பின் தொடர்பவர்கள்

0355 சமாதான பொய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0355 சமாதான பொய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 14 மார்ச், 2016

0355 சமாதானத்தை ஏற்படுத்தும் பொய்

 சமாதானத்தை ஏற்படுத்தும் பொய்
            அரசர் ஒருவரிடம், குற்றவாளி ஒருவரை, சிலர் கொண்டுவந்து நிறு த்தினர். அரசே, இவன் வேற்று நாட்டைச் சேர்ந்தவன், நமக்குப் புரி யாத மொழி பேசுகிறவன் என்று சொல்லி, அக்குற்றவாளி செய்த குற்றத்தை அரசரிடம் விவரித்தனர். அதைக் கேட்ட அரசர், குற்றவாளி க்குத் தூக்குத்தண்டனை விதித்தார். உடனே, அக்குற்றவாளி தனது மொழியில் அரசரைத் திட்டினார். அரசருக்கு ஒன்றும் புரியவில்லை. அமைச்சரை அருகில் அழைத்து, இவன் என்ன சொல்கிறான் என்று கேட்டார் அரசர். ஒரு கணம் சிந்தித்த அமைச்சர், அரசே, கோபத்தை அட க்கி, பிறரை மன்னிப்பதே சொர்க்கம் என்கிறான் என்று சொன்னார். சற்று சிந்தித்த அரசரின் மனம் மாறியது. பின்னர், அங்கிருந்தவ ர்களிடம், இக்குற்றவாளிக்கு நான் கொடுத்த தண்டனையைத் தள்ளுபடி செய்கிறேன், இவனை மன்னித்து விடுகிறேன் என்றார். அருகில் நின்றுகொண்டிருந்த மற்றோர் அமைச்சருக்கு இதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. மெல்ல அரசர் காதருகில் சென்று, அந்த அமைச்சர் சொன்னது பொய். இப்போது நான் உங்களிடம் சொல்வதுதான் உண்மை. இந்த அந்நியன் உங்களைத் தனது மொழியில் கோபமாகத் திட்டினான் என்றார். புன்னகையோடு இந்த அமைச்சரைப் பார்த்த அரசர், அமைச்சரே, நீங்கள் கூறிய உண்மையைவிட, அந்த அமைச்சர் கூறிய பொய் எனக்கு மகிழ்வைத் தருகிறது என்றார். உண்மையைச் சொன்ன அமைச்சர் உறைந்துபோய் நின்றார். மீண்டும் அரசர் சொன்னார் – சமாதானத்தை ஏற்படுத்தும் பொய், சண்டைகளை ஏற்படுத்தும் உண்மையைவிட மேலானது என்று.   அன்புடன் பேசாலைதாஸ்

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...