பின் தொடர்பவர்கள்

0475 அன்புக்கு வாக்குவாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0475 அன்புக்கு வாக்குவாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 4 ஜனவரி, 2018

0475 அன்புக்கு வாக்குவாதம் தேவை இல்லை

அன்புக்கு வாக்குவாதம் தேவை இல்லை
அன்பர்களே நமக்குள் இருக்கும் அன்பையும், நமக்குள் இருக்கும் உண்மையையும், நிருபிக்க ஒருபோதும் தர்க்கத்தில் சண்டையில் ஈடுபடாதீர்கள். அப்படி ஈடுபட்டால் உங்களால் அதனை செய்யமுடியாமல் போய்விடும். பொய்களுக்கும் தவறுக்குத்தான் ஆதரவாக நிறைய தர்க்கங்கள் இருக்கும். பொய்யை மெய் என்றும், தவறை சரி என்றும் நிருபிக்க தர்க்கங்கள் தேவைப்படும். தர்க்கத்தால் ஒன்றை எண்பிக்க கடவுளால் கூட முடியாமல் போய்விடும்

சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே மிகப் பெரிய சுவர் ஒன்று இருந்ததாம். பல நூறாண்டுகள் ஆகியும் அந்தச் சுவர் பழுதுபார்க்கப்படாமல் இருந்ததால் இறைவன் சங்கடமாக உணர்ந்தாராம். அந்தச் சுவரை சாத்தான்தான் பழுது பார்க்க வேண்டும் என்று இறைவன் எண்ணினாராம். 

ஆனால் சாத்தானோ, கடவுள்தான் தடுப்புச் சுவரைப் பழுதுபார்க்க வேண்டுமென்று விரும்பியது. இருவருக்கும் பெரும் தகராறு ஏற்பட்டது.

கடவுளால் சாத்தானை வழிக்குக் கொண்டுவர முடியவில்லை. கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார்.

“எனது பேச்சைக் கேட்காவிட்டால், நான் உன்னை நீதிமன்றத்துக்கு இழுப்பேன்” என்று அச்சுறுத்தினார்.

சாத்தானோ அஞ்சவேயில்லை. கலகலவென்று சிரித்தான். “சரிதான். உங்களுக்கு ஆதரவாக வாதிட வழக்கறிஞருக்கு எங்கே போவீர்கள்? அவர்கள் எல்லாம் என் பக்கத்தில்  அல்லவா இருக்கிறார்கள்” என்றான். ஆம் அன்பர்களே நமக்குள் இருக்கும் பாசத்தை நேசத்தை  அன்பை சண்டை பிடிப்பதாலோ, தர்க்கம் செய்து ,வாய் வார்த்தையாயில் ஈடுபடுவதால் அன்பை நிருபிக்கமுடியாது அது தானாக உணரப்படவேண்டியவிடயம், சொன்னாலும் புரியாதது, சொல்லாமல் சொல்லவும் முடியாதது.. நீ நல்லவன் என்பதை நிருபிக்க முயற்ச்சி செய்யாதே அப்படி நீ செய்தால் உன் வழி முட்டாள்தனமானது. கடவுளின் இடத்தில் தர்க்கத்திற்கு வேலையே கிடையாது. நேசத்திற்கும் அதுதான். தியானம் என்பது அடுத்தவரைப் பேசி சம்மதிக்க வைப்பதல்ல. ஒருவரைச் சம்மதிக்க வைக்கும் முயற்சியில் நீ இறங்கினால், நீ ஏற்கனவே தவறான திசையில் நகர்ந்துகொண்டிருக்கிறாய் என்றுதான் பொருள்.,,, அன்புடன் பேசாலைதாஸ்

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...