வெற்றியின் இரகசியம்
பிரபல தொழிலதிபரைப் பார்த்து உங்களது வெற்றியின் இரகசியம் என்ன என்று சொல்ல முடியுமா? என்று கேட்டார் ஓர் இளைஞர். அதற்கு அந்தத் தொழிலதிபர், இரகசியம் என்று எதுவுமில்லை, வாய்ப்புக் கிடை க்குமா என்று எதிர்பார்த்து கதவைத் தட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்று பதில் சொன்னார். இளைஞர் மீண்டும் கேட்டார் - வாய்ப்பு எப்போது கிடைக்கும்? கதவு எப்போது திறக்கும் என்று எப்படி கண்டுபிடிப்பது? என்று. அப்போது தொழிலதிபர் சொன்னார் - கண்டுபிடிக்க வழியில்லை; திறக்கும் வரையில் தட்டி க்கொண்டு இருப்பதுதான் வழி” என்று. அன்பர்களே, பெரியவர்கள் சொல்கிறார்கள் - நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால் உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள். அப்போது உங்கள் கண்கள் உங்கள்முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்து விடும். ஆனால் அதை அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளு ங்கள் என்று. ஊக்கத்தை என்றுமே கைவிடக் கூடாது. அன்புடன் பேசாலைதாஸ் பேர்கன் நோர்வே