பின் தொடர்பவர்கள்

0129 எது என்னுடையது? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0129 எது என்னுடையது? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 ஜூன், 2015

0129 எது என்னுடையது?

எது என்னுடையது?

அன்பர்களே சைவ சிந்தந்தத்தில் ஆணவம், என்ற மாயை விரட்டுவதே கடவுளை காணும் முதற்படி என்று விளக்கம் சொல்வார்கள். யார் யாரிடம் இந்த ஆணவம் என்கின்ற, நான் எனது என்ற எண்ணம் விட்டொழிகின்றதோ, அவர்கள் தக்கதொரு தலைவன் என்பதற்கான முதற்படியாக அமைகின்றது.  இதை விளக்கும் அழகானதொரு கதை இதோ! துறவி ஒருவரிடம் பாடம் கற்க நான்கு சீடர்கள் வந்தனர். எல்லோரிடமும் அவர் "உங்கள் வீட்டி லிருந்து ஒரே ஒரு செம்பு மட்டும் கொண்டு வாரு ங்கள். மற்ற உபயோகங்களுக்கு ஆசிரமப்  பொருட்கலையே உபயோகித்து கொள்ளலாம்" என்றார். சீடர்கள், சில சில ஆண்டுகள் பயிற்சி பெற்றார்கள். துறவிக்கு முதுமை நெருங்கியதும், தனக்கு பின் ஆசிரம பொறுப்பை ஒப்படைக்க, சீடர்கள் நால்வரில் தகுதியானவர் யார் என பரி சோதிக்க விரும்பினார்.
                                         ஒருநாள் அவர்களை அழைத்து "உங்களது வீட்டிலிருந்து கொண்டுவந்த உங்கள் செம்பை எடுத்து வாருங்கள்" எனக் கட்டளையிட் டார். நால்வரில் மூவர் மட்டும் சென்று தங்கள் அறையில் இருந்த செம்பை எடுத்து வந்துகாட்டினர்.
                                       நான்காவது சீடன் சொன்னான்; " குருவே! நான் தங்களிடம் பாடம் கேட்க வந்த சில நாட்களிலேயே "நான்", "எனது" என்ற எண்ணம் போய் விட்டதே! ஆகவே என் வீடு என்று எதை சொல்வது? எங்கிருந்து எதை எப்படி எடு த்து வருவது ?" என்றான். குரு அவனிடமே ஆசிரம பொறு ப்பை ஒப்படைத்தார்.

பேரழகும் பெருஞ்செல்வமும்

பேரழகும்  பெருஞ்செல்வமும்   பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...