பின் தொடர்பவர்கள்

0195 யாராவது கேட்டால் உண்மையை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0195 யாராவது கேட்டால் உண்மையை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 30 ஜூன், 2015

0195 யாராவது கேட்டால் உண்மையை சொல்லாதே!

யாராவது கேட்டால் உண்மையை சொல்லாதே! 
நமக்கு அநீதி நடக்கும் போது, அல்லது நமக்கு மற்றவர்கள் துன்பம் விளைவிக் கும் போது, நாம் ஆத்திரப்படுகின் றோம். கொந்தளிக்கின்றோம். அது இயல்பான ஒன்றுதான்! ஆனால் அதன் விளைவுகள், தர்மத்திற்கு எதிராக இருக்குமானல், நாம் அவற்றை கண்டு கவலைப்ப டாமல் இருக்கவேன்டும். நல்ல விடயங்கள் எந்த கன‌த்திலும், அதன் நன்மதிப்பை இழந்துவிடக்கூ டாது. கலீபா என்பவன் ஒரு அழகான குதிரை வைத் திருந்தான். அந்த குதிரை மீது அவனுக்கு அள‌வு கட ந்த பாசம் காரனம் அந்த குதிரை அவனோடு கூட அவன் குடும்பத்தில் இருந்துவருகின்றது. அந்த குதிரை விசேட தன்மை வாய்ந்த குதிரை ஆகும். அந்த குதிரையை வாங்குவதற்கு ரஹீம் என்ற வியா பரி ஆசைப்பட்டான். எவ்வளவு பணம் வேண்டுமான லும் அவன் கொடுக்க இருந்தான். ஆனால் கலீலுக்கு ஒரு துளி கூடவிருப்பம் இல்லை. எனவே அந்த குதிரை எப்படியோ கவெடுக்கவேண்டும் என ரஹீம் திட்டம் தீட்டினான். ஒரு நாள், ரஹீம் பாதை ஓரத்தில் விழுந்து கிடைப்பதைப்போல பசாங்கு செய்தான். அந்த வழியே குதிரையில் வந்த கலீல், அவன் மீது இரக்கப்பட்டு, என்ன நடந்தது என்று கேட்டான். அதற்கு ரஹீம் தனக்கு தலைசுற்றுவதி னால் அப்படியே வீதியில் விழுந்து கிடந்தேன் என் றான். உடனே கலீல் அவனை வைத்தியரிடம் அழை த்து செல்வதற்காக அவனை தன் குதிரையில் அமர் த்தினார். இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று எண்ணி, கலீலின் குதிரையோடு வேகமாக ஓடினான். கலீல் திகைத்துப்போனான். ஒருவாறு சமாளித்துக்கொ ண்டு, "ரஹீம் சற்று நில்லு, நான் சொல்வதை கேட்டு விட்டு, செல்" என்றான். குதிரையில் இருந்தபடியே, "என்ன" என்று கேட்டான். "இந்த குதிரை எப்படி கிடைத்தது என்று யாராவது கேட்டால் உண்மை யை சொல்லாதே! உண்மையை சொன்னால் ,பாதை ஓரம் விழுந்து கிடக்கும் பாவப்பட்டவர்களுக்கு உதவி செய்வதை மக்கள் அடியோடு நிறுத்திவிடு வார்கள்" என்று கலீல் சொன்னார். குதிரையை இழ ந்தோம் என்ற கவலையைவிட, மனிதரிடம் இருக் கும் நற்பண்பு குறைந்து விடும் என்பதில் அதிக கவ னம் செலுத்துகின்ற கலீலைப்போல நல்ல இதயங் களும் இருக்கத்தான் செய்கின்றன. அன்புடன் பேசாலைதாஸ் பேர்கன் நோர்வே

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்  ஆசைகாட்டி மக்களை தூண்டி தம் காரியங்களை சாதிக்கும் பல மக்களை நாம் நிஜவாழ்வில் சந்தித்து இருக்கின்றோம்,...