பின் தொடர்பவர்கள்

0212 அன்புள்ள அப்பாவுக்கு! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0212 அன்புள்ள அப்பாவுக்கு! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 13 ஜூலை, 2015

0212 அன்புள்ள அப்பாவுக்கு!


அன்புள்ள அப்பாவுக்கு!

                                 
  ஓரு தந்தை தனது இளம்வயது மகளின் அறையை கடந்து செ ல்லும்போது அது சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இரு ந்ததைக் கண்டு உள்ளே சென்றார் எல் லாப் பொருட்களும் அழகாக அடுக்க ப்பட்டிருந்தது ஆச்சரியமாக இரு ந்தது. அப்போதுதான் தலைய ணையின் மேல் ஒரு கடிதம் இருப்பதைப் பார்த்தார் அதை எடுத்துப் பார்த்தார். அதன்மேல் ”அப்பாவுக்கு” என்று எழுதியிரு ந்தது. பதறிய அவர் உடனே நடுங் கும் கரங்களுடன் உள்ளேயிருந்த கடிதத்தைப் படித் தார்.அதில் இவ்வாறு எழுதியிருந்தது:

                                                       அன்புள்ள அப்பா, மிகுந்த வருத்தத்துடன் இந்தக்கடிதத்தை எழுதுகிறேன் என் னை மன்னித்து விடுங்கள். என் காதலன் டிமோத்தி யுடன் நான் வீட்டை விட்டுப்போகிறேன். உங்க ளுட னும் அம்மாவுடனும் சண்டைபோட்டு ஒரு தர்மசங் கடமான சூழ்நிலையை ஏற்படுத்த விரும்பவில்லைஅதனால் சொல்லாமல் போகிறேன்

.                                                      டிமோத்தியின் அன்பு என்னை அவனுக்கு அடிமையாக்கிவிட்டது நீங்கள் டிமோத்தி யைப் பார்த்தால் உங்களு க்குப்புரியும் உடம்பில் பல இடங்களில் பச்சை குத்தியிருந்தாலும், அவன் நல் லவன் அதற்கும் மேலே நான் இப்போது கர்ப்பமாக இரு க்கிறேன் அதை கலைக்க டிமோத்தி விரும்பமில்லை. டிமோத்தி க்கும் எனக்கும் நிறைய வயது வித்தியாசம் இருந்தாலும் (இப்போதெ ல்லாம் 42 ஒரு வயதல்ல), அவனிடம் பணமில்லாமல் இருந் தாலும் எங்கள் உறவு உறுதியானது. 

                                                   டிமோத்திக்கு இன்னும் பல காதலிகள் இரு ந்தாலும் எனக்கென்று தனது வாழ்க் கையில் ஒரு தனி இடம் கொடு த்திருக்கிறான். என் மூலம் நிறைய பிள்ளைகளைப்  பெற்றுக்கொ ள்ள ஆசைப்படுகிறான் டிமோத்திக்கு நதியருகே ஒரு அழகிய குடி சையிருக்கிறது. அங்கு நாங்கள் தங்கியி ருப்போம் அவன் காட்டில் கஞ்சா பயிர் செய்வான்
அதை நாங்கள் எங்கள் நண்பர்களுக்கு விற்று வாழ் க்கை நடத்து வோம் கஞ்சாவை நானும் புகைத்தேன். ரொம்ப சுகமாயிருக்கிறது மருத்துவர்கள் சீக்கிரம் எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டு மென்று வேண்டிக்கொள்ளுங்கள் ஏனென்றால் அப்போது தான் டிமோத்தி எய்ட்சிலிருந்து விரைவில் குணம டைவான் அப்பா நீங்களும் அம்மாவும் என்னைப் பற்றிக்கவலைப் படாதீர்கள் எனக்கு என்னைப் பார்த் துக் கொள்ள தெரியும். எனக்கு பதினைந்து வயதா கிறது. என்றாவது ஒரு நாள் உங்களையெல்லாம் உங்கள் பேரக்குழந்தைகளுடன் வந்து பார்ப்பேன்.
உங்கள் அன்பு மகள், லிண்டா..!

                                             அவருக்கு உலகமே சுற்றுவது போலிருந்தது..கடிதத்தின் கீழே “பின்பக்கம் பார்க்க” என்று எழுதியிருந்தது. துடிக்கும் இதயத்துடன் கடித த்தை திருப்பி பார்த்தார் அங்கு இவ்வாறு எழுதியிரு ந்தது: பின்குறிப்பு; அப்பா, நான் முன்பக்கம் எழுதி யது எதுவும் உண்மையில்லை. நம் வாழ்க்கையில் எவ்வளவோ மோசமான விஷயங்களெல்லாம் நட க்க வாய்ப்பிருக்கிறது.  இதையெல்லாம் பார்க்கும் போது நான் பத்தாம் வகுப்பு கணக்குப் பாடத்தில் தேர்ச்சி பெறாதது ஒன்றும் பெரிய விஷயமே கிடை யாது. எனது தேர்வு அட்டை எனது மேஜைமேல் 
இருக்கிறது. எடுத்து கையெழுத்து போடுங்கள். நான் பக்கத்து வீட்டில்தான் இருக்கிறேன் உங்கள் கோபம் தணிந்ததும் கூப்பிடுங்கள்... அன்புடன் பேசாலைதாஸ் பேர்கன் நோர்வே
                                     

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்  ஆசைகாட்டி மக்களை தூண்டி தம் காரியங்களை சாதிக்கும் பல மக்களை நாம் நிஜவாழ்வில் சந்தித்து இருக்கின்றோம்,...