது! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 19 ஜூன், 2019

0309புலி பூனையாகிறது!

ஒரு புலி பூனையாகிறது!  பேசாலைதாஸ்


                                          கணவன் மனைவி உறவில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் இடம்பெறுவது சகஜம், அதிகமாக குடிபோதை, தாகாத உறவு கள் இப்படியான சில சிக்கல்களினால் கண வன் மனைவி உறவில்தடுமாற்றங்கள்  ஏற்ப டுவது யதார்த்தம், இந்த வேண்டாத சச்சரவை கணவன் மனைவி இருவரில் ஒருவர் அல்லது இருவருமே பத்திசாலித்தனத்துடன், சகிப்பு தன்மையுடன் நடந்து கொண்டால் இதற்கான தீர்வு எளிதில் கிடைக்கும்,  அண்மையில் முக நூலில் நான் வாசித்த துணுக்கு ஒன்று இதற்கு நல்லதோர் உதாரணமாக அமைகின்றது,,                                                                               சாமி, என் கணவர் தினமும் குடித்துவிட்டு வந்து என்னை அடிக்கிறார். என்னை சந்தேகப்படுகிறார். வாழ்க்கையே நரகமாகிப் போச்சு. தற்கொலை செய்து கொள்ளக்கூட தோணுது.." ஒன்று ஞானி யிடம் அழாக்குறையாக புலம்பி முறையிட்டாள் அவள்."மகளே, நான் ஒரு உபாயம் சொல்கிறேன். நீ சென்று ஒரு #புலியின்_மீசை முடி ஒன்றைக் கொண்டு வா. நான் அதை மந்திரித்துத் தருகிறேன். அவன் திருந்தி விடுவான்.."அவளும் ஒரு புலியின் குகையைத் தேடிக் கண்டுபிடித்து, குகையருகில் மாமிசம் வைத்துவிட்டு மறைந்திருந்து பார்த்தாள். புலியும் மாமிசத்தை தின்றது. தினமும் தொடர்ந்து அவ்வாறு செய்தாள். ஒருநாள் அவள் மாமிசத்தை வைக்குப்போது, புலி அவளை நன்றியுடன் நோக்கியது. ஒரு முறை, அவள் மாமிசத்தை வைக்கும்போது, புலி அவளருகில் வந்து படுத்துக் கொண்டது.அந்தப் பெண், அதனிடம் அனுமதி பெற்று ஒரு மீசை முடியை பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் ஞானியிடம் சென்றாள்."மகளே..! அந்த புலியிடம் காட்டிய_பரிவில் நூற்றில் ஒரு பங்கு உன்_கணவனிடம் காட்டு. அவன் பூனையாக உன் கால்களை சுற்றிவருவான்..!" என்றார்.  அன்புடன் பேசாலைதாஸ்

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...