பின் தொடர்பவர்கள்

0306 ஊணம் உடலுக்குத்தான்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0306 ஊணம் உடலுக்குத்தான்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 29 ஜூன், 2019

0306 ஊணம் உடலுக்குத்தான்!

ஊணம் எல்லாம் உடலுக்குத்தான்! பேசாலைதாஸ்
( முகநூலில் பதிவான ஒரு நேயரின் அறிவுத்துணுக்கு கதையாகிறது)

              அன்பர்களே மாற்று திறனா ளிகள் என்று நாம் இப்போது அடிக் கடி பேசிவருகின்றோம், நம் ஈழத் தமிழர் மத்தியில், பிறப்பினால் மாற்று திறனாளிகளாக பிறந்த மனிதரைவிட, போரினால் ஊனமா க்கப்பட்டு , மாற்று திறனாளிகள் நிறையப்பேர்! இந்த மாற்று திறனாளிகளை நான் சந்தித்த வேளையில், ஒன்றை மட்டும் நான் அவர்களிடம் அவதானித்தேன், 

                                                                                 அவர்கள் நம்மைப்போல சாதாரண மனிதர்களை விட வாழ்வில் விழிப்புணர்வுடன், எப்படியோ வாழவேண் டும் என்ற வைராக்கிய உணர்வுகளோடும்,  தமது ஊணத்தை, ஊக்கமு ள்ள கருவியாக்க வாழ்வில் போராடுகின்றார்கள், அவர்களைக்கண்டு நான் மனதுக்குள் வியந்ததுண்டு,  ஒவ்வொரு குறைபாட்டுக்குள்ளும், கடவுள் ஏதோ ஒன்றை ஒழித்துவைத்திருப்பது புரிகின்றது! ஆம் ஊணம் உடலுக்குத்தான், உள்ளத்துக்கு இல்லை! ஒது ஒரு பெரும் உண்மை, இந்த உண்மையை மிக எளிதாக சொல்லவருகின்றது இந்த சின்ன துணுக்கு!

                                                                                  ஒரு தெருவில் இரண்டு குதிரைகள். இணைந்தே திரியும். பார்ப்பதற்கு இரண்டும் ஒன்றுபோல் தெரியும். நெருங்கிப் பார்த்தால் ஓர் உண்மை புரியும் . இரண்டு குதிரைகளில் ஒன் றுக்குக் கண் தெரியாது . கண் தெரியாத குதிரையை அதன் உரிமை யாளர் கட்டிப்போடவில்லை . இன்னொரு குதிரையுடன் மேயவிட்டார்.  ஆனால் மிக வித்தியாசமாக ஒன்றைச் செய்தார்.

                                                                           கண் தெரிகிற குதிரையின் கழுத்தில் சிறிய மணி, ஒன்றைக் கட்டியிருந்தார் . மணிச்சத்தம் கேட்டு ஊனமுற்ற குதிரை, அடுத்ததைத் தொடரும். அந்த உரிமையாளர் செய்ததைத்தான் கடவுளும் செய்கிறார் ஒவ்வொரு குறைபாட்டுக்கும் மாற்று ஏற்பாட்டை மறக்காமல் செய்துள்ளார். அறிவோம் தெளிவோம்...!அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்

பேரழகும் பெருஞ்செல்வமும்

பேரழகும்  பெருஞ்செல்வமும்   பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...