பின் தொடர்பவர்கள்

0469 ஒரு பாக்கெட் பிஸ்கடின் கதை! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0469 ஒரு பாக்கெட் பிஸ்கடின் கதை! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 20 டிசம்பர், 2017

0469 ஒரு பாக்கெட் பிஸ்கடின் கதை!

ஒரு பாக்கெட் பிஸ்கடின் கதை!

அன்பர்களே ஆங்கிலத்தில் ஒரு பலமொழி உண்டு Do not judge the book by its cover அட்டைப்படத்தை வைத்து ஒரு புத்தகத்தை தீர்மா னிக்கக்கூடாது என்பதே அது. இது புத்தகத்துக்கு மட்டுமல்ல மனித ர்களுக்கும் மிக சரியாக பொரு ந்தும். சில மனிதர்களை பார்த்தா ல் அவலட்சணமாக, அழகற்றவர்க ளாக தோற்றமளிப்பார்கள் ஆனால் அவர்களுடன் பழகும் போது, அவர்களின் இனிமை யான, இதய அன்பைக்கண்டு வியந்து போய் நம்மை அறியா மலே அவர்கள்பால் ஈடுபாடு கொள்கின்றோம். சிலர் பளபள என்று மிக அழகாக, மினுமினுப்பாக, தம்மை அலங்கரித்த வண்ணம் இருப்பார்கள். அவர்களுடன் பழகிப்பார்த்தால் ஏண்டா இப்படிப்பட்டவர்களோடு பழகினோம் என்று நம்மை நாமே நொந்து கொள்வோம். அழகுக்கு அடிமைப்பட்டு வாழ்வை சீரழித்தவர்கள் பலர். வாழை மரத்தில் ஊஞ்சல் கட்ட வசதி இருக்குமா? தோலைப்பார்த்து மாடு வாங்கினால் அது தொழிலுக்கு உதவுமா? புலுவுக்கு ஆசைப்பட்டு துடிக்கின்ற மீனாக மனிதரில் எத்தனைபேர்? அன்பர்களே இந்த கதை வாசியுங்கள் உங்களுக்கே புரியும்!

                                                        ஒரு வயதான பெண்மணி விமான நிலையத்தில் விமானத்துக்காக காத்து கொண்டு இருந்தார். விமானம் வர தாமதமாகும் என்ற அறிவிப்பைக் கேட்டவுடன் கடைக்குச் சென்று படிக்க புத்தகமும் சாப்பிட ஒரு பாக்கெட் பிஸ்கட்டும் வாங்கி வந்து, ஒரு நாற்காலியில் அமர்ந்து தான் வாங்கி வந்த புத்தகத்தைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தார். அவருக்கு ஒரு நாற்காலி தள்ளி ஒரு வாட்டசாட்டமான நபர் உட்கார்ந்து இருந்தார். சிறிது நேரத்தில் அந்த நபர் பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து ஒரு பிஸ்கெட் சாப்பிட்டுவிட்டு காலி யாக இருந்த நாற்காலியின் மீது வைத்தார். அந்தப் பெண்ம ணி அவரைப் பார்த்து முறைத்து விட்டு ஒரு பிஸ்கட் எடுத்துச் சாப்பிட்டார். அந்த நபர் மறுபடியும் ஒரு பிஸ்கெட் எடுத்துச் சாப்பிட்டார். அந்தப் பெண்மணிக்கு கோபம் வந்து விட்டது. இருந்தாலும் அந்த நபரின் உருவத்தைப் பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல், இவரும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார். அந்த முரட்டு மனிதர் மறுபடியும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார், ‘ச்சே பிஸ்கட் திருடி தின்கிறானே இவனுக்குக் கொஞ்சம்கூட வெட்கம் இல்லையா’ என்று நினைத்து கொண்டே அந்தப் பெண்மணி தானும் ஒரு பிஸ்கட் எடுத்துச் சாப்பிட்டார்.

                                                இப்படியே இருவரும் மாறி மாறி பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். கடைசியாக ஒரே ஒரு பிஸ்கட் இருந்தது. இருவரும் அந்தப் பிஸ்கட்டை பார்த்தனர், சிறிது நேரம் அமைதியாக இருந்தனர். அந்த முரட்டு மனிதர் அந்தப் பிஸ்கட்டை இரண்டாகப் பிட்டு பாதியை அவர் சாப்பி ட்டுவிட்டு மீதியை அந்த நாற்காலியில் வைத்தார். அந்தப் பெண்மணி மீதி பாதி பிஸ்கட்டை சாப்பிட்டுவிட்டு விமானம் ஏறக் கிளம்பி விட்டார்.

                                                             விமானத்தில் ஏறி அமர்ந்தவுடன், ‘என்ன மோசமான மனிதர், பிஸ்கெட் வேண்டும் என்றால் கேட்டு வாங்கி சாப்பிட வேண்டியது தானே. இப்படியா திருடித் தின்பது’ என்று சொல்லிக் கொண்டே தண்ணீர் குடிப்பதற்கு பையில் கையை விட்டார். அவருக்கு ஒரே ஆச்சரியம். கடை யில் வாங்கிய பிஸ்கட் பாக்கெட் அவர் பையில் இருந்தது. அப்படின்னா நான் இவ்வளவு நேரம் அங்குச் சாப்பிட்ட பிஸ்கட் அந்த முரட்டு மனிதருடையதா? நான்தான் பிஸ்கெட் திருடிச் சாப்பிட்டேனா? என்று சொல்லிக்கொண்டே தன் செயலுக்காக வருந்தினார். அன்பர்களே! ஒருவருடைய உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது என்பதே உண்மை..
அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்


துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...