பின் தொடர்பவர்கள்

0246 நமது முதல் எதிரி நமக்கு வரும் கோபம்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0246 நமது முதல் எதிரி நமக்கு வரும் கோபம்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 2 செப்டம்பர், 2015

0246 நமது முதல் எதிரி நமக்கு வரும் கோபம்!

நமது முதல் எதிரி நமக்கு வரும் கோபம்! 

அன்பர்களே நமது முதல் எதிரி நமக்கு வரும் கோபம்! அந்த கோபத்தில் வேண்டாத செயல்களைச்செய்துவிட்டு, மற்றவர்களையும் கோபப்டுத்தி அல்லது புண்படுத்திவிடுகின்றோம். சிலவேளைகளில் ந‌மக்கு வரும் கோபம் நியாயமாக இருக்கக்கூடும் அப்போதெல்லாம் நாம் கோபத்திற்கு காரனமானவரை கடிந்து கொள்ளலாம், கடிந்து கொள்தலும், கோபப்படுதலும் வெவ்வேறு அம்சங்கள் ஆனால் நாம் அதனை கண்டுபிடிக்காமல் எல்லாவற்றையும் கோபக்கண்கொண்டு பார்க்கின்றோம். இயேசு பரிசேயர்களை கடிந்து கொன்டார் அவர்களின் செயல் இயேசுவுக்கு கோபத்தை ஊட்டியது. ஆனல் அவர்களை கோபத்தோடு வெறுக்கவில்லை. நாம் யாரயும் எதையும் வெறுக்க ஒதுக்க எமக்கு அதிகாரம் இல்லை இதை விலக்குவது இந்த சின்ன கதை.
ஒருநாள் ஒரு மனிதர் ரின்சாய் என்கின்ற துறவியைக் காண வந்தார்.  வரும் வழியில் அந்த மனிதை எரிச்சலூட்டும் விதத்தில் ஒரு நிகழ்வு நடந்தது. எனவே கோபத்துடனே அங்கு வந்தார் அவர். வந்த வேகத்தில் அறைக் கதலை வேகமாய்த் தள்ளி, தன்னுடைய காலணிகளைக் கழற்றி சுவற்றில் எறிந்துவிட்டு துறவி ரின்சாய் அவர்கள் முன்வந்து மண்டியிட்டு வணக்கம் செலுத்தினார். அப்போது ரின்சாய் அவர்கள், நான் ஒருபோதும் உன்னைச் சீடனாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். இங்கு வரும்போது ஏன் நீ இந்தக் கதவைத்  தள்ளிவிட்டு உன் காலணிகளை உதறி எறிந்தாய் என்று கேட்டார். முதலில் உன் காலணிகளிடமும், கதவிடமும் மன்னிப்புக் கேள். பின்பு இங்கு வா. நான் உன்னை அனுமதிக்கிறேன் என்றார் ரின்சாய். அந்த மனிதருக்கு ஒரே குழப்பம். இவ்வளவு பெரிய துறவி பகுத்தறிவுக்குச் சிறிதும் தொடர்பு இல்லாத ஒரு செயலைச் செய்யக் கட்டாயப்படுத்துகிறாரே என்று நினைத்தார். பின்பு துறவியிடம், ஐயா, நான் எதற்கு என் காலணிகளிடமும், கதவிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும், முதலில் அவற்றுக்கு உயிர் இருக்கிறதா, அப்படி நான் கேட்டாலும் அவை புரிந்துகொள்ளத்தான் போகின்றனவா என்று எதிர் கேள்வி கேட்டார். அதற்கு ரின்சாய் அவர்கள் உண்மைதான். ஆனால் நீ உனது கோபத்தை அந்த உயிரற்ற பொருள்களிடம்தானே காண்பித்தாய், அப்போது அவை உயிரற்றவை என உனக்குத் தெரியவில்லையா, அதனால் நீ கட்டாயம் மன்னிப்புக் கேட்டுத்தான் ஆக வேண்டும் என்றார். அந்த மனிதரும் தனது தவறை உணர்ந்தார். என்ன அன்பர்களே கதையின் உள்ளர்த்தம் புரிந்ததா? கேள்விக்கணையோடு உங்கள் அன்பின் பேசாலைதாஸ்

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...