பின் தொடர்பவர்கள்

0189 நான்கவது மனிதன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0189 நான்கவது மனிதன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 29 ஜூன், 2015

0189 நான்கவது மனிதன்

நான்கவது மனிதன்
ஒரு நாள் ஒரு பெரியவர் ஓர் இளைஞ ரைப் பார்த்து, தம்பி, நீ ஒரு ஆளா, இர ண்டு ஆளா நீ எத் தனை ஆளுப்பா? என்று கேட் டார். இளைஞருக்கு ஒன்றும் புரி யவில்லை. ஐயா, நான் ஓர் ஆள் தான் என்றார். இல்லை தம்பி, இப்படி த்தான் நாம் எல்லாரும் நினைத்துக்கொ ண்டி ருக்கிறோம், ஆனால், உண்மை யில் நம் ஒவ்வொரு வருக்குள்ளும் மூன்று பேர் இருக்கிறோம் என்றார். குழம்பிப் போன அந்த இளைஞர், அது எப்படி என்று கேட்டார். நாம் நம்மைப் பற்றி நினைத்துக்கொண்டி ருப்பது ஒரு விதம். நம்மைப் பற்றி மற்றவர் நினைத் துக்கொண்டிருப்பது இரண்டாவது விதம். நம்மைப் பற்றி நமக்கும் தெரியாமல், அடுத்தவருக்கும் தெரி யாமல் இருப்பது மூன்றாவது விதம் என்று விளக்கினார் பெரிய வர். இதை இன்னும் சற்று விளக்கமாகச் சொல்ல வேண்டுமெ னில், தம்பி, நான் என்னைப் பற்றி எப்படி நினைத்துக்கொண்டி ருக்கிறேனோ அது ஒரு மனிதர். நீங்கள் என்னைப் பற்றி என்ன நினைக் கின்றீர்களோ அது இரண்டாவது மனிதர். எனக்கும் தெரியாமல், உங்களுக்கும் தெரியாமல் எனக்கு ள்ளே ஒரு மனிதர் இருக்கிறார். அது மூன்றாவது மனிதர். ஆக, ஒவ்வொரு மனிதருக்குள்ளும் மூன்று மனிதர்கள் உள்ளனர் என்றார் அந்தப் பெரியவர். இதில் இன்னொரு மனிதரும் உள்ளார். அந்த நான் காவது மனிதர் யாரெனில், என்னைப் பற்றி எனக் கும் தெரியும், அடுத்தவருக்கும் தெரியும் என்பது.
அன்புடன் பேசாலைதாஸ் பேர்கன் நோர்வே

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...