பின் தொடர்பவர்கள்

0148 நித்திய குரு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0148 நித்திய குரு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 ஜூன், 2015

0148 நித்திய குரு

நித்திய குரு

ஒரு ஜென் குருவிடம் பல சீடர்கள் இருந்தனர். அவர் கள் தங்கள் பொருட்கள் அடிக்கடி திருடு போவதை அறிந்து,தங்களுக்குள் யாரோ திருடுகிறார்கள் என்று தெரிந்து, ஒரு நாள் திருடிய சீடனைக் கையும் கள வுமாகப் பிடித்து குருவின் முன் நிறுத்தினார்கள்.
குரு அமைதியாக இருந்ததைப் பார்த்து அவரிடம் அந்த சீடனை வெளியே அனுப்பக் கோரினர். குரு சிறிது நேரம் ஒன்றும் சொல்லாமல் இருந்துவிட்டுப் பின்னர் அவனை வெளியே அனுப்ப முடியாதெனத் திட்டவட்டமாகக் கூறினார். கோபமுற்ற சீடர்கள் அவனை வெளியே அனுப்பாவிட்டால் தாங்கள் அனைவரும் வெளியேறி விடுவோம் என்று கூறி னர். குரு அவர்களைப் பார்த்து அமைதியாகச் சொன் னார், ''நீங்கள் அனைவரும் வெளியே போவதாக இருந்தாலும் ,நான் அவனை வெளியே அனுப்ப முடியாது.''சீடர்கள், குரு தவறு செய்தவனுக்கு ஏன் அவ்வளவு பாதுகாப்புக் கொடுக்கிறார் என்று புரியாமல் விழித்தனர்.
                                                 குரு மீண்டும் அவர்களிடம் பேசினார், ''உங்கள் அனைவருக்கும் உலகில் நல் லது எது,கெட்டது எது என்பது நன்றாகத் தெரிகிறது எனவே நீங்கள் வெளிய சென்றாலும் எந்தப் பிரச் சினையும் இல்லை. ஆனால் இவனுக்கு சரியான செயல் எது,தவறான செயல் எது என்பது இன்னும் தெரியவில்லை. இவனுக்கு நான் உதவாவிட்டால் வேறு யார் உதவுவார்கள்?அவனுக்கு நல்லது எது, கெட்டது எது என்று நான் தான் சொல்லித்தர வேண் டும். எனவே அடுத்து என்ன செய்ய வேண்டும் என் பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.'' என்றார். சீடர்கள் கண்களில் கண்ணீர் வழிய குருவிடம் மன்னிப்புக் கேட்டனர்.

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...