பின் தொடர்பவர்கள்

0422 கைக்கு கை மாறும் பணமே! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0422 கைக்கு கை மாறும் பணமே! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

0422 கைக்கு கை மாறும் பணமே! உன்னை கைப்பற்ற துடிக்குது மனமே!

கைக்கு கை மாறும் பணமே! உன்னை கைப்பற்ற துடிக்குது மனமே!

அன்பர்களே மனிதன் எதை எதையோவெல்லாம் கைப்ப ற்றத் துடிக்கின்றான். அதிகா ரம், ஆட்சி, பணம் பதவி, இப்படி ஏகப்பட்டவைகள்! ஹிட்லர், மகா அலெக்ஸா ண்டர் இவர்கள் எல்லாம் உல கத்தை கைப்பற்ற நினைத்தா ர்கள். எல்லாவற்றையும் கை ப்பற்ற முடியும் என்பது மனி தனின் முட்டாள்தனமான தீர்மானம். உலகையே கைப்ப ற்றிவிட்டதாக நினை த்தால்கூட,  அது பிரபஞ்சத்தின் ஒரு சிறு துளிதான். எது இருக்கி றதோ, அதில் ஒரு பகுதியையாவது கைப்பற்றலாம். ஆனால், ஒன்றும் இல்லாததை எப்படிக் கைப்பற்ற முடியும்?”  கடவுளை கைகளால் பிடிக்க முடியாது. ஆனால், அதில் கலந்து கரைந்து போகமுடியும். கடலில் கலந்துவிட்ட துளி, கடலாகவே ஆகி விடு வதைப் போல், ஒன்றுமற்றதில் கரைந்து போகையில் அந்த ஒன்றுமற்றதாகவே  நாம்  மாறி, எல்லை அற்றதாகி விடுகிறோம். பிரபஞ்சத்தில் நாம்  பார்க்கும்  நட்சத்திரங்கள், சூரியக் குடும்ப ங்கள் எல்லாவற்றையும்விட, அவற்றைத் தாங்கிப் பிடித்திரு க்கும் ‘ஒன்றுமற்ற’ வெறுமைதான் மிகமிக அதிகம். ‘எது வந்த தோ, அது ஒன்றுமற்றதில் இருந்து வந்தது. எது மறைகிறதோ, அது அதே ஒன்றமற்றதில் கலந்து காணாமற் போகிறது’. இது ஏதோ தத்துவம் அல்ல; விஞ்ஞானத்தால் அழுத்தமாக நிருபிக்க ப்பட்டிருக்கும் உண்மை. இருப்பது எவ்வளவு பிரம்மாண்டமாக இருந்தாலும், அதை அளந்து பார்க்கமுடியும். ஒன்றுமில்லாததை எப்படி அளக்கமுடியும்?  வாழ்க்கையும் அப்படித்தான். எட்டிப் பிடிப்பதற்கு அங்கே ஒன்றும் இல்லை. படைத்தலுக்கு எது மூல மான கடவுள் தன்மை அது நமக்குள் இருந்துகொண்டு, பல அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. படைக்கப்பட்ட எதை வேண்டுமானாலும் கைப்பற்ற முடியும், ஆனால் படைத்த லின் மூலத்தை எப்படி கைப்பற்றுவது? வாழ்க்கையை முழுமை யாக உணர, அதனுடன் இரண்டறக் கலப்பதுதான் ஒரே வழி! ஆம் கடவுள், உள்கட, உன் உள்ளத்தை கரைக்க, கடக்க முயற்சி செய், கடவுள் தன்மையாகி விடுவோம். பசாசு ஆதி மனிதன், ஆதாம் ஏவாளிடம், பழத்தை சாப்பிடும் மறுகனமே கடவுளைப்போல மாறுவீர்கள் என்று, சாத்தான் சொன்னது உண்மையே, எம்மால் கடவுளைப்போல ஆகலாம், ஆனால் பழத்தை சாப்பிடுவதால் அல்ல மாறாக இறை தன்மையில் கரைந்து கலப்பதின் மூலம் கடவுளாகலாம்! ஆனால் கைப்பற்ற துடிப்பது முட்டாள் தனம், ஒரு முறை ஒரு சீடன் போதகரிடம் கேட்டான்,  கடவுளைக் கைப்ப ற்ற முடியுமா?  “ஒன்றுமில்லாததைக் கைப்பற்ற முடியுமா?” என்று பதிலுக்குக் கேட்டார் குரு. “அட, அப்படியென்றால், கடவுள் என்பது ஒன்றுமில்லையா?” என்று அலட்சியமாகக் கேட்டான் சீடன். “இதோ கைப்பற்றிவிட்டேன்” என்று கையை மூடிக் காட்டி னான். குரு சிரித்தார். “உன்னால் மட்டுமல்ல, யாராலும் கைப்ப ற்ற முடியாது!” என்று சொல்லி மெல்ல நடந்தார். அன்புடன் பேசாலைதாஸ்

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...